எந்த வழிபாடாக இருந்தாலும் முதலில் விநாயகரை பூஜிக்க வேண்டும் . துவங்கும் செயலில் இடையூறு செய்யும் சில தீயசக்திகள் உள்ளன. இவை மனித வடிவத்திலோ, வேறு வகையிலோ தடைகளை ஏற்படுத்தும். இவற்றை அடக்கியாள சிவனால் படைக்கப் பட்டவர் விநாயகர். இடர்கடி கணபதி வர அருளினன் என ஞானசம்பந்தர், தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.