ஆற்றலின் இருப்பிடமான அம்பிகையை வழிபட்டால் வல்லமை உண்டாகும். சாதாரண புல்லும் கூட ஆயுதம் என்பதை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று சொல்வர். மனிதர்கள் அவரவர் தொழிலைச் செய்வதற்கான கருவி ஆயுதம். கல்விக்கு புத்தகம், எழுதுபொருள் அடிப்படையாக இருக்கின்றன. வியாபாரிக்கு தராசு, எடை கற்கள் அவசியம். இந்த ஆயுதங்களை சரஸ்வதியாக கருதி வழிபடுவதால், சரஸ்வதி பூஜைக்கு ஆயுதபூஜை என்றும் பெயருண்டு. புரட்டாசியில் வளர்பிறை நவமியே ஆயுதபூஜையாக கொண்டாடப்படுகிறது. பூஜை செய்த பின் மறுநாள் விஜயதசமியன்று கருவி, ஆயுதங்களை பயன்படுத்த தொழில் வளம் சிறக்கும்.