முருகனின் சிறப்புகளையும், அவரது அருள் வேண்டியும் அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இதன் முதல் அடியான முத்தைத்தரு என்பதை முருகனே எடுத்துக் கொடுத்தார். திரு என்றால் அழகு, ஐஸ்வர்யம். அழகனாகிய, ஐஸ்வர்யம் தருகின்ற முருகனை புகழும் பாடல்களைக் கொண்டதால், திருப்புகழ் என்று பெயர் ஏற்பட்டது.