பதிவு செய்த நாள்
19
ஜூலை
2017
03:07
நாம் வணங்கும் தெய்வங்கள் ஒரு சில காரண, காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள். சித்தர்களுக்கு மேல் இருக்கும் உயர்ந்த நிலை, இந்த தெய்வங்கள். எளியவனான இறைவனை எப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு பலனைப் பெறவும், கடவுளின் வெவ்வேறு வடிவங்களை கும்பிடுவதும், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதிப்பதும் கூடுதல் பலன் கிட்ட வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் வகுத்த வழிமுறைகள். ஆகவேதான், நமது முன்னோர்கள் வழக்கப்படி எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை தெரிந்துகொள்வோம்.
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்.
செல்வம் சேர - ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநாராயணர்.
நோய் தீர - ஸ்ரீதன்வந்தரி, தட்சிணா மூர்த்தி.
வீடும், நிலமும் பெற - ஸ்ரீசுப்ரமண்யர், செவ்வாய் பகவான்.
ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்.
மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயர்.
கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீசரஸ்வதி.
திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை.
மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி.
புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி.
தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கடாசலபதி.
புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி.
விவசாயம் தழைக்க - ஸ்ரீதான்யலட்சுமி.
உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீஅன்னபூரணி.
வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்.
சனி தோஷம் நீங்க - ஸ்ரீஐயப்பன், ஸ்ரீஆஞ்சநேயர்.
பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்.
பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீவீரமாகாளி, ஸ்ரீநரசிம்மர்.
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி.
கண் பார்வைக் கோளாறுகள் - சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்.