சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. கள்ளவாரணரே கரிமுகத்துக் கடவுளே உன்னையே உள்ளத்தில்வைத்து உயர்த்துகின்றேன் அன்னையைப்பாடிடவெள்ளமென வார்த்தைகளைத் தந்திடுக முதற்கடவுளேபிள்ளையாரே என்றும் உடனிருந்து காத்திடுக. 2. திருக்கடவூரின் தலைவியே சிவனின் மறுபாதியேஅருட்கடலே ஆனந்த வாழ்வுதரும் அன்னையேஉள்ளத்தில் இருப்பவளே உமையவளே உன்னையேகள்ளமில்லாமல் வணங்கிட உன்னருளைத் தந்துவிடு. 3. கங்கையைச் சூடியவனின் இடப்பாகம் அமர்ந்தமங்கையே மாணிக்கமே மாதுளம்பூவே அன்றுதிங்களைக் காட்டிப் பட்டரைக் காத்தவளே எங்களைக் காத்திட உன்னருளைத் தந்துவிடு. 4. தூண்டும் சுடர்போல என்வாழ்வில் வந்தவளேதாண்டும் மனதை ஒருநிலைப் படுத்திவிடுவேண்டும் வரமெனக்குத் தந்தவளே உன்னைமீண்டும் புகழ்வதற்கு உன்னருளைத் தந்துவிடு. 5. செய்தபாவம் தன்னைச் செயலிழக்கச் செய்திடுவாய்உய்யவழி ஒன்று சொல்லிடுவாய் உலகநாயகியேமெய்யே பேசவேண்டும் மென்மேலும் உயரவேண்டும்.அய்யன் துணையுடன் உன்னருளைத் தந்துவிடு. 6. மறவாத மனமெனக்கு மனதாரத் தந்திடுவாய்உறவாலே வாழ்வில் உயர்ந்திடச் செய்திடுவாய்பிறவாத வரங்களைத் தாயே நீ வழங்கிடுவாய்இறவாத புகழ்பாட உன்னருளைத் தந்துவிடு. 7. பன்னிரு மாதமும் உன்கோயிலில்ச தாபிஷேகம்எண்ணிலா மணிவிழா ஏற்றமுடன் நடைபெறும்கண்களை மூடினால்உ ன்திருமுகம் வந்துவிடும்உன்மகனைக் காத்திட உன்னருளைத் தந்துவிடு. 8. திருவருள் புரிகின்றதி ருக்கடையூர் அபிராமிஅருள்மிகு அமுதீசர் அருட்பாகம் அமர்ந்தவளேபொருள்மிகு கவிதையும் போதிய ஞானமும் தரஇருகரம் கூப்பினேன் உன்னருளைத் தந்துவிடு. 9. அமாவாசையை பவுர்ணமி ஆக்கியவளேஅபிராமியேஅம்மாஎன் ஆசையை அடக்கிட வழிகாட்டுசும்மாஉன் கோயிலைச் சுற்றிச்சுற்றி வந்தேன்அம்மா என்றழைத்தேன் உன்னருளைத் தந்துவிடு10. சங்கு சக்கரம் தாங்கியவனின் தங்கையேபொங்கிடும் பக்தியில் உன்புகழ் பாடுகிறேன்அங்கயற் கண்ணியே அகிலத்தைக் காத்திடமங்கையற் திலகமே உன்னருளைத் தந்துவிடு.11. அண்டமெல்லாம் காப்பவளே ஆத்தாளே அபிராமியேவிண்ணவரின் துயர்களைய அமுதத்தைத் தந்தவளேவிண்ணதிர உன்புகழைப் பல்லாண்டு பாடிவரகண்ணன் எனக்கு உன்னருளைத் தந்துவிடு