பதிவு செய்த நாள்
04
செப்
2017
04:09
பிரம்மாவை தரிசிக்க சென்ற நாரதர், கலியுகத்தில் விஷ்ணுவின் அருள் பெற எளிய விரத முறை எது? எனக் கேட்டார். அதற்கு பிரம்மா, புரட்டாசி சனிதோறும் விரதம் மேற்கொண்டால் போதும்‘ என பதிலளித்தார். இதை அறிந்த தேவர்கள் விரதமிருக்க தொடங்கினர். புரட்டாசி சனியன்று (செப்.23,30,அக்.7,14) நீராடி, விரதமிருக்க வேண்டும். மதியம் மட்டும் குறைவாக உணவு உண்ணலாம். காலை, இரவில் பால், பழம் சாப்பிடலாம். பூஜையறையில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ர நாமம், வெங்கடேச ஸ்தோத்திரம், அஷ்டோத்திரம் படிக்க வேண்டும். பெருமாளுக்கு துளசி தீர்த்தம், பொங்கல், புளியோதரை படைத்து வழிபட வேண்டும். இதனால் நீண்ட ஆயுள், உடல் நலம், செல்வம், புண்ணியம் பெருகும். கிரகதோஷம் நீங்கும்.