பெருமாளுக்குரிய வாகனம் கருடன். வானில் கருடன் பறக்கும்போது அதை கைகூப்பி தரிசிக்க கூடாது. வலதுகை மோதிர விரலால் இரு கன்னங்களிலும் மாறி மாறி, மூன்று முறை தொட்டுக் கொள்ள வேண்டும். கோயில்களில் கருட பகவானைத் தரிசிக்கும் போதும் இதுவே விதிமுறை. நோய், துன்பம் நீங்க, ஆயுள்விருத்தி பெற கருடனை வணங்குவர்.