சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அருளான எண்ணங்களைத் தேக்கி - பக்திஅன்பரையே கருப்பண்ணர் ஊக்கி - நிதிபொருளீந்து வாழ்வில் நலம்பெறும்படி செய்துவிடும்சாமி - கருப்பண்ணசாமி!பெருநிதி நல்வளங்கள் தந்து - அன்புப்பக்தருடன் வாழ்வில் வலம்வந்து - ஆற்றல்கருப்பர் செய்யும் மாயையினைகண்டறிந்த பேர்கள் ஒளிபெற்றார் - ஞானம்கற்றார்!செட்டிநாட்டில் வந்துதித்த சாமி - ஈயும்செட்டியாரை மேலுயர்த்தும் சாமி - வாழ்வில்அட்டியின்றி அன்பர்வரம்அள்ளிநிதம் தருகின்றசாமி - கருப்பண்ணசாமி!தட்டாமல் தந்துதவி செய்து - கருப்பர்தானாக நலங்களை நெய்து - மனஇட்டமுடன் வேண்டுவோரின்இன்னல்களை சட்டெனவேநீப்பார் - சுகம்சேர்ப்பார்!திருப்புத்தூர் கோட்டையிலே நின்று - கருப்பர்தீவினையை நீக்கிடுவார் நன்று - பக்தர்விரும்புகின்ற வேண்டுதலைவிருப்பமுடன் வாரித்தரும்சாமி - கருப்பண்ணசாமி!