சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஷேமங் குதிரை இரண்டு முன்னே நிற்கதிவ்யமுடன் பவனி வரும் கருப்பண்ணசாமிஷேமநலம் தந்தருள வேண்டு மென்றேசேர்ந்தே வணங்குகிறோம் சிறக்க செய்வாயேசெந்தமிழில் சொல்லெடுத்து கவி தொடுத்தோம்சிந்தைக்குள்ளே உன்நாமம் சொல்லத் துடித்தோம்பாருக்குள்ளே பல பணிகள் செய்திடவேபாதம் வணங்குகிறோம் பார்த் தருள்வாயேஅழகான மீசையுடன் தலைப்பாகையும்அரிவாள் அடிபிரம்பு கையிற் கொண்டுவருகின்ற பக்தர்க்கு அருளும் தந்து - எம்மைவாழவைத்து காக்கும் எங்கள் கருப்பண்ணனேமுல்லைப்பூ பூக்கின்ற சிரிப்புக் குள்ளேமுத்தான திருமுகமும் காட்சி தரும்ஒயிலாக நீநிற்கும் அழகைக்கண்டுஒய்யார பாடல்கள் உனக்குச் சொன்னோம்கோழியுடன் கடாவையும் பூசை யிட்டுகொண்டாடும் எங்கள் குலம் காத்தருள்வாயேநாளும் உந்தன் திருநாமம் போற்றிடவேநலம் யாவும் தந்தருளும் கருப்பண்ணனேகிங்கிணி சலங்கைக் சத்தம் கேட்டிடவே - உள்ளம்கிடுகிடுக்க இங்கே நீயும் ஓடிவருவாய்தளிர்நடைப் பயின்றபடி நாடி வந்தோம்தரிசனம் நீ தந்தருள்வாய் கருப்பண்ணனே.