குருகுலக் கல்வியை முடித்த வாசுதேவர், குருநாதர் அச்சுதப்பிரேக் ஷரிடம் சந்நியாசம் மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். பெற்றோரின் சம்மதம் பெற்று வருமாறு குருநாதர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பெற்றோர் மகனிடம் வாசுதேவா... எங்களுக்கு நீ ஒரே பிள்ளை. அதனால் சந்நியாசத்திற்கு அனுமதி தர முடியாது என மறுத்தனர். சரி... இப்போதைக்கு நான் சந்நியாசம் ஏற்கவில்லை. ஆனால் பெருமாளின் அருளால் எனக்கு ஒரு தம்பி பிறப்பான். அப்போது சந்நியாசம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார். அந்த வாக்கின்படி, வாசுதேவருக்கு தம்பி பிறந்த பின்னர், துறவறம் மேற்கொண்டார். இவரே பின்னாளில் ராகவேந்திரர் என்னும் மகானாக புகழ் பெற்றார்.