சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. ஓம் அருள் நிறை அம்மையே போற்றி2. ஓம் அருமறைப் பொருளே போற்றி3. ஓம் அஞ்சாத நாயகியே போற்றி4. ஓம் அஞ்சினை வென்றவளே போற்றி5. ஓம் அபிக்ஷேகப் பிரியையே போற்றி6. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி7. ஓம் அர்ச்சனைப் பிரியையே போற்றி8. ஓம் அனைவரையும் காப்பவளே போற்றி9. ஓம் அறம் வளர்ப்பவளே போற்றி10. ஓம் அபிராம வல்லியே போற்றி11. ஓம் ஆதியின் பாதியே போற்றி12. ஓம் ஆருயிர் மருந்தே போற்றி13. ஓம் ஆயுதம் ஏந்தியவளே போற்றி14. ஓம் ஆதி நாயகியே போற்றி15. ஓம் இளமை நாயகியே போற்றி16. ஓம் இல்லத்தைக் காப்பாய் போற்றி17. ஓம் ஈசனின் பாதியே போற்றி18. ஓம் ஈடில்லா தெய்வமே போற்றி19. ஓம் உலகளந்த நாயகியே போற்றி20. ஓம் உலகேழும் பெற்றவளே போற்றி21. ஓம் என்னை வளர்ப்பவளே போற்றி22. ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி23. ஓம் எத்திசையும் ஆனாய் போற்றி24. ஓம் எம் பெருமாட்டி இணையடி போற்றி25. ஓம் ஏழுலகமும் ஈன்றாய் போற்றி26. ஓம் ஏழிசை நாயகியே போற்றி27. ஓம் ஏழையர்க்கு அன்னையே போற்றி28. ஓம் ஏங்குவோர்க்குத் துணையே போற்றி29. ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி30. ஓம் ஐயனாரின் தாயே போற்றி31. ஓம் ஒளிக்குள் ஒளியே போற்றி32. ஓம் ஓம் சக்தியே போற்றி33. ஓம் ஓங்கார உருவே போற்றி34. ஓம் ஔவியம் ஆனவளே போற்றி35. ஒம் ஔவைக்கு அருளியவளே போற்றி36. ஓம் நாட்டாரின் தெய்வமே போற்றி37. ஓம் நகரத்தாரைக் காப்பவளே போற்றி38. ஓம் சப்பரத்தில் வருபவளே போற்றி39. ஓம் சந்ததியைத் தருபவளே போற்றி40. ஓம் அன்னத்தில் வருபவளே போற்றி41. ஓம் அகிலத்தை காப்பவளே போற்றி42. ஓம் சிம்ம வாகினியே போற்றி43. ஓம் சீக்கிரம் வந்திடுவாய் போற்றி44. ஓம் பூத்தேரில் வருபவளே போற்றி45. ஓம் புவனங்களைக் காப்பவளே போற்றி46. ஓம் காமதேனுவில் வருபவளே போற்றி47. ஓம் கவலைகளைத் தீர்ப்பவளே போற்றி48. ஓம் குதிரையில் வருபவளே போற்றி49. ஓம் குறைகளைத் தீர்ப்பவளே போற்றி50. ஓம் திருநிலை நாயகியே போற்றி51. ஓம் தேரில் வருபவளே போற்றி52. ஓம் மதுக்குடப் பிரியையே போற்றி53. ஓம் மதுரைக்கு அரசியே போற்றி54. ஓம் குட்டி நிமித்தம் கேட்பவளே போற்றி55. ஓம் குற்றம்பொறுக்கும் குணத்தாளே போற்றி56. ஓம் குலவைப் பிரியையே போற்றி57. ஓம் கூப்பிட்டால் வருபவளே போற்றி58. ஓம் பூப்பல்லக்கில் வருபவளே போற்றி59. ஓம் பூமாலை சூடுபவளே போற்றி60. ஓம் கண்ணில் தெரிந்தாய் போற்றி61. ஓம் விண்ணில் நிறைந்தாய் போற்றி62. ஓம் கண்மணி ஆனாய் போற்றி63. ஓம் கருத்தொளி தருவாய் போற்றி64. ஓம் கல்விக்கு வித்தே போற்றி65. ஓம் கருணையின் ஊற்றே போற்றி66. ஓம் கரும்பை ஏந்தியவளே போற்றி67. ஓம் காவல் தெய்வமே போற்றி68. ஓம் காளியம்மனே போற்றி69. ஓம் சக்தியின் வடிவே போற்றி70. ஓம் சத்தியப் பொருளே போற்றி71. ஓம் சிவகாம சுந்தரியே போற்றி72. ஓம் சீரபிராமித் தேவியே போற்றி73. ஓம் செல்வத்துக் கரசியே போற்றி74. ஓம் செட்டி மக்களைக் காப்பாய் போற்றி75. ஓம் செந்தாமரை ஏந்தியவளே போற்றி76. ஓம் செங்கணிச் செங்கலமே போற்றி77. ஓம் செய்த பாவம் தீர்ப்பவளே போற்றி78. ஓம் செம்பட்டுடையாளே போற்றி79. ஓம் செல்வம் தருவாய் போற்றி80. ஓம் செல்வத்தின் செல்வியே போற்றி81. ஓம் பிணிகளைத் தவிர்த்திடுவாய் போற்றி82. ஓம் பிறவித் துயர் துடைப்பாய் போற்றி83. ஓம் தர்மத்தின் தலைவியே போற்றி84. ஓம் தையல் நாயகியே போற்றி85. ஓம் தன்னம்பிக்கை தருபவளே போற்றி86. ஓம் திரிபுர சுந்தரியே போற்றி87. ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி88. ஓம் தோத்திரப் பிரியையே போற்றி89. ஓம் நிறைவைத் தருவாய் போற்றி90. ஓம் நித்தமும் காப்பாய் போற்றி91. ஓம் நீலி சூலி காளி போற்றி92. ஓம் உருவில் உயிரே போற்றி93. ஓம் விரைவில் வருவாய் போற்றி94. ஓம் ஆற்றல் வடிவே போற்றி95. ஓம் போற்றி உடையாய் போற்றி96. ஓம் மாயவன் தங்கையே போற்றி97. ஓம் சேயவன் தாயே போற்றி98. ஓம் எவ்வடிவிலும் இருப்பவளே போற்றி99. ஓம் மாசறு பொன்னே போற்றி100. ஓம் வலம்புரி முத்தே போற்றி101. ஓம் ஆசிதரும்அன்னையே போற்றி102. ஓம் இளவஞ்சிக் கொம்பே போற்றி103. ஓம் கோமள வல்லியே போற்றி104. ஓம் குவளைக் கண்ணியே போற்றி105. ஓம் நலமனைத்தும் தருபவளே போற்றி106. ஓம் மங்கல நாயகியே போற்றி107. ஓம் பலவான்குடித்தாயே போற்றி போற்றி108. ஓம் எல்லோரையும் காத்திடுவாய் போற்றி போற்றி- வே. இராமசாமி