பதிவு செய்த நாள்
21
ஆக
2017
05:08
அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை போல, முருகக்கடவுளுக்கு செவ்வாய்க் கிழமை போல, பெருமாளுக்கு புதன் கிழமை மாதிரி, சிவனாருக்கு திங்கட்கிழமை உகந்த நாள் என்கிறது புராணம். திங்கட்கிழமைக்கு சோம வாரம் என்றொரு பெயர் உண்டு. சோமன் என்றால் உமையவளுடன் சிவனார் இருப்பதைக் குறிக்கும். சோமன் என்பது சந்திரனையும் குறிக்கிறது. திங்கள் என்றாலும் சந்திரனே. திங்கள் என்பது நிலா, பிறை என்றும் சொல்லலாம். பிறையைச் சூடிக்கொண்டிருக்கும் சிவனாருக்கு திங்கட்கிழமை உகந்தநாள் என்பதில் வியப்பில்லை.
அப்பேர்ப்பட்ட திங்கட்கிழமையும் அமாவாசையும் ஒருசேர வருவதும் அந்தநாளில் சிவ வழிபாடு செய்வதும் கூடுதல் பலனைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். கொடும் நோயாலும் சாபத்தாலும் தவித்த சந்திரன், சிவனாரை மனமுருகி வேண்டி தவமிருந்தான். அந்தத் மகிழ்ந்த ஈசன், சந்திரனின் நோயை நீக்கினார். சாபத்தைப் போக்கினார். மேலும் நவக்கிரகங்களில் சந்திரக் கிரகத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து சேர்த்தருளினார். அதுமட்டுமா..
என் சாபம் போக்கிய சோம வாரநாளில், யாரெல்லாம் வந்து என்னைத் தரிசித்து வேண்டுகிறார்களோ, அவர்களின் சாபத்தையும் பாபத்தையும் சிவனருளால் போக்குவேன்’ என உறுதி அளித்தார் சந்திர பகவான் பொதுவாகவே, சோம வார நாளில் (திங்கட்கிழமை) சிவனாரை நினைத்து விரதமிருந்து சிவ தரிசனம் செய்வது நற்பலன்களைத் தரும். அந்தநாளில் அமாவாசையும் சேர்ந்து வரும் போது, பித்ருக்காரியங்கள் செய்து, சிவபெருமானையும் நவக்கிரகத்தில் உள்ள சந்திர பகவானையும் வழிபட்டால், எல்லா வளமும் பெறலாம். சந்திர பலம் கிடைக்கப் பெற்று, புத்தியில் தெளிவும் மனதில் துணிச்சலும் கொண்டு நிம்மதியாக வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.!