துறவியான ஷீரடி சாய்பாபா தட்சணையாக பணம் ஏன் கேட்கிறார்? என்ற சந்தேகம் பலருக்கு வந்தது. அதற்கு பாபா, பெருந்தன்மையுடன் பணம் கொடுங்கள். இதன் மூலம் தீய குணம் விலகி, மனம் தூய்மை பெறும்” என விளக்கம் அளித்தார். ஒரு முறை தர்கட் என்ற பெண்ணிடம் ஆறு ரூபாய் தட்சணை கேட்டார். அதற்கு காரணம் காமம், கோபம், பேராசை, பொறாமை, சூது, கஞ்சத்தனம் என்னும் ஆறு பகைவர்களையும் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காகவே. புகழ் மிக்க மராத்தி நடிகர் கணபதிராவ் போடஸ் தன் சுய சரிதையில் ஷீரடி பாபாவை பற்றி, என்னிடம் பாபா திரும்பத் திரும்ப தட்சணை கேட்டார். அதனால் என் பணப்பையே காலியானது. பிற்காலத்தில் அதுவே பத்து மடங்காகப் பெருகி, என்னிடமே திரும்பி வந்தது” என குறிப்பிட்டுள்ளார்.