இரண்யாட்சன் என்னும் அசுரனிடம், வராக (பன்றி) வடிவெடுத்து போரிட்ட திருமால், கடும் கோபத்துடன் அலைந்தார். தேவர்களால் பெருமாளை நெருங்க முடியவில்லை. பூமாதேவியிடம் சென்று பெருமாளின் கோபத்தை தணிக்கும்படி வேண்டினர். பூமாதேவியும் அவ்வாறே செய்தாள். திருமால் மகிழ்ந்து பூலோகம் வந்து திருப்பதி, திருவிடந்தை (காஞ்சிபுரம் அருகில்), மாமல்லபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் தங்கினார்.