குழந்தைகள், கணவர் கெட்ட வழக்கங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் திருந்தி நற்குணங்கள் பெறுவதற்காக, பெண்கள் கார்த்திகை விரதம் மேற்கொள்ளலாம். திருக்கார்த்திகை தொடங்கி, ஓராண்டுக்கு மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் இருண்ட வீட்டிற்கு ஒளி கிடைப்பது போல, தவறை உணர்ந்து திருந்தி வாழ்விலும் வெளிச்சம் வரும்.