பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
04:07
பரந்தாமன் எடுத்த அவதாரங்கள் எத்தனை என்று கேட்டால், கண்டிப்பாக பத்து அவதாரங்களையாவது பலரும் பட்டியல் இட்டுவிடுவார்கள். ஆனால், பரமேஸ்வரன் எத்தனை அவதாரங்கள் எடுத்திருக்கிறார் என்றால், ஒரிருவரைத் தவிர, பலரும் விழிப்பார்கள். சிவபெருமான் பூவுலகில் இருபத்தேழுமுறை அவதரித்திருக்கிறார் என்கிறது கூர்மபுராணம்.
அதுவும் எப்படித் தெரியுமா? தன் அம்சத்துடன் மானிட வடிவிலேயே அவதாரம் எடுத்திருக்கிறார், மகேசன். கூர்ம புராணம் சொல்லும் அந்த அவதாரங்களின் பட்டியல் இதோ: 1. ஸ்வேதா, 2. சுதாரா, 3.மதனன், 4. சுஹோத்திரன், 5. கங்கணன், 6. லோகாட்சி, 7. ஜெய்கிஷ்ஹவ்யன், 8. தாதிவாகனன், 9. ரிஷபன், 10. பிருகு, 11. உக்கிரன், 12. அத்திரி, 13. கவுதமன், 14. வேதசீர்ஷன், 15. கோகர்ணன், 16. ஷிகந்தகன், 17. ஜடாமாலி, 18. அட்டஹாசன், 19. தாருகன், 20. லங்காலி, 21. மகாயாமன், 22. முனி, 23. சூலி, 24. பிண்ட முனீச்வரன், 25. சஹிஷ்ணு, 26. ஸோமசர்மா, 27. நகுலீஸ்வரன்.
ஈசனின் திருவடிவங்கள் அறுபத்து நான்கு என்கிறது சைவ ஆகமம். அவை என்னென்ன தெரியுமா? லிங்க மூர்த்தி, லிங்கோத்பவ மூர்த்தி, முகலிங்க மூர்த்தி, சதாசிவ மூர்த்தி, மகா சதாசிவ மூர்த்தி உமாமகேஸ்வர மூர்த்தி, சுகாசன மூர்த்தி, உமேச மூர்த்தி, சோமாஸ்கந்த மூர்த்தி, சந்திரசேகரமூர்த்தி, இடபாரூட மூர்த்தி, இடபாந்திக மூர்த்தி, புஜங்கலலித மூர்த்தி, புஜங்கத்ராச மூர்த்தி, சந்த்யா நிருத்த மூர்த்தி, சதாநிருத்த மூர்த்தி, சண்டதாண்டவ மூர்த்தி, கங்காதர மூர்த்தி, கங்காவிசர்ஜன மூர்த்தி, திரிபுராந்தக மூர்த்தி, கல்யாணசுந்தர மூர்த்தி, அர்த்தநாரீஸ்வர மூர்த்தி, கஜயுக்த மூர்த்தி, ஜ்வராபக்ன மூர்த்தி, சார்த்தூலஹர மூர்த்தி, பாசுபத மூர்த்தி, கங்காள மூர்த்தி, கேசவார்த்த மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி சரப மூர்த்தி, சண்டேச அனுக்ரஹ மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி, காலந்தக மூர்த்தி, காமதகன மூர்த்தி, லகுலேஸ்வர மூர்த்தி, பைரவ மூர்த்தி, ஆபத்தோத்தரண மூர்த்தி, வடுக மூர்த்தி, க்ஷேத்திரபால மூர்த்தி, வீரபத்ர மூர்த்தி, அகோர மூர்த்தி, தட்சயக்ஞயஷத மூர்த்தி, கிராத மூர்த்தி, குரு மூர்த்தி அசுவாரூட மூர்த்தி, கஜாந்திக மூர்த்தி, ஜலந்தரவத மூர்த்தி, ஏகபாத த்ரிமூர்த்தி, திரிபாத த்ரிமூர்த்தி, ஏகபாத மூர்த்தி, கவுரிவரப்ரசாத மூர்த்தி, சக்கரதான மூர்த்தி, கவுரிலீலாசமன்வித மூர்த்தி, விஷாபகரண மூர்த்தி, கருடன் அருகிருந்த மூர்த்தி, பிரம்ம சிரச்சேத மூர்த்தி, கூர்ம சம்ஹார மூர்த்தி, மச்ச சம்ஹார மூர்த்தி, வராக சம்ஹார மூர்த்தி, பிராத்தனா மூர்த்தி, ரக்த பீட்சா பிரதான மூர்த்தி, சிஷ்ய பாவ மூர்த்தி.
வாயு புராணம், சிவபெருமானுக்கு பிரம்மன் எட்டுப் பெயர்களை வைத்ததாகக் கூறுகிறது. அந்தப் பெயர்கள். 1. ருத்திரன், 2. பவன், 3. சிவன், 4. பசுபதி, 5. ஈஸ்வரன், 6. பீமன், 7. உக்ரன், 8. மகாதேவன்.