அஷ்டமி, நவமி திதிகளிலும். பரணி, கார்த்திகை நட்சத்திர நாட்களிலும் வெளியூர் செல்லக் கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் நடைமுறையில் நாள், நட்சத்திரம் பார்த்து கிளம்ப முடியாது. எந்த நாளில் கிளம்பினாலும் அது வெற்றிப் பயணமாக அமைய எளிய பரிகாரம் உள்ளது. பிள்ளையார் கோவிலில் தேங்காயை சிதறுகாயாக உடைத்து விட்டு, இரண்டு பழங்களை பசுவுக்கு கொடுத்தால் போதும். பயணம் சிறப்பாக அமையும்.