சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
எங்க கருப்பனேஎங்க கருப்பனே - எங்களையும் வாழவைக்கும்தங்கப் கருப்பனேதங்கக் கருப்பனே!குங்குமம் காக்கவந்தகுலதெய்வப் பேரழகேமங்களமே பொங்கவேணும் - நீமாசெல்லாம் துடைக்க வேணும்!தொட்டபணி சிறக்க வேணும்துணைக்குநீயும் வரவேணும்கொட்டுகின்ற மழையாகிகுதிரெல்லாம் நிறையவேணும்!இனச்சண்டை பணச்சண்டைஏமாற்று சூதெல்லாம்கணத்தில் ஒழித்திடவேகலகலப்பாய் ஓடிவாய்யா!அந்திசந்தி நேரத்திலேஆபத்து நேரயிலேவந்திங்கே காருமய்யாவாட்டத்தைத் தீருமய்யா!பில்லி சூனியத்தைபேயான நோய்களையும்கிள்ளி எறிந்திடவேகுலவையிட்டோம் வாருமய்யா!முறுக்குமீசை எங்கேமுட்செருப்பு காலுமெங்கேஅறுக்கின்ற வாளெங்கேஅட்டகாசச் சிரிப்பெங்கே!ஜல்ஜல் ஓசையெங்கேஜவ்வாது மணமெங்கேவில்வெட்டு சட்டையெங்கேவீசிடும் சாட்டையெங்கே!சுக்குமாந் தடியெங்கேதோற்கடிக்கும் தோளெங்கேதிக்கெல்லாம் புகழ்கூட்டும்திடமான நடையெங்கே!ரோஜாவின் மாலைஎங்கேநோய்தீர்க்கும் கரமெங்கேராஜாவின் நடையெங்கேராகதாளப் பாட்டுமெங்கே!எங்கே எங்கேயெனஏங்கித் தவிக்கிறோம்இங்கே இங்கேயெனஎழுந்தோடி வாருமய்யா!