செல்வம் பெருக செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை வணங்குவர். லக்ஷ்மி என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சுயநிலை, லட்சியம், லட்சம்(பணம்) என பொருள் உண்டு. அலைபாயும் மனதை சுயகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, லட்சியத்தை நோக்கி செல்ல வேண்டும். அந்தப் பயணத்தின் போது பணம் தானாக சேர்ந்து விடும். இதைத்தான் லட்சுமி கடாட்சம்என்பர்.