கடவுளுக்கு நாம் யாகம் செய்கிறோம். இதில் இடம்பெறும், நெய், வஸ்திரம் போன்ற திரவியங்களை (அவிர்பாகம்) தேவலோகத்தில் சேர்க்கும் பொறுப்பு அக்னிபகவானை சேர்ந்தது. நெய் சொரிந்து யாகம் நடத்துவதால், ஒரு சமயம் அக்னிக்கு அஜீரணம் உண்டானது. நோய் குணமாக விஷ்ணுவை வழிபட, அவர் அக்னியை நீராக மாற்றினார். குளிர்ச்சியால் குணம் பெற்ற அக்னி பூலோகத்தை வந்தடைந்தார். உத்ராஞ்சல் மாநிலம், பத்ரிநாத்தில் உஷ்ண குண்டம் என்னும் பெயரில் உள்ள இக் குளத்தை வழிபட்டால் ஆரோக்கியம் உண்டாகும்.