சங்கிலிநற் கறுப்பன் நீ சார்ந்திட்ட பொருளும் நீ சடாக்ஷர மந்திரமும் நீயே சகலரும் துதிக்கின்ற தேவாதி தேவன்நீ சாம்பிராணி வாசகனும் நீயே எங்கெங்கு அழைத்தாலும் ஏழையின் வாசலில் எழுந்தோடி வருபவனும் நீயே இதயத்தில் இருப்போன் நீ இரத்தத்தில் கலப்போன் நீ இரவு பகல் காப்பவனும் நீயே
குங்குமம் சிறக்கவும் குடியெல்லாம் வாழவும் குலம் காக்கும் என் தெய்வம் நீயே குன்றும் நீ குளமும் நீ கோலாகலனும் நீ குன்றாவளப் பொருளும் நீயே பங்காளி கூடிட படைப்புகள் கொண்டாடிட பணியாரப் பிரியனும் நீயே பதினெட்டுப் படியாளும் பக்தரின் காவலா- நீ பாதை யெலாம் துணைக்கு வாவா