கைலாயத்திற்கு வந்த பிருங்கி முனிவர், சிவனை மட்டும் வலம் வந்தார். பார்வதி கோபத்துடன் ஈசனை நெருக்கி அமர்ந்தாள். சிவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிருங்கி, வண்டாய் மாறி இருவர் இடையேயும் நுழைந்து சிவனை சுற்றினார். இதனால் முனிவரின் சக்தியை தேவி எடுத்துவிட்டாள். அவர் தடுமாறி விழுந்தார். உமையவளிடம் மன்னிப்பு கேட்டார். தாயுள்ளம் கொண்ட அவள் முனிவரே! திருவேற்காட்டில் கருமாரியாக இருக்கிறேன். அங்கு வந்து இழந்த சக்தியைப் பெறுக! என கூற, பிருங்கியும் அவ்வாறே செய்தார். நோயால் சக்தி இழந்தவர்கள் கருமாரியம்மனை வழிபட்டால் நலம் பெறுவர்.