பசுஞ்சாணத்தால் வாசல் தெளித்து மாக்கோலம் இட்டு, மாவிலைத் தோரணம் கட்டும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கும். வளையல், கண்ணாடி, சீப்பு, மஞ்சள், குங்குமம், புடவையை சுமங்கலிகளுக்கு தானம் செய்யும் இல்லத்தில் லட்சுமி குடியிருப்பாள். குழந்தைகள் எழுத தொடங்கும் போது, தானியத்தை பரப்பி அதில் எழுதினால் வித்யாலட்சுமியின் அருளால் கல்வி வளர்ச்சி உண்டாகும். குழந்தைக்கு பால், பெண்களுக்கு தேன், கோவில் பூஜைக்கு தாமரை, பறவைக்கு தானியம், ஏழைகளுக்கு பொருளுதவி செய்வது லட்சுமி கடாட்சத்தைத் தரும்.