ஆரம்பித்த செயல் தடங்கலின்றி வெற்றிகரமாக முடிய எளிய பரிகாரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2017 02:06
ஒரு செயலைத் தொடங்குகிறோம். என்ன தான் திட்டமிட்டு துவங்கினாலும் இடையில் சில தடைகள் வருகின்றன. மீண்டும் முயற்சிக்க வேண்டியி ருக்கிறது. இதுபோல, தடைகள் வராமல், ஆரம்பித்த செயல் தடங்கலின்றி வெற்றிகரமாக முடிய எளிய பரிகாரம் இருக்கிறது. அதுதான் மகாகணபதி சகஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்வது. அதாவது, விநாயகரை அவரது ஆயிரம் பெயர்கள் சொல்லி வணங்குவது. இந்த சகஸ்ரநாம புத்தகங்கள் கடைகளில் கிடைக்கின்றன. ஒரு செயலைத் துவங்குவதற்கு 48 நாட்கள் முன்னதாக, இந்த பாராயணத்தை சொல்ல ஆரம்பிக்கலாம்.தினமும் அதிகாலை வேளையில் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொன்னால் பலன் இரட்டிப்பாக இருக்கும். இந்த பாராயணம் செய்ய வயது வரம்பு கிடையாது. ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானலும் சொல்லலாம்.