விஷ்ணு பக்தன் பத்மாட்சன் தவ வாழ்வில் ஈடுபட்டான். அவனுக்கு காட்சியளித்த விஷ்ணு, வரம் தருவதாக சொல்ல, மன்னனும் தனக்கு மகளாக மகாலட்சுமி பிறக்க வேண்டும் எனக் கேட்டான். பத்மாட்சனிடம் ஒரு மாதுளங்கனியைக் கொடுத்த விஷ்ணு, உன் விருப்பம் விரைவில் நிறைவேறும் என அருள்புரிந்தார். கனி பெரிதாக வளரத் தொடங்கியது. வியப்புடன் அதை பிளந்தபோது, அதில் ஒருபுறம் மாதுளை முத்துக்களும், மறுபுறத்தில் பேரழகு மிக்க பெண் குழந்தையும் இருக்க கண்டான். தாமரை மலர் போல சிரித்த முகத்துடன் இருந்த குழந்தைக்கு பத்மை என்று பெயரிட்டான். பூஜையில் மாதுளம் பழம் இருந்தால் மகாலட்சுமி மகிழ்ந்து அருள்வாள் என்பது ஐதீகம்.