திருப்பதி மலை மீது வெங்கடேசப் பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார். அலமேலு மங்கை என்னும் பெயரில், மகாலட்சுமி திருச்சானூரில் தனிகோவிலில் அருள்பாலிக்கிறாள். தினமும் இரவில் வெங்கடேசர் திருச்சானூர் வந்து விட்டு, காலையில் மலைக்குச் செல்வதாக தல வரலாறு கூறுகிறது. அவர் தன் திருமணத்திற்காக குபேரனிடம் வாங்கிய கடனிலிருந்து விடுபட, பக்தர்கள் பெருமாளுக்கு பெருமளவில் காணிக்கை செலுத்துகின்றனர். அதை விட பல மடங்கு செல்வத்தைப் பக்தர்களுக்கு அள்ளித் தருபவளாக அலமேலுத்தாயார் விளங்குகிறார். வெள்ளிக்கிழமையில் இவளைத் தரிசிப்பது விசேஷம்.