இக்ஷவாகு வம்சத்தில் ராமர் எத்தனையாவது தலைமுறை தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2017 12:04
தசரதன் என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். புத்திரபேறுக்கான யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர். தசரதனின் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார். சூரிய குலம் அல்லது ரகுவம்சம் என்பது கலியுக அரச பரம்பரைகளில் ஒன்றாக பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்து தொன்மவியலின் அடிப்படையில் வைவஷ்த மனு என்பவர் சூரியனின் மகனாவார். இவரே, முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான இக்ஷவாகுவின் வம்சம் சூரிய வம்சமாக அறியப்பெறுகிறது. இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் அறியப்பெறுகின்றனர்.
இந்த சூர்ய குல தோன்றல் ராமபிரானின் பரம்பரை:
1.ப்ரம்ஹாவின் மகன் மரீசி 2.மரீசி யின் மகன் காஷ்யப் 3.காஷ்யப் மகன் விவஸ்வான் 4.விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு 5.வைவஸ்வத மனு மகன் இக்ஷ்வாகு (இவர் அயோத்தியை உருவாகினார்). 6.இக்ஷவாகு மகன் குக்ஷி. 7.குக்ஷி மகன் விகுக்ஷி 8.விகுக்ஷி மகன் பான் 9.பான் மகன் அன்ரன்யா 10.அன்ரன்யா மகன் ப்ருது 11.ப்ருது மகன் த்ரிஷங்கு (இவருக்காக விஸ்வாமித்ரர் ஸ்வர்கம் படைத்தார்) 12.த்ரிஷங்கு மகன் துந்துமார் 13.துந்துமார் மகன் யுவனஷ்வா 14.யுவனஷ்வா மகன் மாந்தாதா 15.மாந்தாதா மகன் சுசந்தி 16.சுசந்தி மகன் துவசந்தி மற்றும் ப்ரசந்ஜீத் 17.துவசந்தி மகன் பரத் 18.பரத் மகன் அஸித் 19.அஸித் மகன் ஸாகர் 20.ஸாகர் மகன் அஸமஞ்ச 21.அஸமஞ்ச மகன் அன்ஷுமான் 22.அன்ஷுமான் மகன் திலீபன் 23.திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்) 24.பாகீரதன் மகன் காகுஸ்தன் 25.காகுஸ்தன் மகன் ரகு (காளிதாஸன் ரகுவம்ஸம் ) 26.ரகு மகன் ப்ரவ்ருத் 27.ப்ரவ்ருத் மகன் ஷம்கன் 28.ஷம்கன் மகன் ஸூதர்ஷன் 29.ஸூதர்ஷன் மகன் அக்னிவர்மன் 30.அக்னிவர்மன் மகன் சிஹ்ராக் 31.சிஹ்ராக் மகன் மேரு 32.மேரு மகன் பரஷுக்ஷுக் 33.பரஷுக்ஷுக் மகன் அம்பரீஷ் 34.அம்பரீஷ் மகன் நகுஷ் 35.நகுஷ் மகன் யயாதி 36.யயாதி மகன் நபாங் 37.நபாங் மகன் அஜ் 38.அஜ் மகன் தஸரதன் 39.தஸரதன் மகன் ராமன்,லக்ஷமணன்,பரதன்,சத்ருக்னன் 40.ராமன் மகன் லவன் மற்றும் குசன் ப்ரஹ்மாவின்