கிருஷ்ணனின் வாகனமாக கருடன் கருதப்படுகிறது. ஆனால், அது கோழிக் குஞ்சை உண்கிறது. அதனால் இதை வணங்கலாமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதில் தருகிறார் சுவாமி சித்பவானந்தர். கருடன் என்ன உண்கிறது என்பது முக்கியமல்ல. அதன் தன்மைகளைத் தான் ஆராய வேண்டும். தென்னை மரம் சாக்கடை நீரில் வளர்ந்தாலும் இனிப்பான இளநீரை தருகிறது. கருடனை கண்டதும் விஷ்ணுவின் ஞாபகம் மட்டுமே பக்தனுக்கு வர வேண்டும். பிற உயிர்களுக்கு துன்பமிழைக்கும் ஒரு உயிரிடம் கூட கடவுளைக் காண வேண்டும் என்ற உயரிய தத்துவம் இதன் மூலம் விளக்கப்படுகிறது. இந்த தத்துவங்களைத் தான் உணர வேண்டுமே தவிர, தேவையற்ற சிந்தனையை தவிர்க்கலாமே.