முருகனுக்கு நட்சத்திர அடிப்படையில் மேற்கொள்ளும் விரதம் ஆடிக்கார்த்திகை. சிவனுக்கு திருக்கார்த்திகை போல, முருகனுக்கு ஆடிக் கார்த்திகை மிக உகந்தது. பதவி உயர்வு பெற விரும்புவோர் இந்த விரதமிருப்பது சிறப்பு. 12 ஆண்டுகள் இதை மேற்கொண்ட நாரதர், எல்லா முனிவர்களிலும் மேலான பதவி கிடைக்கப் பெற்றார். ஆடியில் கார்த்திகை(ஜூலை 19, ஆக.15 என) இருமுறை வருவது குறிப்பிடத்தக்கது. இந்நாட்களில் காலையில் நீராடி கந்த சஷ்டிக்கவசம் அல்லது சண்முக கவசம் படித்து முருகன் கோயிலில் பாலபிஷேகம் செய்ய வேண்டும்.