பதிவு செய்த நாள்
17
ஜூன்
2017
04:06
அமாவாசையில் முன்னோர் வழிபாடு செய்வது வழக்கம். பாகவதத்தில் வேறு பல நாட்களிலும் வழிபாடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளன. புரட்டாசி மாதம், தை பொங்கல், ஆடிமாதப் பிறப்பு, சித்திரை மாதப் பிறப்பு, ஐப்பசி மாதப் பிறப்பு, சந்திரகிரகணம், சூரிய கிரகணம், திருவோணமும், துவாதசிதிதியும் சேரும் நாள், அட்சய திரிதியை, கார்த்திகையும்,நவமியும் சேரும் நாள், மார்கழி, தை, மாசி, பங்குனி மாத அஷ்டமி, மாசி வளர்பிறை சப்தமி, மாசிமகம், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், துவாதசி நட்சத்திரமும், அனுஷமும் சேரும் நாள், திருவோணம், உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள், ஏகாதசி திதியும் உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி நட்சத்திரங்கள் சேரும் நாளில் முன்னோர்களுக்கு சிரார்த்தம், தர்ப்பணம் செய்ய வேண்டும்.