அனலன் என்னும் அசுரனை அழிக்க, காளி வடிவத்தில் அம்பிகை பூலோகம் வந்தாள். உக்கிரம் மிக்க அவளை சிவன் சாந்தப்படுத்தி மணந்து கொண்டார். அழகாக இருந்ததால், அபிராமா அம்பிகை எனப் பெயர் பெற்றாள். அபிராமம் என்பதற்கு அழகு என்பது பொருள். அவளே திண்டுக்கல்லில் அபிராமியாக வீற்றிருந்து அருள்கிறாள். இங்கு அம்பிகைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. கோயிலும் அபிராமி அம்மன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. அபிராமா அம்பிகை என்பதே காலப்போக்கில் அபிராமி என மருவியது. ஒரு முறை அபிராமா என சொன்னால் அம்பிகைக்குரிய மந்திரத்தை சொன்ன பலன் கிடைக்கும்.