வணங்க வேண்டிய கடவுள், வணங்கக் கூடாத கடவுள் என்றெல்லாம் பிரிவே கிடையாது. பிரம்மாவே வேதங்களை வைத்திருக்கிறார். அவரை ஒரு கதையைச் சொல்லி வணங்க வேண்டாம் என்பது போல் சித்தரிக்கப்படுகிறது. பிரம்மா வேண்டாம் என்றால் வேதமும் வேண்டாம் என்று தான் பொருள். பிரம்மாவை வணங்கவேண்டியதன் அவசியத்தை காஞ்சிப்பெரியவர் பெரிதும் வலியுறுத்தியுள்ளார்.