சிரஞ்சீவிகள் என்றால் காலத்தை வென்றவர்கள். எப்போதும் வாழ்கிறவர்கள். மரணமற்றவர்கள் என்று பொருள். நம் புராண இதிகாசங்களில் ஏழு பேரை மரணமற்ற சிரஞ்சீவிகள் என்று குறிப்பிடுகிறோம். இவர்கள் எங்கோ மேரு மலையில் மறைந்து வாழ்பவர்கள் அல்ல. குணங்களால் நம்மோடு வாழ்பவர்கள்தான். அவர்களின் அம்சமாக யார் யார் விளங்குகிறார்கள்?
அஸ்வத்தாமா: உலகில் எந்த மனிதரிடத்து மந்திர பலம் இருக்கிறதோ அவர்கள் அஸ்வத்தாமனின் அம்சம். மகாபலி: மன்னர்கள் அல்லது ஆட்சியாளர்கள் பூமியில் நியாய வழிகளில் சம்பாதித்த பொருள்களால் நாட்டைக் காப்பாற்றுகிறார்ளோ அவர்கள் மகாபலியின் அம்சம். கிருபாச்சாரியார்: எந்த மனிதர்கள் கோழைத்தனம் இல்லாமல் உள்ளார்களோ, தைரியத்துடன் நேர்மையாக போர் புரிகிறார்களோ அவர்கள் கிருபாச்சாரியாரின் அம்சம். ஆஞ்சநேயர்: சுத்த மனதுடன், எடுத்த காரியத்தைச் சரியாக முடித்து யார் நல்ல வீரராக விளங்குகிறார்களோ அவர்கள் ஆஞ்சநேயர்அம்சம். விபீஷணன்: ஸ்ரீராம பக்தராகவும், சாந்த குணமுடையவர்களாகவும் யார் உள்ளார்களோ அவர்கள் விபீஷணனின் அம்சம். பரசுராமர்: பூமியில் எந்த வீரர்கள் கோபத்துடன் கூடினவர்களோ, அந்தக் கோபத்தில் அர்த்தம் உள்ளதோ அவர்கள் பரசுராமரின் அம்சம். வியாசர்: சமஸ்கிருத புலமை எவரிடம் உள்ளதோ, எவர், ஸ்ரீராமர் ஈஸ்வரன், கிருஷ்ணர், இவர்களை துதிக்கிறார்களோ அவர்கள் வியாசரின் அம்சம் உடையவர்கள்.