Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news யோக தீபம் - அருளுரை பிராண யோகா பிராண யோகா
முதல் பக்கம் » யோக தீபம்
மனம் - உடல் - உயிர்ப்பு
எழுத்தின் அளவு:
மனம் - உடல் - உயிர்ப்பு

பதிவு செய்த நாள்

18 ஏப்
2015
03:04

மனித வாழ்க்கை என்பது மனிதனாகப் பிறந்த பிறகு அவனுக்கு ஏற்படுகின்றது. அதற்கு முன்பாக அது எவ்வாறு தோன்ற முடியும்? மனிதனாகப் பி றந்த பிறகு தானே ஒரு ஞான வாழ்க்கை என்பது ஏற்படும். அவன் பிறப்பதற்கு முன்னால் வேறு ஒரு வாழ்க்கையிலே அவன் இருந்திருக் கிறான்.  அந்த வாழ்க்கையிலே அவன் தனக்காக என்னென்ன செய்திருக்கிறான் என்பது அந்த சூட்சம வடிவிலே இருக்கின்ற அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஆகவே அந்த இரு வாழ்க்கை. இக வாழ்க்கை,   பர வாழ்க்கை என்பது போல. அந்த வாழ்க்கையினை    பர வாழ்க்கை என்று சொல்ல முடியாது. ஒரு  பிறவி முடிந்து அடுத்த பிறவி எடுக்கும் முன்பாக காத்திருக்கும் வாழ்க்கை. இக வாழ்க்கையில் நாம் செவ்வனே செயல்களைச் செய்திருந்தால் வரு கின்ற பிறப்பும் மற்றும் அதற்கு பிறகு வர இருக்கின்ற பிறப்பும்,ஒருவேளை பிறப்பற்ற நிலையும் நமக்கு ஏற்படும். மனித வாழ்க்கை மற்றும் மனிதப்  பிறப்பு மற்ற எல்லாப் பிறப்புகளில் இருந்தும் வித்தியாசமானதாக இருக்கின்றது. அத்தனை அறிவு பூர்வமான விஷயங்களைக் கொண்டுள்ள இந்த  உடம்பினைக் கொண்டு இந்த உலக வாழ்க்கை நடைபெறு கின்றது.

இந்த உடம்பிலே இருக்கக்கூடிய எத்தனையோ விதமான உடற்கருவிகள். மூலப்பொருட்கள் மற்றும் அந்த மூலப்பொருட்களால் ஆன அந்த கரு விகளின் செயல் பாடுகள். அவற்றையெல்லாம் விட அந்த செயல் பாடுகளுக்கு நடுவே அந்த உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போது அந்த உயிரு க்கு, புருடனுக்கு எண்ணங்கள் வருகின்றன. இவற்றையெல்லாம் ஏதோ நாம் புலன்கள் வழியாக வருகின்றது என்று நினைத்துக் கொண்டிருக் கிறோம்.  நம்முடைய புலன்கள் நம் வாழ்க்கையினை சாட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறது அவ்வளவே.

ஐந்து பருப்பொருட்களும் இணைந்து உடம்பு உருவாகின்ற போது அதில் மனம், எண்ணம், சித்தம், போன்றவை அதில் உருவாகும். ஆக உருவற்ற  ஒன்று. பொருளற்ற ஒன்று, நிலையற்ற ஒன்று. பரிமாணமற்ற ஒன்று எவ்வாறு பருப்பொருட்களால் உருவாகும்? என்று நீங்கள் கேட்கலாம்.

ஒரு பொருளை நீங்கள் வெளியே எடுத்து வைக்கிறீர்கள். அந்த பொருளிலே நீங்கள் தண்ணீரை ஊற்றுகிறீர்கள். அந்த தண்ணீர் காணாமல் ÷ பாகின்றது. காரணம் அப்பொருள் சூடாயிருக்கிறது. அதனைச்சூடு அல்லது உஷ்ணம் தாக்கியிருக்கிறது.

சில பொருட்களில் நீங்கள் தண்ணீரை ஊற்றுகிறீர்கள். அதில் இருந்து புகை வருகின்றது. அப்பொருள் தீப்பற்றியிருக்கிறது. நெருப்பில் ஒரு பொரு ளை இடுகிறீர்கள் அது எரிகிறது. அப்பொருள் காய்ந்திருக்கிறது. ஆக அந்த பொருட்களுக்கு எத்தனையோ தன்மைகள் இயல்புடையதாய் இரு க்கின்றது. பருப்பொருட்களின் பரமாணுக்களும் இணைந்து மனம் என்ற ஒன்று உருவாகின்றது. அந்த மனம் ஒன்று உருவாகினால் தான் நீங்கள்  அதில் பல விஷயங்களை இட்டு நிரப்புகிறீர்கள். அந்த விஷயங்களிற்கு ஏற்றாற்போலத்தான் ஆசை, கோபம், மோகம் என்ற எத்தனையோ குணவி யல்புகள் வருகின்றன. அவையெல்லாம் உங்களைத் தங்கள் இஷ்டம் போல ஆட்டுவிக்கின்றன. அதனால் நீங்கள் பாவ, புண்ணியங் களுக்கு  ஆளாகிறீர்கள். ஆகவே ஒவ்வொரு அணுவும் மற்றும் செயலும் நம்மை உருவாக்குகிறது. இது விந்தையாக உள்ளதே என்று நீங்கள் நினைக்கலாம்.  ஆனால் இதில் விந்தை என்பதே இல்லை.

மல்லிகையின் மணம் அது செடியாக இருக்கும்போது வருவதில்லை. மொட்டு மலர்கின்றபோது எங்கிருந்தோ மணம் அதனுள் வந்து சேர்ந்து  விடுகிறது. அந்த மணம் எவ்வாறு அந்த மலருக்கு வந்ததோ அதுபோல அந்த மனிதனுக்கு குணம் என்ற பண்பு வந்தமைகிறது. ஆக அந்த மனமும்,  மனத்தில் உள்ள குணமும் அது இவனுடைய செயல்பாடுகளைத் தீர்மானிப்பதற்குக் கருவியாக அமைகின்றது. அதற்குப் பின்னால்தான் தன்னுடைய  செயல்பாடுகளை அவன் புலன்கள் மூலமாக தூதனுப்பிப் புலன்களை தன்னுடைய பணியாட்களாக வைத்துக் கொண்டு பிறகு அந்தப் புலன்களாலயே  இவன் அடிமைப்படுத்தப்பட்டு புலன் வேட்கைக்கு இவன் நிரந்தர அடிமையாகி பின்பு அதைப் பல்வேறு பிறவிகளுக்கு அதைத் தொடர்கின்ற  நிலைக்கு ஆளாகின்றான். எவ்வாறு மனம் உருவாகிறது என்பது மட்டுமல்ல. ஒரு உயிர் எவ்வாறு உருவாகின்றது. அவை உருவாவதற்கு எவை ö யல்லாம் காரணமாக அமைகின்றது. ஒரு பிறவிக்கு முன்னால் நேருகின்ற மரணம் அதற்குக் காரணமாகிறது. (சிரிப்பு) அது எவற்றையெல்லாம்  தீர்மானிக்கிறது. இது போன்ற புதினங்கள் எழுகின்றது. இந்த புதினங்கள் விடை காண முடியாதவையாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம்  படைக்கப்படக் காரணமான

நம்முடைய பருப் பொருட்களுக்குள்ளே அடங்கியிருக்கிறது. இப்போது தாதுக்கள் ஏழு என்பதை பற்றிப் பார்ப்போம். தாதுக்கள் என்று சொன்னால்  இங்கே உங்களுடைய உடல் உருவாவதற்காக ஏற்பட்டுள்ள அடிப்படைப் பொருட்களாகும். அவையும் பஞ்ச பருப் பொருட்களில் இருந்துதான்  வந்தன.  அந்தப் பொருட்கள் எவ்வாறு உண்டாகின்றன என்பது பிறப்பில் இருந்து வரக்கூடியவை.

அவை முறையே
1) இரசம்
2) இரத்தம்
3) மாமிசம்
4) மேதஸ்
5) அஸ்தி
6) மஜ்ஜை
7) சுக்கிலம் அல்லது சுரோணிதம்

ஆக  ஆண் , பெண் கரு கலக்கின்ற போதுதான் மனிதனை உருவாக்குகின்ற அடிப்படைப் பொருட்களான இந்த தாதுக்களை ஏற்படுத்துகின்றது.  முற்சொன்ன ஏழினைத்தமிழிலே சொன்னால் இரசம், இரத்தம், செவி, ஊன், கொழுப்பு. (என்பு-எலும்பு),  மூளை, வெண்ணீர். இதில் வெண்ணீர்  என்பது சுக்கிலம் அல்லது சுரோணிதம். இது குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு ஆண் அல்லது பெண்ணிற்கு அவர்களுடைய பருவ காலத்திலே உடம்பி லே விளைவது. ஆக மேலும், கீழும் விளைகின்ற இந்தப் பொருட்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வருகின்றது. ஆகவே பஞ்ச ÷ காசங்கள் என்ன என்பதை இப்போது நாம் பார்க்கப்போகின்றோம். உணவுடம்பு, காற்று அல்லது பிராண உடம்பு, மன உடம்பு, அறிவு உடம்பு, இன்ப  உடம்பு என்று முறையே அவை அழைக்கப்படும். இவற்றின் வட சொற்களில்
 
அன்னமய கோசம்
பிராணமய கோசம்
மனோன்மய கோசம்
விஞ்ஞானமய கோசம்
ஆனந்தமய கோசம்

என்று அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு கோசமும் நமக்கு ஒவ்வொரு உறைகள் போல அமைந்திருக்கிறது. ஒரு தலையணைக்கு உறை இருப்பது  போல இந்த உடம்பிற்கு ஐந்து உறைகள் மேற்சொன்னவாறு உள்ளன. ஆகவே இந்த பஞ்ச கோசத்தின் இயல்புகள் என்னவென்று பார்க்கின்றபோது,  முதலில் சொன்ன அந்த ஏழு தாதுக்களால் உருவாகின்றது அன்னமய கோசம். அன்ன சாரத்தினால் அதாவது அன்னம் என்று நாம் இங்கே குறிப்பி டுவது நாம் சாப்பிடக்கூடிய உணவில் இருந்து கிடைக்கும் சாரம். பிராணனும். பலமும் அடங்கியிருப்பது பிராணமய கோசம். அந்த பிராண  பலத்தினால் வந்து தோன்றியிருப்பது மனோன்மய கோசம். மனதில் அந்த வித்தை என்ற விஞ்ஞானத்தினால் தோன்றுவது தான் விஞ்ஞான மய ÷ காசம். அந்த விஞ்ஞானத்தினால் தோன்றியிருப்பது தான் ஆனந்த மய கோசம். ஐந்து கோசங்களும் ஒன்றிலிருந்து ஒன்று மற்றும் ஒன்றை ஒன்று எனத்  தழுவியிருக்கின்றது. இன்னும் சுருக்கமாகக் கூறப்போனால் உணவுடலை மூச்சு உடல் இயக்குகிறது. மூச்சு உடலை உணர்வு உடல் இயக்குகிறது.  உணர்வு உடலை அறிவு உடல் இயக்குகிறது. அறிவு உடலை அதற்கு மேலிருக்கின்ற இம்மை இன்ப உடல் இயக்குகிறது. இம்மை இன்ப உடலை  அதற்கு மேலிருக்கின்ற மறுமை இன்ப உடல் இயக்குகின்றது. மறுமை இன்ப உடலை அதற்கு மேலிருக்கின்ற பேரின்ப உடல் இயக்குகிறது. அந்த ÷ பரின்ப உடல் எல்லா உடலையும் இயக்குகின்ற திருவருள். அதுதான் எல்லா உயிர்களையும் இயக்குகின்ற அருள் வடிவாகும்.

அன்னமய கோசம் :
தாய், தந்தை அருந்தும் உணவாதிகளால், ஆண், பெண் இன்ப உறவுகளினால். இன்ப உணர்வுச் சுரப்பிகளான சுக்கில மற்றும் சு÷ ராணித என்ற வெண்ணீர் கலப்பினால் அதன் காரணமாகத் தாயின் உதிரத்தில் உயிர்தரித்து, விதை மண்ணிலே இடப்படுவது போல தாயின் கர்ப் பமானது உயிர்தரிக்கின்ற நிலமாக அதற்கு உள்ளது. அக்குழந்தைக்கு உணவாதிகள் அன்னம். பால் போன்றவற்றை அளித்து நாள்தோறும் அதன்  மூலம் தூலம் வளர்கின்றது. அதற்கு 16 கலைகள் உள்ளது. அது வேறு விஷயம் தூல சாகர மாறுபாடுகளை ஒவ்வொரு வினாடியும் அந்தக் குழந்தை  அடைந்து விடுகின்றது. அதற்கு ஏற்றாற்போல் நலிதல், நசித்தல் போன்ற விகாரங்களுக்கு ஏற்ப சப்த தாதுமயமாகிறது. அவை முன்னால் சொல்லப்  பட்டுள்ளன.

அதுவே அன்னமயகோசம் என்று அழைக்கப் படுகின்றது. இச்சாகரம் அதனுடைய பாண்டம். அதன் கலம் முடிவு என்ற மரணத்தை பெற்றது. அதன்  முடிவு பூமி என்ற பிருத்வியில் ஒடுங்குகிறது. இவ்வாறு அன்னமய கோசம் மண்ணிலே ஒடுங்குகின்றது.

பிராணமய கோசம்: அடுத்து பிராணமய கோசம் என்ற காற்றுடம்பு அல்லது வளி உடம்பு. அவ்வாறு சொல்கின்ற அந்த வளி உடம்பு வாக்கு,  கை,கால்கள், பாயு என்ற குதம், மலவாய் ,உபஸ்தம் என்ற கருவாய் எனப்படும் பஞ்சேந்திரியங்களை உடையதாகும். பஞ்சவாயுக்களான பிராணண்,  அபானன், சமானன், உதானன், வியானன் என்பவைகளும் அதோடு நாகன், கிருகரன், கூர்மன், தனஞ்செயன், தேவதத்தன்  என்ற ஐந்து உப  வாயுக்களும் கூடி இந்த அன்னமய கோசத்திலே உலவுகின்றபோது பிராணமய கோசமாகி. இறைச் சேர்க்கைகளாகி. பரமாத்மாவின் உள்ள  சத்,சித்,  ஆனந்தம் என்ற குண இயல்புகளின் காரணமாகி மனிதன் பிராணண் உடையவனாகின்றான். அத்துடன் இருவகை நான்-ஐ அது கொள்கிறது. இந்த  இரு வகை நான் என்பதை பற்றிய ஒரு தொகுப்பினை திருமூலர் அவர்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றார். அவரே ஒரு நானாக இருந்து ÷ வறொரு நானாக மாறியவர் தான். ஆகவே ஒரு வகை நான் என்பது பசி,சாமர்த்தியம், பலம் ஆசை, வீரம், தீரம் கொண்டவனாகியும் இரண்டாவது  வகை நான் என்பது வாயாடி, ஊமை, குருடன், முடவன் போன்றவை உடையவனாகவும் கொண்டு அவை பிராணமய கோசத்தின் குண ங்களாகின்றன. இக்குணங்கள் மனிதனுடைய உடலில் நக சிக பரியந்தம் என்ற உச்சி முதல் உள்ளங்கால் வரை எங்கும் அந்தரங்கமாய் வியாபித்து  (வெளியிலே தெரியாமல்) கண். காது. மூக்கு முதலான இந்திரியங்களுக்கு அவை பலத்தை அளிக்கிறது. நல்ல அல்லது தீய என்ற இருவழிகளில்  அவனை நடத்துகின்றது.

மனோன்மய கோசம் : இந்த உடல், மனம் சார்ந்த பஞ்சேந்திரியங்களும் சேர்ந்து அச்சேர்க்கையால் சப்தம், விஷயம், தீர்மானித்தல். விருப்பு, முனை ப்பு என்ற ஆகாச தத்துவ ஓசைகளைக் கேட்டும் மனோன்மய கோசமாகின்றது. இந்த மனோன்மய கோசம் ஆன்மாவுடன் சேர்க்கையினை உண்டு  செய்கிறது. பிராணமய கோசத்திற்கு வேறாக இருந்து கொண்டு இருப்பதால் காமம், குரோதம், நான், எனது என்ற விகாரங்களை உடையதாக இரு க்கின்றது. மனதிற்கும், பிராணனிற்கும் பெரிய தொடர்பு  ஒன்றுமில்லை. ஆனால் பிராணனை நன்றாகப் புரிந்து கொண்டால் மனம் நன்றாக இருக்கும்.

விஞ்ஞானமய கோசம் என்ற அறிவுடம்பு: புத்தி, ஐம்பொறிகளுடன் சேர்ந்து அந்த அன்னமய, பிராணமய, மனோன்மய கோசங்களின் கூட்டு  கொண்டு அகக்கருவிகளான அந்தக்கரணங்கள் என்ற மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இவைகளின் விருத்திகள் ஏற்படும் சமயம் அது விஞ்ஞான  மய கோசமாகிறது.

புலன்களிலேயே கண்களின் செயல்பாடு மிகவும் ஆழமானது. வேகமானது. விருத்திகளை அதிகமாக உடையது. ஒரு காட்சியைப் பார்த்தவுடன் அது  படம் பிடித்து விடுகின்றது. அவை நினைவுகளில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.  இதை கட்புலன் என்றும் கூறுவார்கள். மற்ற புலன்களை எல்லாம்  விட இந்தக் கண்ணால் அதிக விஷயங்களை கிரகிக்க முடியும். கேட்பது, பேசுவது என்பதை விடப் பார்ப்பது என்பது எவ்வளவு அழகானது.  இறைவனின் காட்சி. குருநாதர் காட்சி. அழகிய இயற்கைக் காட்சி இவற்றை எல்லாம் இந்தக் கண்ணிண் வழியாகக் பதிந்து மூளைக்கு  உணர்த்துகின்றது. அகக்கண் என்பது  வேறு. ஏற்கனவே பார்த்த காட்சிகள் என்றால் மூளையில் நினைவுபடுத்தி சித்தத்தில் அது தொடர்பான  சம்ஸ்காரங் களை நினைவுபடுத்தி இவனை ரசிக்க, நினைக்க வைக்கிறது. அது தொடர்பான நினைவலைகளை இவனுள்ளே ஏற்படுத்துகிறது.

தேவைப்படும்போது ஐம்பொறிகளுடன் இந்த விஞ்ஞான உடம்பு கூட்டுச் சேர்ந்து அந்த கோசங்களைப் பயன்படுத்தி செயல்படுகின்றது.  எவ்வாறாயினும் ஒரு விஷயத்தை அறிந்து விட அது முனைப்பு காட்டுகிறது. காட்சியாக இருந்தாலும். ஒலியாக இருந்தாலும், வாசனையாக இருந் தாலும் எப்படியாவது அறிந்து விட முனைப்பு காட்டுகின்றது.

நான் பக்தன், நான் புத்தியுடையவன், நான் செயல் வீரன் என்ற குண இயல்புகள்  எல்லாம் இந்த கோசத்தின் அடிப்படை.  சிறந்தவை எல்லாம்  என்னில் உள்ளது என்று தனக்குத் தானே எண்ணிக்கொண்டு செயல்படும் பாங்கும் உடையது.

ஆனந்தமய கோசம்: அடுத்தபடியாக ஆனந்தமய கோசம் என்கின்ற அந்த இன்ப உடம்பு. மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, மேல், கீழ் என எல்லா  இடத்திலும் ஒரு மகிழ்ச்சி இருக்கின்றது என்று சொன்னால் ஆனந்தமய கோசம் அதை அப்படியே ஈர்த்து விடும். இந்த இடத்தில்தான் என்றில்லாமல்  இன்பத்தின் வாசனையினை நுகர்ந்தால் கூட அதை அனுபவிக்கத் துவங்கும். எந்த வகையான இன்பம் என்று அதற்கு தெரிவிக்கப்பட்டதை நமக்கு  உணர்த்தி நம்மில் செயல்பட வைக்கிறது. நினைவுகளோடு கூடிய இன்பத்தை இவன் புரிந்து கொண்டு மற்ற புலன் அடிப்பøரிளில் எது ஒன்று  குறைவாகினும் அந்த மகிழ்ச்சியினை அந்தரங்கமாய் இவன் நினைத்தாலே போதும். அவன் ஆனந்தம் அடைந்து விடுவான். மேற்சொன்ன நான்கு  கோசங்களும் அறியாமை, அஞ்ஞானத்துடன் இணைந்த நுட்பமான, அதாவது ஒரு ஆல விதைக்குள் மிகப்பெரிய மரம் அடங்கியிருப்பதைப் போல  கால, ஞான, பரிமாண சுகத்திலே திளைப்பதே ஆனந்த மய கோசம் ஆகும்.

பிரம்மாண்டமான மரத்தின் பரிமாணம் அதன் விதையில் வளர்ச்சியாய் அடங்கியிருப்பதைப் போல, இன்பமானது சிறிய பரிமாணத்தில் அட ங்கியிருந்தாலும் அதில் ஆனந்தம் அடைந்து திளைத்துவிடுவது. அனேக சுகங்களைக் கொண்டு பெருகி விடுகிறது ஆனந்தமய கோசம்.

ஆனந்தம் என்று சொன்னவுடன் ஆசையினால் வந்த ஆனந்தம் வேறு, பிரியத்தினால் வந்த ஆனந்தம் வேறு. ஆசை என்று சொன்னவுடனே அது  நிறைவேறாதவரை அந்த எண்ணம் சித்தம் என்ற ஆழ்மனதை விட்டு நீங்காது. அமைதியுறாது.

பிரியம் என்பது எண்ணத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஆசையுடன் உறவு கொள்ளாதது. இது அஞ்ஞானத்தினின்றும் விடுபட்டு ஞானக்கலப் புக் கொண்டது தான் பிரியம். இறைவன் மேல் வைத்திருப்பதே உன்னதமான பிரியம். பிரியமானது மோதம் என்றும் பிரமோதம் என்றும் அழைக்கப்  படுகின்றது. பொருளோ அல்லது விஷயமோ அதைக் கண்டதும் உண்டாவது ஆனந்தம். மோதம் என்பது விருப்பமானது கிட்டியவுடன்  உண்டாகக்கூடிய ஆனந்தம். பிரமோதம் என்பது தனக்குக் கிட்டியதை அனுபவித்து அடைந்த, உணர்ந்த அனுபவம் ஆகும்.

ஆத்மா சத்சித் ஆனந்தத்துடன் சேர்க்கைக் கொள்வதால் ஆனந்தம் தோன்றுகிறது. ஆகவே ஆனந்தமய கோசம் பராமத்மா அம்சத்துடன் சேர்க்கை  பெறுகிறது. பேரானந்தத்தை அனுபவிக்ககூடிய தன்மை ஆனந்தமய கோசத்தில் உள்ளது. மற்ற கோசங்களில் அவை இல்லை.  நம் அனைவருக்கும் அந்த ஐந்து கோசங்களே உள்ளன. அந்த கோசங்களில் தேவையானவற்றை இட்டு விட்டால் அந்த தகுதி அதற்கு வந்து விடும்.  இதன் நிகழ்வு தானாக நிகழ்கிறது.

பருப்பொருட்களில் இருந்து செயல்பாடு துவங்கி பஞ்சகோசம் வரை பலப்பல செயல்பாடுகள் நிகழ்கிறது. தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு செய ல்பாடுகளும் இச்சை அனிச்சை செயல்களுக்கு ஏற்றதாக இருக்கும். மனிதனுடைய பஞ்ச கோச நிறைவுகளின்படி அந்தந்த மனிதர்களின் மனம் இரு க்கும். அந்த அளவு எவ்வாறு இவனுக்கு இருக்கும், இவனுக்கு உடல் எப்படி இருக்கும், அறிவு எப்படி இருக்கும், என்றால் கடந்த பிறவியினுடைய  அமைப்பு அவனைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறது. பூர்வ புண்ணியங்களிற்கு ஏற்ப அந்தப் பஞ்ச கோசங்களில் நிறைவோ அல்லது குறைவோ  பெற்றிருக்கிறோம்.

பஞ்ச கோசங்களின் செயல்பாட்டை மாற்றியமைக்கும் அளவு நமது புத்தி வேலை செய்கிறது. ஆனந்த மய கோசத்தை விட மனிதன் தன் புத்தியின்  மூலம் ஆனந்தம் இல்லாமல் செய்ய முடியும். இறைவன் மற்றும் பேரானந்தம் என்ற எண்ணம் இல்லாவிட்டால், அது செயல்படாவிட்டாலும்    அவனால் எதையும் நினைக்க இயலாமல் போகிறது. பிராண மயம், மனோன்மயம், விஞ்ஞான மயம் என்ற மூன்று கோசங்களினாலும் சூட்சம  நுண்ணுடல் நிலைத்து நிற்கிறது. சூட்சம உடல் என்பது இந்த மூன்று கோசங்களிற்குள்ளும் நிறைந்து நிற்கிறது. மூன்று கோசங்களையும் நாம் சரியாகப்  பேணுவதற்காக அவற்றை நாம் நம் வசப்படுத்த வேண்டும். அதைப் பயன்படுத்த வேண்டும். பயிற்சி அளிக்க வேண்டும். இப்பிறவியிலயே அதைச்  செய்து விட்டோம் என்றால் நமக்கு சூட்சமம் என்பது விளங்கி விடும்.

ஒரு மனிதன் செய்கின்ற வினைகளின் பதிவு சூட்சம உடலில் தங்கி விடுகிறது. அடுத்த பிறவியிலும் அவனைத் தொடர்கிறது. இப்பிறவியிலயே  பக்குவ நிலைக்குச் செல்ல முயற்சி செய்தால் சூட்சம உடலில் நமக்கு அனைத்து அவயவங்களும் செயல்படும். ஆனால் நம்மைத் தவிர வேறு யாரு க்கும் வெளியே தெரியாது. ஆனந்தமய கோசத்துடன் பரமாத்வுடன் சேர்க்கை ஏற்படக் கூடிய நிலையினை அந்தக் கோசம் கொண்டுள்ளது.

அடுத்தபடியாக திரிகுணங்கள் என்று சொல்லப் படுகின்ற மனவெழுச்சி. மயக்கம். அமைதி என்று சொல்லக் கூடிய ராஜஸம். தாமசம். சத்வம் என்ற  முக்குணங்களைப் பற்றிப் பார்ப்போம்.

மனவெழுச்சி (எ) ராஜஸ குணம்
 
மனவெழுச்சி என்ற ராஜஸ குணத்தை ஆராய்ந்தோம் என்றால் நானே கர்த்தா. என்னால் நடக்கிறது. நானே இதற்குக் காரணம் என்ற எண்ணம் இரு க்கும். தான்  செய்வதற்கான நினைவு வரும். இருந்தும் அவனிடம் நான் என்ற அகங்காரம் இருக்கும். அதைச் செய்ய வைக்கும்.  அவனுடைய ராஜஸ  குணம். ஒரு அரசனை எடுத்துக் கொண்டால் அந்த ராஜஸ குணம் நிரம்பி இருக்கும்.அது இருந்தால் தான் அவனால் பலப்பல காரியங்களைச் செய ல்படுத்த முடியும். இதில் இரண்டு விஷயங்களும் இருக்கிறது. செயல்படுத்தவும் முடிகிறது அதே நேரம் அங்கே நான் என்ற அகங்காரமும் இரு க்கின்றது. அது மட்டுமல்லாமல் அந்த குணத்தவன் அதிக சந்தோஷம் அடைபவன். எதிரிகளை வீழ்த்துவான். நாட்டைக் காப்பாற்றுவான்  அவற்றினால் களிப்படைவான். அரசன் மட்டுமல்ல பல சபைகள் நாட்டில் இருக்கிறது. அவற்றின் தலைமைக்கும் இவ்வாறான குணங்கள் இருக்கும்.  அதே நேரத்தில் இடும்பை, புகழ், வீரம், ஈகை என்ற குணங்களும் இருக்கும்.

தாமஸம் என்ற மயக்க குணம்
 
அடுத்தபடியாக தாமஸம் என்ற மயக்க குணம்

துக்கம், சோம்பேறி, அலட்சியம், ஆயாசம், மோஹம் அதாவது சம்போகம் என்ற கலவி இன்பம், மதுவுண்ணல், கோபம் போன்ற குணங்களை  உடையவன்.  ராஜஸ குணத்திலும். இங்கேயும் கோபம் இருக்கிறது. ராஜஸ கோபம் என்பது தர்மத்தை அனுசரிக்கும் பொருட்டு. செயலைச் சரியாகச்  செய்ய முயற்சிப்பதில் வரும் கோபத்திற்கும். சோம்பேறித் தனத்தினால் இயலாமையினால் வரும் கோபத்திற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா.  அதுதான் இந்த இரண்டு கோபங்களுக்கும் வித்தியாசம் ஆகும். தாமஸ குணத்தவன் துக்கம், சோம்பேறி, அலட்சியம், ஆயாசம், மோஹம் அதாவது  சம்போகம் என்ற கலவி இன்பம், மது, கோபம் என்ற குணங்களும் ஆண்,பெண் என்ற இரு பாலருக்கும் உரித்தது.

நன்மை (அ) ஞான மயக்கம் என்ற சத்வ குணம்.
 
அடுத்தது நன்மை அல்லது மயக்கம்

இதில் வரக்கூடிய மயக்கம் ஞான மயக்கம். ஞானத்தில் இக்குணத்தவன் திளைத்து இருப்பதைக் குறிப்பிடுகிறது. சத்துவம் என்று சொன்னால் வாய்மை  என்று பொருளாகும். கருணை, கொல்லாமை. அஹிம்சை, இதன் குணங்கள்.  ஹிம்சை என்று சொன்னால்  உயிர்களைக் கொல்வது மட்டுமல்ல, பிற ருடைய மனதிற்கு துன்பம் அளித்தல் அதுவும் ஹிம்சை தான். ஆகப் பிறர் மனம் நோகும்படியாக நடந்தால் கூட அது ஹிம்சை தான். அவ்வாறு  இல்லாமல் இருப்பது அஹிம்சை. கருணை உணர்வு , எளிமை ,விருப்பம், பொறுமை, இதில் பொறுமை என்பதற்குக் காலக்கெடு என்பது  எதுவுமில்லை. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருந்தல், ஜீவகாருண்யம், விரதம், நோன்பு, அடக்கம், ஆனந்தம் போன்ற நல்லியல்புகள்.  

மேற்சொன்ன முக்குணங்களிலும் சாத்வீகம் மேலானது. ராஜஸம் நடுவில் உள்ளது. தாமஸம் அதற்கும் கீழானது.

இதை சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி சாதனா பாதம் சூத்திரம் 15ல் விளக்குகிறார்.

சூத்திரம் 15:

பரிணாம தாப ஸம்ஸ்கார  து:க்கைர் குணவ்ருத்தி
விரோதாச்ச து:க்கமேவ ஸர்வம் விவேகின:

சாத்வீக குணம்

சாத்வீக குணத்தின் இயல்பு என்னவென்று பார்ப்போமேயானால் குணம், செயல், இருப்பு எல்லாமே பரிசுத்தமானது. பரிசுத்தம் என்றால் முற்றிலும்  களங்கமற்ற நிலை என்பதாகும். ஒரு வௌளை ஆடையினை கவனத்தில் எடுத்துக்கொண்டோமேயானால் அது எங்கும் கறையில்லாமல் மிகவும்  வெண்மையாகத் தூய்மையாக விளங்கினால் அதை நாம் பரிசுத்தம் என்று அழைப்போம். நாம் தூய்மை என்பதற்கு உதாரணம் சொல்லப்போனால்  ஸ்படிகத்தை எடுத்துக்கொள்ளோம். அது மிகவும் தெளிவாக எந்த விதக் கலப்புமின்றி உள்ளது. அது போல சிறிதும் அசுத்தமின்றி இருப்பதை நாம்  அவ்வாறு கூறலாம். உலகில் களங்கமில்லாத ஒன்று என்று பார்க்கப்போனால் சந்திரனில், சூரியனில் கூட அதை பார்க்க முடியாமல் இறுதியில் எந்த  வித களங்கமும் இல்லாமல் இருப்பவன் இறைவனே. நான் கூட ஒரு சிறிதும் களங்கமற்ற, அழுக்கற்ற குளத்தை கற்பனை செய்து கொள்வேன். நான்  அதில் குளிக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். தூய்மை என்பதற்கு உலகப்பொருட்களில் எதுவும் உதாரணமாகச் சொல்லிவிட முடியாது.  மனத்தூய்மைதான் உலகில் இருப்பதிலயே மிகவும் சிறந்த தூய்மை. அந்தத் தூய்மை உள்ளவன் தான் உலகில் சிறந்த ஆன்மீகவாதியாக போற்றப் படுகின்றான். ஆகவே தூய்மையினை எப்போதும் ஆராய்ந்து அதனதன் குற்றம் குறைகளை நீக்க முயற்சிப்பதுதான் சாத்வீகத்தின் இயல்பு. சலிப்பற்ற  தன்மையும் அதன் இயல்புதான். சலிப்பு எப்போதும் நீடிப்பதில்லை. கால மாறுபாட்டில் அதுவும் மாறிவிடுகிறது. சலிப்பில்லாத குரு பக்தி,  இறைபக்தி, நல்லோரிடமும் பணிவு, எல்லோரிடமும் சமநோக்கு, பிரம்ம ஞானம் கொள்வது இவை எல்லாம் சாத்வீக குணத்தின் இயல்புகள்.

ராஜஸ குணம்

செயல்வழியில் மனம் விரைதல், அவர்கள் அயர்ந்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டோ இருப்பார்கள். செயல்படுத்துவார்கள்.  செயல் செயல் என்ற ஒரே சிந்தனை. காமியம் என்ற இக வாழ்வு. அவர்களுக்கு இந்த இக வாழ்வு சிறப்படைய வேண்டும் என்ற ஒரே சிந்தனை  மட்டுமே இருக்கும். கன்மா என்ற வினையாற்றுதல். இது என்னுடைய பணி இதை நான் செய்ய வேண்டும் என்ற முனைப்பு இருக்கும்.  அனுஷ்டானத்துடன் கூடிய செயல்பாடு. சிரத்தையோடு செய்வது. இறை வழிபாட்டிலும் அவன் இதை தனக்கு நியாப்படுத்துவான். எனினும்  இவ்வளவு நற்குணங்கள் உடைய ராஜஸ குணத்தை நாம் மத்திமமாகக் கொள்கிறோம் என்றால் சத்துவம் எவ்வளவு உயர்ந்தது?

தாமஸ குணம்

நாத்திகம்  என்ற இறை மறுப்பு, இறை எதிர்ப்பு. தீய அகங்காரம். அவித்யை என்கின்ற மேலோங்குகின்ற அறியாமை. மறைக்கின்ற சுபாவம். இருளி லே இருக்கின்ற சுபாவம். தன்னை அதில் மறைத்துக்கொள்கின்ற இயல்பு. பிறவற்றின் குணங்களை அதிகம். ஆராய்தல் சத்குரு மேலும் கூறுவது,

முக்குணங்களைப் பற்றிச் சொல்லாத சான்றோர்களே இல்லை. ஒவ்வொருவரும் இந்த முக்குணங்களை நிறைய விளக்கிச்சொல்லியிருக்கிறார்கள்.  இவ்வாறு முக்குணங்களின் தனித்த இயல்புகளோடு ஒவ்வொரு குண இயல்புகளோடு மற்ற மூன்று வித கலப்பு குண இயல்புகளும் கலந்து இருக்கும்.

தாமஸ ராஜஸம்
தாமஸ தாமஸம்

தாமஸ சாத்வீகம் என்ற இம்மூன்று பிரிவுகள் தாமஸத்திலே உள்ளது

அடுத்து சாத்வீகத்திலே
சாத்வீக தாமஸம்
சாத்வீக ராஜஸம்
சாத்வீக சாத்வீகம்

என்ற இம்மூன்று பிரிவுகள் சாத்வீகத்தில்  உள்ளது

அடுத்து ராஜஸத்திலே

ராஜஸ தாமஸம்
ராஜஸ ராஜஸம்

ராஜஸ சாத்வீகம்
என்ற இம்மூன்று பிரிவுகள் சாத்வீகத்தில்  உள்ளது. ஒவ்வொருவரிடமும் இவை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ அல்லது இரண்டும் கலந்÷ தா காணப்படும். ஒருவனுக்கு சிறிதளவு சாத்வீகம் இருந்தால் அவன் யோக வழியில் முன்னேற வாய்ப்பு கிடைக்கின்றது. சாத்வீக குணம் ஒருவனுக்கு  இருந்தால் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருந்த வாய்ப்பினால் அவனுக்கு கிடைத்திருக்கும். சாத்வீக குணத்தை போற்றி மேன்மேலும் வளர்ப்÷ பாம்.

அடுத்ததாக மும்மலம் என்பதைப் பார்ப்போம். அதைத் திரிமலம் என்றும் சொல்வார்கள். அவை முறையே ஆணவம், கன்மம், மாயை என்பார்கள்.

ஆணவம்

ஆன்மாவின் அறிவு அம்சங்களை மறந்து நான், எனது என்பன போன்ற அறிவற்ற அம்சங்களைக் கொள்வது. தன் செல்வங்கள், தன் மனைவி, தன்  பிள்ளைகள், தன் குடும்பம் ஆகியவை மட்டுமே உலகம் என்று நினைத்து உழல்வது. அவர்களிடம் அதிகப் பற்று, ஆசை கொள்வது,  ஆன்மா  என்பதை மறந்து, அதைச் சிதைவு படுத்தி அதை நினையாமல் அதைப் புறக்கணித்திருப்பதே ஆணவம்.

மாயை

உலகப்பொருட்கள் அனைத்தும் தனது என்று எண்ணுவது. அவற்றைத் தனதாக்கிக் கொள்வது. எவ்வகையிலேனும் அராஜகத்தைக் கைக்கொண்டு  எதிர்ப்பு நிலையினை உருவாக்கி அவற்றை அடைய முயற்சிப்பது. வரக்கூடியத் தøரிளைத் தன் பலத்தால் தகர்க்க முயற்சி செய்வது. அறியாமை  நிலை கொண்டிருப்பது இவை அனைத்துமே மாயையின் நேரடிக் கோரப்பற்களாகும். மாயை என்று சொன்னால் மறைந்திருப்பது .நன்மை மற்றும்  தீமை இரண்டிலும்  நல்லது வெளிப்பட்டிருக்கும், கெட்டது மறைந்திருக்கும். இதில் உலக மாயை என்பது வேறு. மனித மாயை என்பது வேறு. மாயா  சக்தி என்பது வேறு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஒவ்வொரு மனிதனும் இம்மூன்றையும்  கொண்டவனாகவே பிறக்கிறான்
மகா மாயை என்பது திரோதனா சக்தி எனப்படும். மகாமாயை என்பது இந்த பிரபஞ்சத் தோற்றத்திற்கு அடிப்படையானது என்று பெரியவர்கள்  கூறுவார்கள். அந்த மகா மாயை அன்னை ஆதிபராசக்தியாக இருக்கிறாள். அவளிடமிருந்தே யாவும் வந்தது. அவளிடம் இருந்துதான்  குணங்களின்  இயல்புகள் தோன்றியது. அவளிடமிருந்தே  இறைவன் படைக்கப்பட்டான். இறைவனுக்கு மூவகைத் தொழில்களையும் அளித்து அவற்றை ÷ மற்பார்வை செய்து கொண்டும் இருப்பவள் மகா மாயை.

மகா மாயை என்பவள் உடல் உறுப்புகள், இந்திரியங்கள், நுகர்பொருட்கள் என்ற தணுகரணார்த்தம் என்ற வரைமுறையற்ற குவிக்கப்பட்டச் செய ல்பாடுகளை அனுபவிக்க அளிக்கிறாள்.  அவ்வாறு அளித்தாலும் அந்த நன்மை, தீமைகளை ஒன்று சேர விடாமல் தனித்தனியாக வைத்திருப்பாள்.  நல்லவற்றிற்கும், தீமைக்கும் தனித்தனியாக இருக்ககூடிய எதிர் விளைவுகளை அளிப்பாள். உயிர்களிடம் ஆன்மாவினை அறிவதற்குரிய பக்குவ  உணர்ச்சியினைத் தூண்டி விடுவாள். அதற்க்கேற்ற வாய்ப்பளிப்பாள், வரமளிப்பாள், அவளை மாயை, பாலா, வாலை, மகாசக்தி என்று  சொல்வார்கள். அவளைத் தாய் என்ற மேன்மையான உறவில் வைத்திருக்கிறோம்.

திரோதனா என்ற மறைப்பு சக்தியும் அன்னையிடம் இருக்கிறது. படைத்தல், காத்தல், மறைத்தல், அருளுதல் என்ற சக்தியை மூவர்க்கும் (மும்மூ ர்த்திகள்) அன்னையே அளிக்கிறாள். அந்த சிவசக்தி தத்துவத்தை மறைத்தும் வைத்திருக்கிறாள். விரும்பினால் தெரிய வைப்பாள். காரண காரியத்தின்  பொருட்டு அவ்வாறு செய்கிறாள். அதே சமயம் புண்ணிய பாவங்களை மறையாது அதன் மூலம் இறைநிலையினை ஆன்மாக்களுக்கு உணரச்செய் கிறாள். உயர்த்தியும் விடுகிறாள்.

இராகங்கள் அல்லது விகாரங்கள் என்ற க்லேசங்கள்.

அவா என்ற ஆசை, வெகுளி அல்லது சினம், பற்றுள்ளம், மருள் அல்லது மயக்கம், செருக்கு அல்லது வெறி, பொறாமை இவையே ராகங்கள் என்று  இங்கு சொல்லப்படுகின்றது. இத்தனையும் மனிதர்களிடையே கலந்து பெருகி உள்ளவற்றைக் கண்டு சான்றோர்கள் அதனைத் தொகுத்தும், வகுத்தும்  வைத்திருக்கிறார்கள்.  பலவாறாக மனித இயல்பை ஆராய்ச்சி செய்து இந்த உலகத்திற்கு நல்ல விஷயங்களை அளித்திருக்கிறார்கள்.

எப்படி எல்லாம் இதைச் செய்தார்கள், ஏன் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அதற்குரிய அடிப்படைக் காரணம், இந்த மானுடம் அழிந்து  விடக்கூடாது. ஒன்றுமில்லாமல் ஆகி விடக்கூடாது. இதில் இறை கலந்திருக்கிறது. ஜீவாத்மாவினை உணர்த்தி அதைப் பரமாத்மாவுடன் இணைத்து  விட வேண்டும் என சோதனையும் அளிக்கிறார்கள். அதைத் தாண்டிவரவும் செய்கிறார்கள். உயர் நிலைக்குத் தூக்கிவிடவும் செய்கிறார்கள்.  இதற்காகவே இவ்வரிய செயல்களின் அடிப்படையை மாந்தர்கள் உணருதற்காகவே யோக வழி  என்பதை சற்குரு உலகிற்கு அளித்திருக்கிறார்.  அதன் மூலம் மனிதன் இறைவனை அடைய வழி செய்திருக்கிறார்.
 
ஏழு ஆதாரங்கள்

ஆதாரம் என்பது நம் உடலில் நம் கண்ணுக்குத் தெரியாமல் (சூட்சமத்தில்) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் ஆகும். இவை ஏழு இருப்பதாக யோகிகள்  கூறுகின்றனர். அவை முறையே மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, மற்றும் இறுதிநிலை ஆதாரமாக  சஹஸ்ராரம் (ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை) என விளங்கலுற்றதாகும்.

மூலாதாரம் என்பது முதுகெலும்பு முடியும் இடத்தில் உள்ளது. இந்த சக்கரம் எருவாய்க்கு (குதம்) இரண்டு விரல் கட்டை மேலும் கருவாய்க்கு (குறி)  இரண்டு விரல் கட்டைக்கு கீழேயும் உள்ளது.

இதுவே முதல் ஆதாரமாகவும் எல்லா ஆதாரங்களுக்கும் அடிப்படை முதல் ஆதாரமாக இருப்பதோடு குண்டலினி என்ற பிரம்ம சக்தி கேந் திரமாகவும், (பிராணன், நாதம், ஹம்சம்) என்ற பிராண மந்திரமும் தோன்றும் இடம் என்றும் முதுகுத்தண்டின் (எலும்பின்) கீழும் அமைந்த  விடமாகும்.

பஞ்ச (ஐம் பூதங்களில்) ஒன்றான மண், (லம்) பிரித்வி, இதன் நிறம் மஞ்சள். இதன் அதி தேவதை மஹா கணபதியாக இருப்பதால் பிரணவ சப் தமாகவும் ஓங்கார வடிவமாகவும்,ஓங்கார உற்பத்தித் தலமாகவும் விளங்குகிறது. இந்த மூலாதாரச் சக்கரத்திற்கு வடிவம் வட்டத்தின் உள் அமைந்த  முக்கோணமும் அதன் நடுவில் நான்கு இதழ்களும், அந்த இதழ்களில் ஒவ்வொன்றிலும் வல வரிசையாக மனம், புத்தி, சித்தம் அஹங்காரம்   வ,ச,ஷ,ஸ, என்ற நான்கு அக்ஷரங்களும், நான்கு தத்துவங்களாக இடம் பெற்று உள்ளன. இங்கிருந்து சுழுமுனை என்ற ஒலி மற்றும் ஒளி வடிவமான  நாடி புறப்பட்டு முதுகுத்தண்டின் வழியே முகுளம் என்ற உறுப்பு வழியே கபாலம் அடைகிறது என சித்தர்கள் கூறுகின்றனர்.

ஸ்வாதிஷ்டானம் என்ற சக்கரம் மூலாதாரத்திற்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாவது சக்கரமாகும்.

சுவாசம் என்ற பிராணனின் இருப்பிடம் குண்டலினியின் பிராண வடிவில் தன் சக்திகள் இங்கே கேந்த்ரமாக தன்னை வியாபித்துக் கொண்டிருக்கும்  குறி ஸ்தானமாகும். இதன் உருவம் சதுரம் ஆகும். சதுரத்தை தன்னுள் அடக்கி வெளிவட்டமாகவும், வட்டத்தை ஒட்டியவாறு சுற்றிலும் ஆறு  இதழ்களை கொண்டதாக உள்ளது. இந்த ஆறு இதழ்களிலும் ஸ,ஹ,ம்,ய,ர,ல என்ற ஆறு எழுத்துக்களும் ஆறு தளங்களாக, ஆறு யோக நாடிகளாக  மையம் கொண்டுள்ளது.பஞ்சாக்ஷஷரத்தின் முதல் எழுத்தான ந எழுத்தின் சப்த பரிமாண எழுச்சி உடையதாகவும், ரம் என்ற பீஜாக்ஷர அக்னி  ரூபமாகவும் திகழுமிடமாகும்.

தொப்புழ் என்றும் நாபி என்றும் குறிக்கப்படும் கேந்திரம் முழுவதும் பரவி நிற்பதும், முதுகுத்தண்டின் கீழிருந்து மேலாக மூன்றாவது ஆதார இணை ப்புப் பாதையாகும்.  இதன் உருவம் வட்டமும், வட்டத்தினுள் அமைந்த மேல்நோக்கிய இரு கொம்புவடிவ பிறைச்சந்திரன் உருவத்தை  கொண்டதாகும்.

வட்டத்தினுள் வெளியே தொட்டபடி பத்து தளங்கள் கொண்ட (இதழ்கள்) ஒவ்வொன்றிலும் (டட, ணத, தத, தந, பப) என்ற பத்து அக்ஷரங்களைக்  கொண்டுள்ளது. இதுவே பத்து யோக நாடிகளாய் மிளிருகின்றது. பஞ்சாக்ஷரத்தின் இரண்டாம் எழுத்தின் ம என்ற சப்த பரிமாண எழுச்சியின் பிறப் பிடமாகின்றது. அப்பு எனப்படும் நீர் தததுவமாகும்.

இப்பகுதி 1008 நாடிகளின் பிறப்பிடமும், மூலஸ் தானமும் ஆகும். நாபிக் கமலமென்றும், அதன் வேராக இருப்பதும் ஆகும். கீழ் மூன்று, மேல் மூ ன்று, என ஆறு ஆதாரங்களை பிரிப்பதில் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்) இம்மூன்றும் கீழ் ஆதாரங்களாக திகழ்கிறது.

அத்துடன் அபானன் என்ற மலக்காற்று இந்த கீழ் மூன்று ஆதாரங்களையும் மையப்படுத்தி வியாபித்து நின்று கீழ் நோக்கி வெளியேறும் வாயு  ஸ்தானங்கள் ஆகும்.

யோக சித்தி பெற அபானன் என்ற கீழ் நோக்கிய வாயுவை பிராணனுடன் (மேல் நோக்கிப் பயணிப்பது) கலந்து மேலேற்றுகையில், குண்டலினி  பயணத்தில் மேலெழச் செய்யும் யுக்தியின் பிரதான கிரியை ஆகும்.

அனாகதம்

அடுத்ததாக இதயக்கமலம் என்று அழைக்கப் பெறும் மார்புப்பகுதி முழுதும் வியாபித்திருக்கும் அனாகதம் என்ற ஆதாரச்சக்கரம் பல முக்கியச் சிறப் புத்தன்மைகளைக் கொண்டதென சித்த புருஷர்கள் விவரிக்கின்றனர்.

மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறாக இருந்தாலும் சஹஸ்ராரம் என்ற   7வது ஆதாரமே இறுதி ஆதாரமாகும்.  ஏனைய ஆறு ஆதாரங்களுக்கும் நிலைக்களனாய் இருந்துகொண்டு பிராண ஆராதனையில் தன் இயக்கத்தை நிலை நிறுத்துகிறது.

மேல் மூன்று சஹஸ்ராரம், ஆக்ஞை, விசுத்தி, கீழ் மூன்று மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்  இவ்விரண்டிற்கும் மைய கேந்திரமாக அனாகதம்  ஒளிர்கின்றது. ஏனைய ஆதாரங்களை இயக்குவதன் மூலம் பிராண ஆராதனைச் செய்திடினும் இயல்பாகவே சதா சர்வகாலமும் பிராண  ஆராதனையினைச் செய்து கொண்டிருப்பது அனாகதமே. அனாகதம் என்றால் அனாதி, சதா ஓங்கார ஒலியினை வெளிப்படுத்திக் கொண்டே இருப் பதாகும்.

ஸ்வாதிஷ்டானம் 52 அக்னி கலைகளையும் ,மணிபூரகம் 52 சூரியகலைகளைக் கொண்டதுபோல, அனாகதம் 54 சூரிய கலைகளைக்கொண்டு ஜோதி  வடிவானதாகவும், இறைவன் ருத்ர ரூபியாய் இங்கே வீற்றிருத்தலும், பஞ்சாக்ஷரங்களின் நடு எழுத்தாய் விளங்கும் சி , நெருப்பின் பஞ்ச பூத  தத்துவமாகவும், எல்லாவற்றிலும் மேலாக எப்போதும் அனாதியாய் ஓங்கார சப்தத்தையும் (உடல் முழுதும் சிரசு வரை) மின்னலின் கண் தோன்றும்  இடி சப்தத்தையும் எழுப்பிக்கொண்டே இருப்பதோடு ஒவ்வொரு அணுவிலும் அதன் அதிர்வுகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கும் முக்கிய ஆதார ங்களில் ஒன்றாகும்.

இந்த ஆதாரத்தை அறிந்து அதனுள் பிரவேசித்து விட்ட எந்தச் சாதகரும் மேலும் அடுத்தடுத்த ஆதாரங்களை அடைந்து மேம்படுவார்களேயன்றி  அவர்களுக்கு கீழிறக்க மில்லை என்று ரிஷிகள் வர்ணித்துள்ளனர்.

சாதகர்கள் அனாகத கேந்திரத்திற்கு தன்னை வியாபித்துக் கொள்ளும்போது கீழாதாரங்களில் தாம் பெற்ற அனைத்து அனுபவங்களையும் ஆழ்ந் துணரும் சித்த வடிவாக ஒளியாய் சூட்சம ஒலி உந்துதலால் மேல்நோக்கி பயணித்து சிவசக்தி சங்கமத்தில் உருவாகும். ஆராவமுதைப் பருகும்  நிலைக்கு ஆட்படுத்தப்படுவார்கள். இதுவே அனாகத தளத்தின் சிறப்பு வாய்ந்த தலமாக இருப்பது கண்கூடு.

ஒளி, ஒலி இரண்டின் அனைத்து பரிமாணங்களில் ஒருசேரத் திகழும் ஆதாரமும் ஆகும். வட்டத்தின் நடுவே முக்கோணமும், வட்டத்தின் வெளியே  12 யோக நாடிகளைக் கொண்டதாகவும், அக்ஷரம் (க, க2, க3, க4, ங, ச1, ச2, ஜ3, ஜ4, ஞ, ட1, ட2) தளங்களை உடையதாகவும் உள்ளது.

ஆகாச தத்துவ விளக்கமான விசுத்தி என்ற கழுத்து (கண்டம்) பகுதி முழுதும் நிறைந்து நிலவும் ஆதார சக்கரமாகும்.இதன் வடிவம் அறுகோண  வடிவின் மத்தியில் 16 தளங்கள் (இதழ்கள்) கொண்ட வட்டவடிவம் கொண்டதாகும்.பஞ்சாக்ஷரத்தின் நான்காவது எழுத்தான வ காரமாய், ஹம் என்ற  பீஜமாகவும் திகழுகின்ற ஆதாரமாகும்.

16 தளங்களில் 51 அக்ஷரங்களில் 16 உயிரெழுத்துக்களைக் கொண்டும் 72 சந்திர கலை அமிர்தஸ்தலமுமாகும். அமிர்தம் பரவும் இடமுமாகும்.  ஆக்ஞையினின்றும் பெருகும் பரமானந்தத்தை ஜீவர்களுக்கு விநியோகிக்கும் தலமாகும்

சதாசிவனாரும், மனோன்மணியாய் விளங்கும் ஞானத்தாயும், கூடி மகிழும் ஆக்ஞை புருவ மத்தி அல்லது புருவ நடு ஸ்தானமே ஆக்ஞை என்ற  ஆறாவது தலமாகும். இத்தலம் ஆறு ஆதாரங்களின் கடைசி என்றாலும் இதற்கடுத்தும் 7வது ஆதாரமான சஹஸ்ராரம் என்ற ஆதாரமே இறுதி  ஆதாரமாகும்.

ஆக்ஞையின் வடிவம் வட்டமும் அதன் வெளிப் புறத்தில் வலமும் இடமமுமாக ஒட்டி இரண்டு தளங்களும் அதில் (ஹ க்ஷ) என்ற இரு அக்ஷர ங்களுடையதாயும் திகழ்கின்றது.

பஞ்சாக்ஷரத்தில் கடைசி அக்ஷரமான ய என்ற யகார எழுத்தையும் அதன் தத்துவமாகவும் விளங்குகிறது. 64 சந்திர கலைகளைப் பெற்றும்,  மனத்தின்பால் அடைக்கலம் கொண்ட அறிவு, புத்தி, அதன் சேர்க்கையான ஆன்மாவின் தொடர்பாகவும், ஆன்மாவின் வெளிப்பாடாய்த் திகழ்ந்து  கன்மாவின் வடிகாலான தொழில்படும் சித்தம் என்ற உள் மனவெளி அல்லது வெளிமன மண்டலமே இந்த ஆக்ஞை ஆதாரம் என சான்றோர்  கூறுவார்கள். ஓம் என்ற பீஜத்தைக் கொண்டதும் வெளுப்பு அல்லது நிறமற்ற மிகுந்த குளிர் ஒளி வடிவமும் ஆகும்.

சஹஸ்ராரம்

மூலாதாரம் முதல் ஆக்ஞை வரை ஆறு சக்கரங்கள் ஆதாரமாய்த் திகழ்கின்ற போது, மூன்று நாடிகளால் இவை (இரிலை, பிங்கலை, சுழுமுனை)கள்  இரண்டிரண்டாய் பின்னப்படுகின்றன. இரண்டு சக்கரங்கள் சேருமிடம் ஒவ்வொன்றும் ஒரு முடிச்சு (கிரந்தி) எனப்படும். மூன்று கண்டங்கள் எனவும்  கூறப்படுகின்றது.

ஆதாரங்கள் ஆறும் கடந்தால் அங்கிருந்து அதாவது புருவ மத்தியில் இருந்து பிரம்ம ரந்திரம் என்ற பகுதி வரை 8 பகுதிகள் உள்ளன என்று சித்தர்கள்  கூறுகின்றனர். இவைகள் இந்து, ரோதினி, நாதம், நாதாந்தம், சக்தி, வியாபினி, சுமணி, மனோன்மணி என்ற பெயர்களை உடைய தான எட்டு  கலைகளும் இவைகளே.

இவ்வாறு ஆறு ஆதாரங்களுக்குப்பின் ஏழாவதாக ஆயிரம் இதழ் தாமரை என்றும் சஹஸ்ராரம் என்றும் கூறப்படும் சிரசின் உச்சி பாகமும், மனித  உடலின் தலைக்கு மேல் பரவெளியோடு தொடர்புடையதும் காஸ்மிக் எனர்ஜி எனப்படும் பிரபஞ்ச சக்தியோடு நம்மை இணைக்கும் சஹஸ்ராரம்  என்னும் 7வது தளமாகும்.

யோக வெற்றியினால் வரிசையாக ஆறு ஆதாரங்களைக் கடந்து ஏழாவது ஆதாரமான சஹஸ்ராரம் அடையும்போது மேற்சொன்ன அனைத்து சி த்திகளும் பேரானந்த அனுபவமும் கிட்டுமென ரிஷிகள் கூறுகின்றனர். வாசி என்ற ஜீவனுக்கு ஆதாரமான உயிர்க்காற்றை இரிலை-பிங்கலை (இடம்,  வலமாக) ஏற்றி இறக்கி கும்பகம் மற்றும் (அகக்கும்பகம், புறக்கும்பகம்) என்பது போன்ற பல்வேறு பயிற்சிகளை முறையாகச் செய்வதே பிராணாய õமம் எனப்படும் பிராண ஆகுதி ஆகும். இதன் மூலமே கடினமான மற்றும் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதன் மூலமே பிராணனை உணர்ந்து  குண்டலினி சக்தியினைக் கீழிருந்து மேலேற்றி சஹஸ்ராரத்தை அடைவதற்கான வழிகளின் முதன்மையானதெனக் கூறுகின்றனர்.

 
மேலும் யோக தீபம் »
temple news
அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரைதத்திதன் சோதரரை சித்திதன் நாதகரை தித்திதன் அஞ்சலரை பத்தித்து ... மேலும்
 
temple news

பிராண யோகா ஏப்ரல் 18,2015

பிராணாயாமம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்பøரிள் நிறைய இருப்பினும் அவை அனைத்தையும் ... மேலும்
 

சர சூத்திரம் ஏப்ரல் 28,2015

சரவழிசரம் என்பது பிராணாயமத்தில் தான் வருகின்றது.பத்மாசனத்தில் அமர்ந்து உட்டியான பந்தம் செய்தால் ... மேலும்
 
அடுத்தபடியாக சுழுமுனை நாடியினைப் பார்ப்போம். சுழுமுனை நாடி என்று சொல்கிற போது அது வலது பக்கத்தில்  ... மேலும்
 
நாம் காலை எழும் முன்பாக நம்முடைய கைவிரல்கள் தானாகவே  மூச்சு எந்த நாசியில் ஓடுகின்றது என்பதைப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar