காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் கண்டேர்பல் அருகில் துாலாமுலா கிராமம் உள்ளது. இங்கு சிறு தீவு ஒன்று உண்டு. இந்த தீவிலுள்ள மணல் மேட்டில் பாதம்’ போன்ற அமைப்பில் ஒரு குளம் இருக்கிறது. சலவைக் கல்லால் கட்டப்பட்ட இதன் நடுவிலுள்ள மண்டபத்தில் க்ஷீரபவானி அம்பாளும், சிவனும் (சங்கரர்) உள்ளனர். இந்த குளத்து தண்ணீருக்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர். க்ஷீரம்’ என்றால் பால்’. இந்த குளத்து நீர் வெள்ளை, இளம் சிவப்பு, இளம் பச்சை, சாம்பல் நிறத்தில் அவ்வப்போது மாறும். கருப்பாக மாறினால், தங்களுக்கு கெடுதல் வருமெனக் கருதி, அம்மனுக்கு விசேஷ பூஜை செய்வர். சுவாமி விவேகானந்தர் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டுள்ளார்.