சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மறியிடப மதியதனில் ஈரொன்ப தாடகம்வாசநல் லுதக மாட்டின்வருடநால் ஒன்பதினி லிங்கபூ சனையாற்றும்மாபயன் பெறுவ ரானிக்குஉறுவில்வ நற்குழம் பாட்டில்ஐம் பதுவருடம்உரர்பூசை செய்த பேறாம்ஒருதினம் பதினாறு தெங்கின்இள நீர்தன்னைஓங்கு கடகத் தாட்டினோர்பெறுபயன் சதவருட மாபூசை புரியுநற்பேறதாம் ஆவ ணிதனில்பெருகுமா வின்பாலொர் தினமாட்டில் அறுகுறுணிபெரியவா யிரவ ருடமேசெறிதர இலிங்கபூ சனைசெய்த பேறடைவர்தில்லைமூ வாயிர வர்வாழ்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.கன்னிதனில் நல்லெண்ணெய் நான்குசேர் அதையிலிங்கத்தின் அபிடே கம்செயக்கருதரிய வாண்டயுத பூசைபுரி பயனுறுங்கதிருறுங் கோன்ம திதனில்பன்னுமொன் பானுழக்கு ஆவின்நெய் யாட்டியுற்பலநெய்தல் கூவி ளத்துள்பயிலுமொன்று எண்ணான்கு அருச்சனை புரிந்திடப்பகருமோர் இலக்கம் ஆண்டில்துன்றுபூ சாபலம் கௌவியங் கார்த்திகைதுலங்கிடஅ னந்த வருடம்தூயபூ சைப்பயன் தனுவில்மகி டத்தயிர்ச்சுவையோத னத்தொ டிஞ்சிச்சின்னமுறு பச்சடி நிவேதிக்கில் ஈராறுசிவபூ சையாண் டின்பயன்சிவசிதம் பாவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.நவின்மகர குடமதியின் அறுசுவைக் கருணையுடன்நற்சு வைப்பல காரநெய்நாடுபர மான்னமுக் கனிபால் மரீசிநீர்நவிலு மணவெந் நீருடன்சுவைபெருகும் ஓதன நிவேதித்து வழிபடும்தூய ரைம்பது வற்சரம்சுபரிலிங் கார்ச்சனைசெய் புண்ணியம் பெறுவார்இமதோய சந்தன மைம்பலம்கவனமொடு சிவலிங்க முடியினபி டேகம்செய்கனபுண்ணி யத்தை வினவில்கருதுபதி னாறாண்டு சிவபூசை புரிபயன்கைவல்ய மீன்ம திதனில்திவசமொன் றதில்நல்கும் என்னவீ ராகமஞ்செப்பினாய் அடியார் உய்யச்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.