Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

உபநிஷதங்களின் எண்ணிக்கையும் பிரிவுகளும்! உபநிஷதங்களின் எண்ணிக்கையும் ...
முதல் பக்கம் » உபநிஷதங்கள் என்றால் ..
உபநிஷதங்கள் என்றால் என்ன?
எழுத்தின் அளவு:
உபநிஷதங்கள் என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
12:07

அறிமுகவுரை: பல நூற்றாண்டுகளாக இந்துக்களை வழிநடத்தி ஊக்குவித்து வரும் சாஸ்திரங்கள் எவை எனில் அவை உபநிஷதங்களே, இயற்கையின் மீது மனிதனின் வெற்றியையும், உடலின்மீது ஆன்மாவின் வெற்றியையும் எடுத்துரைத்து, ஆன்மீக வழிகாட்டுதல்களை உபநிஷதங்கள் வருவித்து, உறுதிப்படுத்தி, பாதுகாத்து வருகின்றன. அவை ரிஷிகள் வெறும் துணிவான தத்துவ ஆராய்ச்சிகளின் மூலம் கிடைக்கப் பெற்ற முடிவுகளால் மட்டும் பெறவில்லை; மாறாக உள்ளுணர்வில் ஆழ்ந்து இறை அனுபூதிகளின் மூலமாகப் பெற்றனர். இத்தகைய அனுபவங்கள் சாதாரண புத்திக்கு எட்டாததாகவும். ஒன்று என்ற முடிவை நோக்கிச் செல்வதாகவும் அமைந்துள்ளன. இந்திய வரலாற்றின் எந்த ஒரு தத்துவமோ, எந்த சமய வகுப்போ இந்த உபநிஷதங்களின் தாக்கமின்றி இருக்கவில்லை. உண்மையில் உபநிஷதங்களின் வழிப்பாதையில் நடப்பதால்தான் பல தத்துவ பிரிவுகளும் சமய வகுப்புகளும் மதிப்பைப் பெற்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்தியாவிற்கு அப்பாலும் ஜப்பான், சீனா, கொரியா, மத்திய ஆசியா என்று பல நாடுகளிலும் உபநிஷதங்களின் தாக்கம் அந்த நாட்டு சமய சமுதாய வாழ்க்கையில் பிரதிபலிப்பதை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். உபநிஷதங்களுக்கு எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த இடத்தை இந்து சமய பாரம்பரியம் அளித்துள்ளது. அவைகள் ஸ்ருதி என்றும் தானாக வெளிப்படுத்தப்பட்ட உயர்ந்த ஆன்மீக உண்மைகள் என்றும் எல்லோராலும் ஒருமித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

உபநிஷதம் என்பதன் பொருள்:

ஸத் என்ற வார்த்தையிலிருந்து தோன்றியது உபநிஷத் என்ற வார்த்தை. ஸத் பல பொருள்களைக் கொண்டது; தளர்த்துதல், செல்லுதல், அழித்தல், எனவே நிலையற்ற சம்சார வாழ்க்கையிலிருந்து நம்மை தளர்த்தி விடுவிக்கும் தெய்வீக ஞானமான உபநிடதம், நமது உண்மை இயல்பை மறைக்கின்ற அறியாமையை அழித்து இறைவன் என்ற பிரம்மத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. இந்த ஞானத்தை கற்றுத் தருகின்ற நூல்களையும் சாஸ்திரங்களையும் உபநிஷதங்கள் என்று கூறுகிறோம்.

பக்தியுடன் அருகில் அமர்ந்திருத்தல் என்பது உபநிஷத்தின் மற்றொரு பொருள். எனவே தகுதியற்றவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டு, தகுதியுள்ளவர்களுக்கு தனிமையில் கற்றுத்தரப்படும் ஆன்மீக ஞானம் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

தோன்றிய ஆண்டு: உபநிஷதங்கள் தானாகவே வெளிப்பட்ட வார்த்தைகள் என்று வைதீகர்கள் கருதுகிறார்கள். படைப்பின் ஆரம்பத்தில் ஒவ்வொரு யுகத்திலும் இறைவன் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு இதனை உணர்த்தி வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவை அழியாதவை, என்றும் இருப்பவை.

ஆன்மீக உண்மைகளையும், ஞானத்தையும் கொண்ட புத்தகங்களாக அதனைக் கருத்தில் கொண்டால், மனித வரலாற்றில் அதன் படைக்கப்பட்ட ஆண்டை குறிப்பிட முடியுமா? அதைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாம் வீணாகவே போயின. இந்துவின் மனமானது உண்மைக் கருத்துக்கே, அதன் காலத்தையும் காட்டிலும், அதை எடுத்துரைத்தவரைக் காட்டிலும், அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

உபநிஷதங்கள் வேதங்களின் முக்கியமான ஒரு பகுதியாகும். எனவே வேதங்கள் தோன்றிய காலத்தில்தான் அவை தோன்றியிருக்க வேண்டும். ரிக் வேதம் கி.மு. 4500 வருடங்களில் (பாலகங்காதர திலகர் கருத்து), கி.மு. 2400 வருடங்களில் (ஹங்), கி.மு. 1200 வருடங்களில் (மேக்ஸ் முல்லர்) என பல்வேறு ஆராய்ச்சிகளர்களின் கருத்துப்படி தோன்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. வேத மந்திரங்களிலிருந்து ஆரண்யகம், உபநிஷதங்கள் வரையுள்ள தத்துவ பரிணாம வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நவீன கால ஆராய்ச்சியாளர்கள் உபநிஷதங்கள் கி.மு. 700- கி.மு. 600 ஆம் வருடங்களில் தோன்றியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஆனால் மைத்ராயணீய உபநிஷதத்தில் குறிப்பிட்டுள்ள வானநிலை நிகழ்வுகளைக் கணக்கிட்டு பாலகங்காதரத் திலகர் இவை கி.மு. 1900 வருடங்களில் தோன்யிருக்க வேண்டும். என்கிறார். திலகர் கருத்துப்படியும், அவர் கருத்தை ஆமோதித்தவர்களும் உபநிஷதங்கள் கி.மு.2500- கி.மு. 2000 காலத்øத்ச் சேர்ந்தவை என்று கருதுகின்றனர்.

உபநிஷதங்களின் பண்பு:

எண்ணிலடங்காத உபநிஷதங்களில் பத்து பதினைந்து மட்டும் மிகப் பழமையானதாகக் கருதப்படுகின்றன. அவை பண்டைய இந்து மதத்தின் தத்துவங்களுக்கு ஆதிமூலமாக இருப்பவை. இந்த உபநிஷதங்கள் ஒரே தத்துவத்தை விளக்குகின்றனவா அல்லது ஒன்றுக்கொன்று முரண்பாடான பல தத்துவங்களைக் குறிக்கின்றனவா? எல்லா உபநிஷதங்களும் ஒரே தத்துவத்தை விளக்குகின்ற இலக்கியத் தொகுப்பு (சுருதி) என்றே இந்து வைதீகர்கள் பரம்பரை பரம்பரையாகவேக் கருதுகின்றனர். இந்தத் தத்துவம் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும் ஒருங்கிணைந்த ஒரே கருத்தாகவேக் கருதப்படுகிறது.

உபநிஷதங்களின் பல்வேறுபட்ட அறிவுரைகளைக் காணும்போது வைதீகர்களின் இந்தக் கருத்து எளிதாக நம்மைத் திருப்தி படுத்துவதில்லை, இந்தப் பிரச்சினையைப் பரம்பரையாக வந்த விளக்கவுரையாளர்கள் தெளிவாக தீர்த்து வைத்துள்ளனர். உபநிஷதங்கள் தாங்கள் புரிந்துகொண்ட ஒரு கருத்தைத் தான் கூறுகின்றன. என்று எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு அவைகளை விளக்கியுள்ளனர்.

கடந்த பல நூற்றாண்டுகளின் கால வெள்ளத்தில் சில பகுதிகள் அழிவுற்று, பல கருத்துக்களைக் கொண்ட மூல உரையின் சில பகுதிகளையே நாம் இப்போது கொண்டிருக்கிறோமோ? இது விளக்கம் அளிப்பது போல் தோன்றினாலும், இதற்கு எந்த ஒரு உறுதியான நிருபணமும் கிடையாது.

அல்லது இப்படி இருக்கலாம் உபநிஷதங்களில் வருகின்ற கவுதமர், யாக்ஞவல்கியர், ஸவேதகேது, ரெய்க்வா போன்ற சிந்தனையாளர்கள், இறையுணர்வாளர்கள் அனுபவத்தினாலும், தர்க்கத்தினாலும் தங்களது தனிப்பட்டக் கருத்தைக் கூறியிருக்கலாம். பிரம்மம் என்பது எல்லையற்ற அறுதி உண்மையானால் அது முற்றிலும் யாராலும் அறிய இயலாது. யானையின் அங்கங்களைத் தொட்டு அறிந்துகொள்ளும் ஆறு குருடர்களை போன்றுப் பிரம்மத்தின் ஓர் ஒளியையே ஒருவன் அறிய முடியும். எனவே ஒன்றுக்கொன்று பொருந்தாதது போன்ற தோன்றுகின்ற ரிஷிகளின் கருத்துக்கள் பிரம்மத்தின் பல பரிமாணங்களாக இருக்கலாம்.

இவையெல்லாம் அறிவுப்பூர்வமான பல கணிப்புகளே! இவை முழுவதுமாக பலகாலங்களுக்குத் தீர்க்கப்படாமலேயே இருக்கக்கூடும்!

 
மேலும் உபநிஷதங்கள் என்றால் .. »
temple news
உபநிஷதங்களின் பெயரில் இன்று பதிப்பில் உள்ளவை 200-க்கும் மேலானவை. முக்திகோபநிஷதம் 108 உபநிஷதங்களின் ... மேலும்
 
temple news
உபநிஷதங்களைப் படிக்கும்போது ஓரளவிற்கு அக்காலத்தின் சமுதாயத்தின் அமைப்பை அறிய முடிகிறது.நமது நாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar