இந்த உலகமே சிவலிங்கம் தான். வானம் மழை பொழிய, பூமியில் எல்லா உயிர்களும் வாழ்கின்றன. இதை உணர்த்தும் விதமாக, ஆண் வடிவான ஆகாயம் லிங்க பாண மாகவும், பெண் வடிவான பூமி ஆவுடையாகவும் இதில் உள்ளன. ஆணும், பெண்ணுமாக வாழும் உயிர்களால் உலகம் இயங்குகிறது. இயற்கையை, சிவலிங்கமாக உருவகப்படுத்தி வழிபடுகிறோம்.