லட்சுமி வீட்டிலேயே இருப்பதை லட்சுமிகரம் என்பர். இதை மங்களகரம் என்றும் சொல்வதுண்டு. இந்த பொண்ணு லட்சுமிகரமாக இருக்கா! இந்த வீடு மங்களகரமாக இருக்கு! என்றெல்லாம் சொல்வார்கள். மாவிலைத் தோரணம், திருவிளக்கு, மாக்கோலம், துளசிமாடம், மாட்டுக்கொட்டில் ÷ பான்றவற்றில் எல்லாம் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். பணம் இருந்தால் மட்டும் லட்சுமிகரம் வந்து விடாது. சில பணக்கார வீடுகள் தூங்கி வழிவது போல் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், எந்நேரமும் பக்திமணம் கமழ வைத்திருப்பதே லட்சுமிகரம்.