சபரிமலையில் பக்தர்கள் நடத்தும் வழிபாடு நெய் அபிஷேகம். விரதமிருந்து தலையில் இருமுடி கட்டி, 18 படி வழியாக ஏறி வந்து நெய் அபிஷேகம் செய்தால் சபரி யாத்திரை நிறைவு பெறும். இருமுடி கட்டில் உள்ள தேங்காயில் அடைத்துக் கொண்டு வரும் நெய்யை, பகவானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். முத்திரை தேங்காயில் உள்ள நெய் ஜீவாத்மா. இந்த நெய்யை பகவானுக்கு அபிஷேகம் செய்யும் போது ஜீவாத்மாவை அர்ப்பணிப்பதாக பொருள்.