Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மூன்றாவதாயிரம் பகுதி-2 மூன்றாவதாயிரம் பகுதி-2
முதல் பக்கம் » மூன்றாவதாயிரம்
மூன்றாவதாயிரம் பகுதி-1
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 டிச
2011
03:12

பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி

இயற்பா: பொய்கையாழ்வார் காஞ்சீபுரத்தில், ஒரு பொய்கையிலுள்ள தாமரை மலரில் தோன்றினார். அப்பொய்கை யதோக்தகாரி சன்னதி அருகில் உள்ளது. இவர் ஐப்பசித் திருவோணத்தில் பிறந்தார். அடியவர்கள் வாழ அருளிய இப்பிரபந்தம் அந்தாதித் தொடரில் அமைந்துள்ளது.

முதல் திருமொழி

தனியன்

முதலியாண்டான் அருளிச்செய்தது

நேரிசை வெண்பா

அடியவர்கள் வாழ இயற்றினார் பொய்கையார்

கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த,
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு-வையத்து
அடியவர்கள் வாழ அருந்தமிழந் தாதி,
படிவிளங்கச் செய்தான் பரிந்து.

இடர் நீங்க இப்பாமாலை சூட்டினேன்

2082. வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.

எல்லாவற்றையும் படைத்தவன் நீ

2083. என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.

நீ கண்ட நெறியை நான் அறியேன்

2084. பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்,
நீயளவு கண்ட நெறி.

ஐம்பொறிகளை அடக்கினால் உன்னை அறியலாம்

2085. நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, - அறிவானாம்
ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,
ஆலமமர் கண்டத் தரன்.

அரனும் அரியும் ஒருவனே

2086. அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,
உரைநூல் மறையுறையும் கோயில், - வரைநீர்
கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,
உருவமெரி கார்மேனி ஒன்று.

பகவானை மறப்பேனோ?

2087. ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.

எல்லாம் படைத்தவன் கண்ணன்

2088. திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்
திசையுங்க் கருமங்க ளெல்லாம் - அசைவில்சீர்க்
கண்ணன் நெடுமால் கடல்கடைந்த,
காரோத வண்ணன் படைத்த மயக்கு.

போரில் சூரியனை மறைத்தவன்

2089. மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்
தியங்கும் எறிகதிரோன் றன்னை, - முயங்கமருள்
தோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே,
போராழிக் கையால் பொருது?

வராகாவதாரம் எடுத்தவன்

2090. பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்
ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,
மாவடிவின் நீயளந்த மண்?

மண்ணும் விண்ணும் விழுங்கியவன்

2091. மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில்
அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்
வுலகளவு முண்டோவுன் வாய்?

திருமாலையே வாழ்த்தித் தொழுவேன்

2092. வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை யல்லது  தாந்தொழா - பேய்முலைநஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேரல்லால்
காணாகண் கேளா செவி.

வராகனே எல்லாம் ஆனவன்

2093. செவிவாய் கண்மூக் குடலென் றைம்புலனும்
செந்தீபுவிகால் நீர்வண் பூதமைந்தும் -அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமுமென்பரே
ஏனமாய் நின்றாற் கியல்வு.

ஆதியாய் நின்றவர் திருமாலே

2094. இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,
முயல்வார் இயலமரர் முன்னம், - இயல்வாக
நீதியா லோதி நியமங்க ளால்பரவ,
ஆதியாய் நின்றார் அவர்.

உலகளந்தவர் உருவமே ஆதியானது

2095. அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி, இவரிவ
ரெம்பெருமா னென்று, - சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த
மூர்த்தி யுருவே முதல்.

மூவரில் முதல்வன் கடல் வண்ணனே

2096. முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்
முதலாவான் மூரிநீர் வண்ணன், - முதலாய
நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,
பல்லார் அருளும் பழுது.

அரவணைத் துயில்பவனையே தொழுதேன்

2097. பழுதே பலபகலும் போயினவென்று , அஞ்சி
அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன்,
கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண்
அடலோத வண்ணர் அடி.

திரிவிக்கிரமன் உலகளந்த விதம்

2098. அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல,
முடியும் விசும்பளந் ததென்பர், - வடியுகிரால்
ஈர்ந்தான் இரணியன தாகம், இருஞ்சிறைப்புள்
ஊர்ந்தா னுலகளந்த நான்று

கண்ணபிரானின் திருவிளையாடல்கள்

2099. நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்
தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி,
பொருது டைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,
மருதிடைபோய் மண்ணளந்த மால்.

கடலே! நீ என்ன தவம் செய்தாய்!

2100. மாலுங் கருங்கடலே என்நோற்றாய், வையகமுண்
டாலின் இலைத்துயின்ற ஆழியான், - கோலக்
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும்
திருமேனி நீதீண்டப் பெற்று.

செங்கண்மால் திருவடிகளையே யாவரும் வணங்குவர்

2101. பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய்,
செற்றார் படிகடந்த செங்கண்மால், - நற்றா
மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி,
நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று.

மனமே! பகவானின் திருவடிகளையே அடைந்திடு

2102. நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்,
சென்று திசையளந்த செங்கண்மாற்கு, - என்றும்
படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்,
அடையாழி நெஞ்சே அறி.

கண்ணா! உன் லீலைகளை உலகமே அறியும்

2103. அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்,
பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய், - வெறிகமழும்
காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை,
தாம்பேகொண் டார்த்த தழும்பு.

மாலே! உன் அடையாளம் எங்கும் உள்ளது

2104. தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை,
தழும்பிருந்த தாள்சகடம் சாடி, - தழும்பிருந்த
பூங்கோதை யாள்வெருவப் பொன்பெயரோன் மார்ப்பிடந்த,
வீங்கோத வண்ணர் விரல்.

கண்ணா! என்னே நின் திருவிளையாடல்!

2105. விரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு, ஆய்ச்சி
உரலோ டுறப்பிணித்த ஞான்று - குரலோவா
தோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே?
ஓங்கோத வண்ணா. உரை.

திருமாலையே என் உள்ளம் துதிக்கும்

2106. உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரைமேல் மரகதமே போல, - திரைமேல்
கிடந்தானைக் கீண்டானை, கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி யெழும்.

திருவேங்கடமலையே தேவர் நினைக்கும் மலை

2107. எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை,
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவார்,
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்
மனச்சுடரைத் தூண்டும் மலை.

திருமால் திருக்கைகளின் தீரச்செயல்கள்

2108. மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து,
சிலையால் மராமரமேழ் செற்று, - கொலையானைப்
போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
காக்கோடு பற்றியான் கை.

எல்லோரும் உன் உடலில் கூறுகள்

2109. கைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத்
தைய மலர்மகள்நின் னாகத்தாள், - செய்ய
மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த
இறையான்நின் ஆகத் திறை.

செங்கண்மாலே எல்லாமானவன்

2110. இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்,
அறைபுனலும் செந்தீயு மாவான், - பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த,
செங்கண்மால் கண்டாய் தெளி.

திருத்துழாயான் திருவடிகளையே பெரியோர் நாடுவர்

2111. தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை, - எளிதாகத்
தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே,
போய்நாடிக் கொள்ளும் புரிந்து.

அரியின் அடிகளையே எண்ணுக

2112. புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி,
அரியுருவும் ஆளுருவுமாகி, - எரியுருவ
வண்ணத்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால்,மற்
றெண்ணத்தா னாமோ இமை?

அரவணையானை எல்லாத் தேவர்களும் நினைவர்

2113. இமையாத கண்ணால் இருளகல நோக்கி,
அமையாப் பொறிபுலன்க ளைந்தும் - நமையாமல்,
ஆகத் தணைப்பா ரணைவரே, ஆயிரவாய்
நாகத் தணையான் நகர்.

வேதங்களை அருளியவன் பெயரையே நினைக

2114. நகர மருள்புரிந்து நான்முகற்கு, பூமேல்
பகர மறைபயந்த பண்பன், - பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும்,
அந்தியா லாம்பனங் கென்?

கண்ணா! நீ யசோதையிடம் பால் குடித்தது உண்மையா?

2115. என்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு ஆலிலையில்
முன்னொருவ னாய முகில்வண்ணா, - நின்னுருகிப்
பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலைதந்த ஆறு?

நெடுமாலே! எங்கள் சொற்குற்றங்களை மன்னித்துவிடு

2116. ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்,
கூறிய குற்றமாக் கொள்ளல்நீ - தேறி,
நெடியோய் அடியடைதற் கன்றே,ஈ ரைந்து
முடியான் படைத்த முரண்?

மாவலியிடம் மண் வேண்டிய மாயம் என்னே!

2117. முரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம்
தரணி தனதாகத் தானே - இரணியனைப்
புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ
மண்ணிரந்து கொண்ட வகை?

திருமால் உகந்த ஊர் திருப்பதியே

2118. வகையறு நுண்கேள்வி வாய்வார்கள், நாளும்
புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, - திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்த வூர்.

திருமால் வாழுமிடம் திருவேங்கடமே

2119. ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,
பேர எறிந்த பெருமணியை, - காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்
என்னென்ற மால திடம்.

நாரணன் செய்த செயல்கள் எத்துணை!

2120. இடந்தது பூமி எடுத்தது குன்றம்,
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, - கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,
பேரோத வண்ணர் பெரிது.

வேங்கடமே திருமாலின் குன்று

2121. பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ
வெருவிப் புனம்துறந்த வேழம், - இருவிசும்பில்
மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர்
கோன்வீழ கண்டுகந்தான் குன்று.

குற்றங்களையும் குணமாகக் கொள்பவன் ஆழியான்

2122. குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே, - என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு.

திருமால் திருமகளையே பெரிதும் நினைக்கின்றார்

2123. திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், - திருமகள்மேல்
பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,
மாலோத வண்ணர் மனம்?

திருத்துழாயானைப் பூசித்தால் மனமாசு தீரும்

2124. மனமாசு தீரு மறுவி னையும் சார,
தனமாய தானேகை கூடும், - புனமேய
பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி,
தாம்தொழா நிற்பார் தமர்.

அடியார்கள் உகந்த உருவம் கொண்டவன் பகவான்

2125. தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், - தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
அவ்வண்ணம் அழியா னாம்.

மனமே! பரமனின் பண்பை நாமே அறியலாம்

2126. ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க,
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, - பூமேய
மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை,
பாதமத்தா லேண்ணினான் பண்பு.

யாவரும் அரியின் அடிகளையே பணிவர்

2127. பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற,
வெண்புரிநூல் மார்பன் வினைதீர, - புண்புரிந்த
ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம்
போகத்தால் பூமியாள் வார்.

பகவானின் திருவடிகளை மெய்ஞ்ஞானத்தவரே காண்பர்

2128. வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்,
சேரி திரியாமல் செந்நிறீஇ, - கூரிய
மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள்
கைந்நாகம் காத்தான் கழல்.

நெஞ்சே ! ஆழியான் அடிசேர மகிழ்ச்சி கொள்

2129. கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,
சுழலும் சுராசுரர்க ளஞ்ச, - அழலும்
செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,
மருவாழி நெஞ்சே மகிழ்.

பகவானை அடையப் பல முயற்சிகள் வேண்டும்

2130. மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை,
நெகிழ முயல்கிற்பார்க் கல்லால், - முகில்விரிந்த
சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடி,எம்
ஆதிகாண் பார்க்கு மரிது.

புலனடக்கிப் பூசித்தால் ஆழியானைக் காணலாம்

2131. அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம்
பரியப் பரிசினால் புல்கில், - பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர்
ஏற்றானைக் காண்ப தெளிது.

நரசிம்மன் என்ற பெயரை நினை

2132. எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்
தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, - களியில்
பொருந்தா தவனைப் பொரலுற்று , அரியாய்
இருந்தான் திருநாமம் எண்.

யாவரும் எப்போதும் திருமாலைத் தொழுவர்

2133. எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்,
வண்ண மலரேந்தி வைகலும், - நண்ணி
ஒருமாலை யால்பரவி ஓவாது,எப் போதும்
திருமாலைக் கைதொழுவர் சென்று.

ஆதிசேஷனின் தொண்டு

2134. சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள், - என்றும்
புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற் கரவு.

திருமால் செய்த அருஞ்செயல்கள்

2135. அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்
குரவை குடம்முலைமல் குன்றம், - கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண்
டட்டெடுத்த செங்கண் அவன்.

பக்தர்கட்குத் துன்பமே வராது

2136. அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன்
அவன்தமரே யென்றொழிவ தல்லால், - நமன்தமரால்
ஆராயப் பட் டறியார் கண்டீர், அரவணைமேல்
பேராயற் காட்பட்டார் பேர்.

எம்மானை யாரே அறிவார்?

2137. பேரே வரப்பி தற்றல் அல்லாலெம் பெம்மானை,
ஆரே அறிவார்? அதுநிற்க, - நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன்
அடிக்கமலந் தன்னை அயன்.

நமோ நாரணா! என்று சொல்லக் கற்றேன்

2138. அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி,
உயநின் திருவடியே சேர்வான், - நயநின்ற
நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்,
சொன்மாலை கற்றேன் தொழுது.

மனமே! பரமனைத் தொழு எழு

2139. தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி,
எழுதும் எழுவாழி நெஞ்சே, - பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்,
அந்தரமொன் றில்லை அடை.

துன்பங்கள் தீரப் பரமனடி சேர்

2140. அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்,
மிடைந்தவை மீண்டொழிய வேண்டில், - நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள்
தன்விலங்கை வைத்தான் சரண்.

உலகம் ஆழியானையே அறியும்

2141. சரணா மறைபயந்த தாமரையா னோடு,
மரணாய மன்னுயிர்கட் கெல்லாம், - அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது,
ஓராழி சூழ்ந்த வுலகு.

திருமாலின் படைப்பே யாவையும்

2142. உலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும், - உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன்
புந்தியி லாய புணர்ப்பு.

அரவணையானுடைய தோளின் செயல்கள்

2143. புணர்மருதி னூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து,
மணமருவ மால் விடையேழ் செற்று, - கணம்வெருவ
ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும்,
சூழரவப் பொங்கணையான் தோள்.

என் அவயங்கள் பரமன் தொடர்பையே நாடும்

2144. தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும்,
கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், - நாநாளும்
கோணா கணையான் கூரைகழலே கூறுவதே,
நாணாமை நள்ளேன் நயம்.

திருமாலையே நான் துதிப்பேன்

2145. நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,
உயவேன் உயர்ந்தவரோ டல்லால், - வியவேன்
திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,
வருமாறென் நம்மேல் வினை?

பகவானை வணங்குவோர் அடையும் பயன்கள்

2146. வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்,
தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், - நினைதற்
கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட்
கரியானைக் கைதொழுதக் கால்.

திருமாலின் திருநாமத்தைக் கற்று ஓது

2147. காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த
மேலைத் தலைமறையோர் வேட்பனவும், - வேலைக்கண்
ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்,
பேராழி கொண்டான் பெயர்.

மலர்மகள் மணாளனையே நம் உணர்வு நோக்கும்

2148. பெயரும் கருங் கடலே நோக்குமாறு, ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும்
தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்,
ஒருவனையே நோக்கும் உணர்வு.

பகவானே! உன் பெருமைகளை உணர்பவர் யார்?

2149. உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி,
உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்
பண்ணகத்தாய் நீகிடந்த பால்?

நீ படுத்திருந்த ஆலிலை தாங்கிய மரம் எங்குள்ளது?

2150. பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின்
மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், - ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ?
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு.

திருமாலையே மந்திரத்தால் சொல்லு

2151. சொல்லுந் தனையும் தொழுமின் விழுமு டம்பு,
சொல்லுந் தனையும் திருமாலை, - நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்,
நாமத்தால் ஏத்திதிரேல் நன்று.

நெஞ்சமே! அவனன்பையே வேண்டினேன்

2152. நன்றுபி ணிமூப்புக் கையகற்றி நான்கூழி,
நின்று நிலமுழுதும் ஆண்டாலும்,- என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்,
அடலாழி கொண்டான்மாட் டன்பு.

என் அவயவங்கள் ஆழியானையே அணுகுகின்றன

2153. அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன்
பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், - முன்பூழி
காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்
பூணாரம் பூண்டான் புகழ்.

மனமே! துழாயானையே கருது

2154. புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை,
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, - திகழ்நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்,
உடலும் உயிருமேற்றான்.

பகவானே யாவருக்கும் காவல்

2155. ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், - கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு.

திருமாலைச் சிந்திப்பவர்க்குத் துன்பமே இல்லை

2156. காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள்,
ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னைச்
சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி.

பரமபதம் அளிக்கும் இடம் வேங்கடம்

2157. வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா
மொழிநின்ற மூர்த்தியரே யாவர், - பழுதொன்றும்
வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த
சீரான் திருவேங் கடம்.

பகவானே என்றால் துன்பம் நீங்கும்

2158. வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,
என்றால் கெடுமாம் இடர்.

பரமனின் தாள்களைத் தொழு

2159. இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்
தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, - படமுடை
பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,
கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.

பழிப்பது யாரை?

2160. கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்,
மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்
ஆரங்கை தோய அடுத்து?

மாமேனி மாயவனுக்கே அடிமையாகு

2161. அடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி,
படுத்த பொரும்பாழி சூழ்ந்த - விடத்தரவை,
வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு,
அல்லாதும் ஆவரோ ஆள்?

பரமன் பெயரே நரகத்தைத் துரத்தும்

2162. ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று,
வாளமர் வேண்டி வரைநட்டு, - நீளரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப்
பற்றிக் கடத்தும் படை?

இராமபிரானுக்குரிய மலை வேங்கடமே

2163. படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந்
தொடையலோ டேந்திய தூபம், - இடையிடையின்
மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள்
மான்மாய எய்தான் வரை.

பசுக்களைக் காத்து ஏழு காளைகளை எதிர்த்தாயே!

2164. வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர்
நிரைவிடையேழ் செற்றவா றென்னே, - உரவுடைய
நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல்,
பேராழி கொண்ட பிரான்?

எம்பிரானே! உன் பெருமை யாரறிவார்?

2165. பிரான்உன் பெருமை பிறரா ரறிவார்?,
உராஅ யுலகளந்த ஞான்று, - வராகத்
தெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை
அடிக்களவு போந்த படி?

மனமே! நீ எங்ஙனம் பாம்பணையானைக் கண்டுகொள்வாய்

2166. படிகண் டறிதியே பாம்பணையி னான்,புட்
கொடிகண் டறிதியே? கூறாய், - வடிவில்
பொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி,
நெறிநின்ற நெஞ்சமே நீ.

திருக்கோவலூரில் திருமால் நின்ற பான்மை

2167. நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா, - வாயில்
கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி யினி .

பரமனைக் காண வழி கிடைத்துவிட்டது: இனி நரகமில்லை

2168. இனியார் புகுவா ரெழுநரக வாசல்?
முனியாது மூரித்தாள் கோமின், - கனிசாயக்
கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு,
நன்கறிந்த நாவலம்சூழ் நாடு.

ஆழியான் அடிகளையே நாடிச் சூடுவேன்

2169. நாடிலும் நின்னடியே நாடுவன், நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன், சூடிலும்
பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு,
என்னாகி லென்னே எனக்கு?

பரமன் அருளாலேயே பரமனைக் காணலாம்

2170. எனக்கா வாரா ரொருவரே, எம்பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால், - புனக்காயாம்
பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ,
மாமேனி காட்டும் வரம்.

மாதவ! நீ இரணியனைப் பிளந்த பான்மை சிறந்தது

2171. வரத்தால் வலிநினைந்து மாதவநின் பாதம்,
சிரத்தால் வணங்கானா மென்றே, - உரத்தினால்
ஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை,
ஓரரியாய் நீயிடந்த தூன்?

பரமனே! நின் அடிசேராதார்க்குச் சுவர்க்கம் இல்லை

2172. ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,
ஞானச் சுடர்கொளீஇ நாடோறும், - ஏனத்
துருவா யுலகிடந்த வூழியான் பாதம்,
மருவாதார்க் குண்டாமோ வான்.

பகவானே! வெண்ணெயால் உன் வயிறு நிரம்பியதே!

2173. வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே, - ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு.

ஆழியானே! நீ இரணியனைப் பிளந்தது பிரமாதம்!

2174. வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக வாய்மடுத்த தென்நீ, - பொறியுகிரால்
பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின்
சேவடிமே லீடழியச் செற்று.

பரமனே! உன்னையே என் நாக்கு ஏத்தும்

2175. செற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும்,
மற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்,
இறையேனும் ஏத்தாதென் நா.

நமோ நாராயணா என்பதே சிறந்த மந்திரம்

2176. நாவாயி லுண்டே நமோநார ணா என்று,
ஓவா துரைக்கு முரையுண்டே, - மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர்
தீக்கதிக்கட் செல்லும் திறம்.

செங்கண்மாலே எல்லாம் ஆவான்

2177. திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய்,
அறம்பாவ மென்றிரண்டு மாவான், - புறந்தானிம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே,
கண்டாய் கடைக்கட் பிடி.

பரமனே! யாவரும் நின்னருளையே நாடுவர்

2178. பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்
அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, - பொடிசேர்
அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,
புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்.

அரியும் சிவனும் ஒருவரே

2179. பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,
நின்றுலகம் தாய நெடுமாலும், - என்றும்
இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்
ஒருவனங்கத் தென்று முளன்.

உள்ளத்தில் உள்ளவன் திருமாலே

2180. உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்
உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் - துளன்கண்டாய்,
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தி னுள்ளனென் றோர்.

மனத்தில் மாயவனையே வைத்திடு

2181. ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,
ஈரடியும் காணலா மென்னெஞ்சே. - ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,
மாயவனை யேமனத்து வை.

பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்

பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி

முதலாழ்வார்களில் நடுநாயகமாக விளங்குகிறவர் பூதத்தாழ்வார். இவர் மாமல்லபுரம் என்ற திருக்கடல்மல்லையில் மாதவிப் பந்தலில் உள்ள ஒரு குருக்கத்தி மலரில் தோன்றினார்; எம்பெருமானின் குணங்களைச் சொல்லிக்கொண்டே ஸத்தைப் பெற்றவர். இவரது நட்சத்திரம் ஐப்பசி அவிட்டம். இவர் அன்பைத் தகளியாகவும், ஆர்வத்தை நெய்யாகவும், பகவானைப் பற்றிய சிந்தையை இடுதிரியாகவும் கொண்டு ஞான விளக்கு ஏற்றியவர். இவரும் ஒரு யோகியாக விளங்கினார்.

தனியன்

திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்தது

நேரிசை வெண்பா

பூதத்தாழ்வார் திருவடிகளை வணங்கினேன்

என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை-நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங் கழல்.

ஞான விளக்கை நான் ஏற்றினேன்

2182.அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.

நாரணன் பேர் சொன்னால் தேவராகலாம்

2183. ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்
தணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நாங்கள்
பணியமரர் கோமான் பரிசு.

பரமன் பாதம் பணிவோர் புகழ் பெறுவர்

2184. பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,
புரிவார் புகழ்பெறுவர் போலாம், - புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர்.

மலர்கொண்டு பணிந்தேன்

2185. நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,
அங்கம்வலம் கொண்டான் அடி.

திருமாலே! நின்னடி எங்குள்ளது?

2186. அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய், - படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அறிந்து.

ஐம்புலனடக்கி அருச்சித்தால் அவனடி காணலாம்

2187. அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்
செறிந்த மனத்தராய்ச் செவ்வே, - அறிந்தவன்றன்
பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,
காரோத வண்ணன் கழல்.

ஆழியான் மலரடியை நினை

2188. கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த
போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை
ஓராழி நெஞ்சே உகந்து.

பேய்ச்சியிடம் பாலுண்ட பான்மை என்னே!

2189. உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை
அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, - உகந்து
முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்
அலைபண்பா லானமையால் அன்று.

யசோதைக்கு என்ன கைம்மாறு உண்டு?

2190. அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,
நின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று
வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,
பெருமுறையா லெய்துமோ பேர்த்து.

உயிர்க் காவலன் நீயே

2191. பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து
காத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய
நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
காவடியேன் பட்ட கடை.

நெடுமாலே ! நின்னை வணங்கினால் பேரின்பம் கிட்டும்

2192. கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
ஆரோத வல்லார் அவர்.

அரவணையான் பாதமே ஏத்து

2193. அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,
எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும்
செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து.

கஜேந்திரன் பேரருள் பெற்றானே!

2194. தொடரெடுத்த மால்யானை சூழ்கயம் புக்கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம் பு கொண்டு,அன் - றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு.

மக்களே! பரமனை வணங்கிப் பரிசுத்தம் அடையுங்கள்

2195. பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம்
கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, - எண்டிசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து.

தேரோட்டி, மானைத் துரத்தினான்: ஓய்வு தேவை தானே!

2196. திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று
பிரிந்தது சீதையைமான் பின்போய், - புரிந்ததுவும்
கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்
தண்பள்ளி கொள்வான் றனக்கு.

மனத்தில் திருமாலை வை

2197. தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை, - வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,
மாரியார் பெய்கிற்பார் மற்று.

குறைதீர்ப்பவன் திருமால்

2198. மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன்,
சுற்றும் வணங்கும் தொழிலானை, - ஒற்றைப்
பிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று, மாலைக்
குறையிரந்து தான்முடித்தான் கொண்டு.

தாமரைக் கண் மால் செய்த செயல்கள்

2199. கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,
ஒண்டிற லோன் மார்வத் துகிர்வைத்தது - உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,
வான்கடந்தான் செய்த வழக்கு.

சகடாசுரனை வென்றாயே

2200. வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,
வழக்கொன்று நீமதிக்க வேண்டா, - குழக்கன்று
தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,
பார்விளங்கச் செய்தாய் பழி.

நாரணன் நாமங்களை ஏத்தி பெறுக

2201. பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, - வழுவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,
காரணங்கள் தாமுடையார் தாம்.

வாமனன் தாள் சேர்ந்தால் நரகம் இல்லை

2202. தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின்
பூவுளதே யேத்தும் பொழுதுண்டே, - வாமன்
திருமருவு தாள்மரூவு சென்னியரே, செவ்வே
அருநரகம் சேர்வ தரிது.

முயன்றால் பரமன் அருள் கிட்டும்

2203. அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து.

ஞாலம் அளந்தவன் யாவரையும் வாழ்விப்பான்

2204. தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும், - தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம்
அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன்.

பஞ்ச பூதங்களாகவும் இருப்பவன் பரமனே

2205. அவன்கண்டாய் நன்னெஞ்சே ஆரருளும் கேடும்,
அவன்கண்டா யைம்புலனாய் நின்றான், - அவன்கண்டாய்
காற்றுத்தீ நீர்வான் கருவ ரைமண் காரோத,
சீற்றத்தீ யாவானும் சென்று.

இராமபிரான் நின்ற இடம் வேங்கடமே

2206. சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,
கொன்ற திராவணனைக் கூறுங்கால், - நின்றதுவும்
வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்
வாயோங்கு தொல்புகழான் வந்து.

தேவர்கட்கும் வாழ்வளிப்பவன் பரமனே

2207. வந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய், - உந்திப்
படியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த,
படியமரர் வாழும் பதி.

மனம் திருமாலையே தேடியோட வேண்டும்

2208. பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,
மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி - கதிமிகுத்தங்
கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,
மால்தேடி யோடும் மனம்.

கண்ணனே வேங்கடத்திலும் அரங்கத்திலும் உள்ளான்

2209. மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன்.

இலங்கையை அழித்தவனே கண்ணன்

2210. மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,
அகனார வுண்பனென் றுண்டு, - மகனைத்தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை
நீறாக எய்தழித்தாய் நீ.

திருமாலின் திருவிளையாடல்கள்

2211. நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே,
நீயன் றுலகிடந்தா யென்பரால், - நீயன்று
காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை,
பேரோத மேனிப் பிரான்.

அருச்சனை செய்தால் அரியின் உருவைக் காணலாம்

2212. பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,
குராநல் செழும்போது கொண்டு, - வராகத்
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து.

திருமாலே! நின்னைப் போற்றி மகிழ்வுற்றேன்

2213. மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, - மகிழ்ந்த
தழலாழி சங்க மவைபாடி யாடும்,
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து.

வேங்கடவனையே நான் பணிந்தேன்

2214. துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்
அணிந்தவன்பே ருள்ளத்துப் பல் கால், - பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,
வாய்திறங்கள் சொல்லும் வகை.

என் பாக்கியத்தால் உனக்கு அடிமைப் பட்டேன்

2215. வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,
புகையால் நறுமலாரால் முன்னே, - மிகவாய்ந்த
அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு,
என்பாக்கி யத்தால் இனி.

நின் பெருமையை விரும்பினால் ÷க்ஷமம் உண்டாகும்

2216. இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,
இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், - இனிதென்று
காமநீர் வேளாது நின்பெரு மை வேட்பரேல்,
சேமநீ ராகும் சிறிது.

மனமே! மண்ணுண்டானையே நினை

2217. சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,
அறியாரும் தாமறியா ராவர், - அறியாமை
மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,
எண்கொண்டேன் னெஞ்சே. இரு.

பாவங்கள் நீங்கும் வழி நின்னைப் பணிதலே

2218. இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,
திருந்து திசைமுகனைத் தந்தாய், - பொருந்தியநின்
பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்
ஏதங்க ளெல்லா மெமக்கு.

எப்போதும் மாதவன் பேர் ஓது

2219. எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,
தமக்கென்றும் சார்வ மறிந்து , - நமக்கென்றும்
மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லோத்து.

வேதம் ஓதுக; இல்லையேல் மாதவன் பேர் ஓதுக

2220. ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே,
உத்தமன்பேர் ஏத்தும் திறமறிமி னேழைகாள்,- ஓத்தனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.

விரைவில் திருமாலை நினையுங்கள்

2221. சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்
நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், - திருப்பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத
போகத்தா லில்லை பொருள்.

மணிவண்ணன் பாதங்களை நினை

2222. பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளா லறமருளு மன்றே, - அருளாலே
மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,
நீமறவேல் நெஞ்சே நினை.

திருமாலையே யான் என்றும் நினைப்பேன்

2223. நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், - மனைப்பால்
பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்,
துறந்தார் தொழுதாரத் தோள்.

வீராதி வீரனும் முடிவில் பரமனடியில் வீழ்வான்

2224. தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,
தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், - தாளிரண்டும்,
ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே என்
சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு?

மாதவன் பேரையே ஓதி நினை

2225. சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,
மறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும்
மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லுள்ளு.

யாவரும் வேங்கடவனையே வணங்குவர்

2226. உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று,
தளர்தல் அதனருகும் சாரார், - அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பயின்று.

திருமால் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள்

2227. பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே
மணிதிகழும் வண்தடக்கை மால்.

அரியின் பாதம் தொழுது எழுமின்

2228. மாலை யரியுருவன் பாத மலரணிந்து,
காலை தொழுதெழுமின் கைகோலி, - ஞாலம்
அளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்
உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து.

திருமாலிருஞ் சோலையைத் திருமால் விரும்பினான்

2229. உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள்தோள் மாலே. - மணந்தாய்போய்
வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,
மாயிருஞ் சோலை மலை.

நெஞ்சே! கண்ணனையே அழை

2230. மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,
குலைசூழ் குரைகடல்க ளேழும், - முலைசூழ்ந்த
நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று,
அஞ்சாதென் னெஞ்சே அழை.

திருமாலே ஆயவனும் யாதவனும்

2231. அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,
பிழைப்பில் பெரும்பெயரே பேசி, - இழைப்பரிய
ஆயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்,
மாயவனே என்று மதித்து.

ஆழிவண்ணன் பாதத்தை நினை

2232. மதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்,
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை, - மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த
நீராழி வண்ணன் நிறம்.

திருமாலை உள்ளவாறு அறிவார் யார்?

2233. நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்,
அறம்பெரிய னார தறிவார்? – மறம்புரிந்த
வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து ,
நீளிருக்கைக் குய்த்தான் நெறி.

நாம் விரும்புவது திருவேங்கடமே

2234. நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து,
அறியா திளங்கிரியென் றெண்ணி, - பிறியாது
பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்,
வேங்கடமே யாம்விரும்பும் வெற்பு.

திருமாலை உள்ளத்தே இருத்தினேன்

2235. வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்
நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல், - நிற்பென்
றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், வெள்ளத்
திளங்கோயில் கைவிடேல் என்று.

ஆழியானை என்றும் மறந்தறியேன்

2236. என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
நின்று நினைப்பொழியா நீர்மையால், - வென்றி
அடலாழி கொண்ட அறிவனே, இன்பக்
கடலாழி நீயருளிக் காண்.

திருமகள் திருமாலை அடையாளம் காட்டுவாள்

2237. காணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால்,
நாணப் படுமென்றால் நாணுமே? - பேணிக்
கருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும்,
திருமாலை நாங்கள் திரு.

திருமகள் மணாளனை வாழ்த்துங்கள்

2238. திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்,
கருமம் கடைப்பிடிமின் கண்டீர், - உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்,
நாற்றிசையும் கேட்டீரே நாம்?

ஆழியானையே பாடு

2239. நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி யிருந்தெம்மை ஓதுவித்து, - வேம்பின்
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று,
அருள்நீர்மை தந்த அருள்.

திருமாலை மனமார நோக்கு: அஞ்ஞானம் நீங்கும்

2240. அருள்புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,
பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது, - இருள்திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்,
ஓக்கினே னென்னையுமங் கோர்ந்து.

ஒளியுருவமே நாரணன் உருவம்

2241. ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,
ஈருருவன் என்பர் இருநிலத்தோர், ஓருருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,
நீதியால் மண்காப்பார் நின்று.

திரிவிக்கிரமனைத் துதித்தால் பெரும்பேறு கிட்டும்

2242. நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள்
சென்றளந்த தென்பர் திசையெல்லாம், - அன்று
கருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப்
பிரமாணித் தார்பெற்ற பேறு.

ஆயர்களின் ஏற்றையே வணங்கினேன்

2243. பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்,
மாறென்று சொல்லிவணங்கினேன், ஏறின்
பெருத்தெருத் தம் கோடொசியப் பெண்நசையின் பின்போய்,
எருத்திருந்த நல்லாயர் ஏறு.

ஏழு எருதுகளை அடர்த்தவனே யாவர்க்கும் அருள் செய்பவன்

2244. ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து
ஏறேறிப் பட்ட இடுசாபம் - பாறேறி உண்டதலை
வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி,
கண்டபொருள் சொல்லின் கதை.

கண்ணா! உன்னைப் பாட எனக்கு அருள் செய்

2245. கதையும் பெரும்பொருளும் கண்ணாநின் பேரே,
இதய மிருந்தவையே ஏத்தில், - கதையும்
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்,
பருமொழியால் காணப் பணி.

கண்ணா! நின் சேவடியில் பணிந்தேன்

2246. பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேனுன் சேவடிமே லன்பாய், - துணிந்தேன்
புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே
இருந்தேத்தி வாழும் இது.

நாரணன் பேர் ஓது; நரகம் இல்லை

2247. இதுகண்டாய் நன்னெஞ்சே! இப்பிறவி யாவது,
இதுகண்டா யெல்லாம்நா முற்றது, - இதுகண்டாய்
நாரணன்பே ரோதி நகரத் தருகணையா,
காரணமும் வல்லையேல் காண்.

கனவில் திருமேனி கண்டேன்: வினைகள் ஓடிவிட்டன

2248. கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி.

கண்ணனே பாற்கடல் கடைந்த பரமன்

2249. வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள
வலிமிக்க வாள்வரைமத் தாக, - வலிமிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,
கோணாகம் கொம்பொசித்த கோ.

யாராக இருந்தாலும் திருமாலையே வணங்குவர்

2250. கோவாகி மாநிலம்காத்து,நங்கண்முகப்பே
மாவேகிச் செல்கின்ற மன்னவரும் - பூவேகும்
செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும்,
தண்கமல மேய்ந்தார் தமர்.

எந்தை எழுந்தருளியுள்ள இடங்கள்

2251. தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக் கிடம்.

திரிவிக்கிரமாவதாரத்தின் காட்சி

2252. இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்
றடங்கா ரொடுங்குவித்த தாழி, - விடங்காலும்
தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்,
பூவா ரடிநிமிர்ந்த போது.

திருப்பதியில் வானரங்களும் வேங்கடவனையே பூசிக்கும்

2253. போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் - போது
மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல,
அணிவேங் கடவன்பே ராய்ந்து.

மாலுக்கு அடிமையாகவிரும்பி அருச்சிப்பேன்


2254. ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,
வாய்ந்த மலர்தூவி வைகலும், - ஏய்ந்த
பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்
இறைக்காட் படத்துணிந்த யான்.

தவம் செய்தே இந்தப் பாமாலை பாடினேன்

2255. யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவமுடையேன் எம்பெருமான், - யானே
இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,
பெருந்தமிழன் நல்லேன் பெரிது.

எம்பெருமானின் இருப்பிடம் திருவேங்கடமலை

2256. பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று ,
இருக ணிளமூங்கில் வாங்கி, - அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,
வான்கலந்த வண்ணன் வரை

அறிவன் அடிகளை ஓதிப்பணிக

2257. வரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும்,
விரைப் பொலிந்த வெண்மல் லிகையும் - நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே
ஓதிப் பணிவ தூறும்.

உத்தமன் பெயரை ஓராயிரம் முறை நாள்தோறும் உரை

2258. உறுங்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன்நற் பாதம்,
உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், - உறுங்கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்ஞா றெப்பொழுதும்,
சாற்றி யுரைத்தல் தவம்.

எல்லா மூர்த்திகளும் திருமாலையே வணங்குவர்

2259. தவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி
நிவர்ந்தளப்ப நீட்டியபொற் பாதம், - சிவந்ததன்
கையனைத்து மாரக் கழுவினான், கங்கைநீர்
பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின்.

திருமாலின் செயல்கள் நிகரற்றவை

2260. பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள்
முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் - சொல் நின்ற
தோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த
நீணிலந்தான் அத்தனைக்கும் நேர்.

திருமாலே! நின் சேவடிமேல் அன்பு கொண்டேன்

2261. நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம்,
ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய், - ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல்?

சோதிவடிவு கொண்டவன் திருமால்

2262. பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில்
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்
ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,
வான்திகழும் சோதி வடிவு.

மலர்மங்கை திருமாலை விட்டுப்பிரியமாட்டாள்

2263. வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்
படிக்கோலம் கண்டகலாள் பன்னாள், - அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,
கோலத்தா லில்லை குறை.

பரமன் அருளையே நான் எதிர்பார்த்திருந்தேன்

2264. குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,
மறையாங் கெனவுரைத்த மாலை, - இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்,
மாயன்கண் சென்ற வரம்.

நரசிம்மன் திருவடிகளே உலகத்தில் அமிழ்தம்

2265. வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,
உரம்கருதி மூர்க்கத் தவனை, - நரம்கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,
அங்கண்மா ஞாலத் தமுது.

ஆழியானையே நான் ஏத்தித் தொழுதேன்

2266. அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,
அமுதன்று கொண்டுகந்தான் என்றும், - அமுதன்ன
சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,
நன்மாலை யேத்தி நவின்று.

மேக மணிவண்ணனை நான் எங்ஙனம் காண்பேன்?

2267. நவின்று ரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே
பயின்றதனால் பெற்றபயன் என்கொல், - பயின்றார்தம்
மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்
எத்தவத்தால் காண்பன்கொல் இன்று?

திருக்கோட்டியூர்ப் பெருமானைத் தொழுதேன்

2268. இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச்
சென்றாங் களந்த திருவடியை, - அன்று
கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்,
திருக்கோட்டி எந்தை திறம்.

அரங்கனை வழிபடுவார்க்கே அமரருலகு கிடைக்கும்

2269. திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,
திறம்பா வருசென்றார்க் கல்லால், - திறம்பாச்
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்
கடிநகர வாசற் கதவு.

வாமனனாய் மண் கொண்ட பான்மை என்னே!

2270. கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,
அதவிப்போர் யானை ஒசித்து, - பதவியாய்ப்
பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,
மாணியாய்க் கொண்டிலையே மண்.

எம்பெருமானைத் தொழுவதே பெரும் பேறு

2271. மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, - நண்ணித்
திருமாலை செங்க ணெடியானை, எங்கள்
பெருமானைக் கைதொழுத பின்.

உலகளந்தவன் அடிகளையே வணங்குக

2272. பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்,
முன்னால் வணங்க முயல்மினோ, - பன்னூல்
அளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தை, எல்லாம்
அளந்தா னவஞ்சே வடி.

நெடியானின் திருநாமம் ஏத்துக

2273. அடியால்முன் கஞ்சனைச் செற்று,அமர ரேத்தும்
படியான் கொடிமேல்புள் கொண்டான், - நெடியான்றன்
நாமமே ஏத்துமின்க ளேத்தினால்,தாம்வேண்டும்
காமமே காட்டும் கடிது.

கண்ணனை ஏத்துக: நரகம் இல்லை

2274. கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை,
கொடிதென் றதுகூடா முன்னம், - வடிசங்கம்
கொண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை, கொங்கைநஞ்
சுண்டானை ஏத்துமினோ உற்று.

பாடகத்தானையே ஏத்தித் தொழுமின்

2275. உற்று வணங்கித் தொழுமின், உலகேழும்
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம், - பற்றிப்
பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்
இருந்தானை, ஏத்துமென் நெஞ்சு.

அத்தியூரான் என் உள்ளத்தில் உள்ளான்

2276. என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை
வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், - முன்னம்சேய்
ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்
ஆழியான் அத்தியூ ரான்.

அத்தியூரானே யாவர்க்கும் தலைவன்

2277. அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின்
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ
மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.

தேவர்கட்கெல்லாம் தலைவன் நெடுமால்

2278. எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,
செங்க ணெடுமால் திருமார்பா, - பொங்கு
படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,
குடமூக்கில் கோயிலாக் கொண்டு.

எனது நெஞ்சில் இருப்பவன் கண்ணன்

2279. கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது,
உண்ட துலகேழு முள்ளொடுங்க, - கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை.

தேவர்கள் யாவரும் திருமாலைப் பூசிப்பர்

2280. இறையெம் பெருமான் அருளென்று, இமையோர்
முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, - அறைகழல
சேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய்
மாவடிவில் மண்கொண்டான் மால்.

கண்ணனிடம் யான் கொண்ட அன்பு அளவற்றது

2281. மாலே! நெடியோனே! கண்ணனே, விண்ணவர்க்கு
மேலா! வியந்துழாய்க் கண்ணியனே, - மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு .

பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்

பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி

இத்திருவந்தாதியை அருளியவர் பேயாழ்வார். இவர் சென்னையிலுள்ள மயிலையில், ஒரு கிணற்றிலுள்ள செவ்வல்லிப்பூவில் அவதரித்தார். இவரும் ஒரு யோகி. இவர் பிறந்த நாள் ஐப்பசி மாதச் சதயம். இவரது இப்பிரபந்தம் லக்ஷ்மீகடாட்சம் தரும்.

தனியன்

குருகை காவலப்பன் அருளிச் செய்தது

நேரிசை வெண்பா

மனமே! பேயாழ்வார் திருவடிகளையே போற்று

சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு-ஓராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே
உரைக்கண்டாய் நெஞ்சே! உகந்து

ஆழிவண்ணனை இன்று கண்ணாரக் கண்டேன்

2282. திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்  திகழு
மருக்கனணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பா லின்று

திருமாலே! நின்னைக்கண்டு பெரும்பயன் பெற்றேன்

2283. இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,
பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்று
திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம்.

நரகம் தீர்ப்பவன் திருமாலே

2284. மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், - சினத்துச்
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,
வருநரகம் தீர்க்கும் மருந்து.

செங்கண்மால் திருவடிகளே அருமருந்து

2285. மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும்
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம் தாயோன் அடி.

ஆழியானின் அழகுத் தோற்றம்

2286. அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், - முடிவண்ணம்
ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே
ஆராழி கொண்டாற் கழகு.

ஆழியானின் அழகே அழகு

2287. அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்,
அழகன்றே யண்டம் கடத்தல், - அழகன்றே
அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ,
கங்கைநீர் கான்ற கழல்.

மனமே! கருடவாகனனைத் தொழுவோம்

2288. கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை,
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், - எழிலளந்தங்
கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை,
நண்ணற் கரியானை நாம்.

நாரணன் திருப்பெயர்களைச் சொல்லித் தொழு

2289. நாமம் பலசொல்லி நாராய ணாவென்று,
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. - வா,மருவி
மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,
கண்ணனையே காண்கநங் கண்.

மணிவண்ணன் உறுப்புகள் தாமரையே

2290. கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,
மண்ணளந்த பாதமும் மற்றவையே,- எண்ணில்
கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்,
திருமா மணிவண்ணன் தேசு.

திருமால் பெயரை ஓதினால் எல்லாம் கிடைக்கும்

2291. தேசும் திறலும் திருவும் உருவமும்,
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில்
வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத,
நலம்புரிந்து சென்றடையும் நன்கு.

பகவான் எங்கும் உள்ளான்

2292. நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும்
பொங்கோ தருவிப் புனல்வண்ணன், - சங்கோதப்
பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப்பார்
நூற்கடலான் நுண்ணறிவி னான்.

ஐம்புலன் அடக்கினோர் பரமனைக் காண்பர்

2293. அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,
செறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும்
பைங்கோத வண்ணன் படி.

திரிவிக்கிரமாவதாரத்தின் தோற்றம்

2294. படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,
அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம்,
ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,
மாகாய மாய்நின்ற மாற்கு.

பெண்ணாசையை ஒழி: பரமன் அருள் கிட்டும்

2295. மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,
நூற்பால் மனம்வைக்க நொய்விதாம்,- நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பணிந்து.

அரவணையான் என் மனத்தில் தங்குகிறான்

2296. பணிந்துயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத,
பணிந்த பணிமணிக ளாலே - அணிந்து,அங்
கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்
மனந்த னணைக்கிடக்கும் வந்து.

திருவல்லிக்கேணியான் ஓர் ஒளி விளக்கு

2297. வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக் காம், - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணியான் சென்று.

செங்கண்மாலையே என் வாய் வாழ்த்துக

2298. சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,
என்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,
மறவாது வாழ்த்துகவென் வாய்.

மாலே! நினக்கு அடிமையாக அருள்

2299. வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின் எஞ்சா
இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
அஞ்சா திருக்க அருள்.

பூசனை செய்வார்க்குப் பரமன் அருள் உண்டு

2300. அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,
முந்தையராய் நிற்பார்க்கு முன்.

திருமாலே! நினக்கு எதுவும் அரியதில்லை

2301. முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக
மீரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே? - என்னே
திருமாலே செங்க ணெடியானே, எங்கள்
பெருமானே நீயிதனைப் பேசு.

சக்கரத்தான் வடிவுபற்றி எவ்வளவோ பேசலாம்

2302. பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே
வாச மலர்த்துழாய் மாலையான், - தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு.

மனமே! தேவநாதனை உள்ளபடி காண விரும்பு

2303. வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்
கடியார் மலர்தூவிக் காணும் - படியானை,
செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,
மெய்ம்மையே காண விரும்பு.

திருத்துழாயான் திருவடிகளையே என்மனம் நாடும்

2304. விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு தொளையில்சென் றூத, அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,
மனம்துழாய் மாலாய் வரும்.

மனமே! ஆழியான் அடிகளையே சேர்

2305. வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,
நெருங்குதீ நீருருவு மானான், - பொருந்தும் சுடராழி
யொன்றுடையான் சூழ்கழலே, நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது.

கண்ணனைத் தொழுக: தீங்கில்லை

2306. தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,
முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, - விழுதுண்ட
வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து.

திருத்துழாயான் எழுந்தருளியுள்ள இடங்கள்

2307. சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், - உறைந்ததுவும்,
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே,
தாம்கடவார் தண்டுழா யார்.

உலகுக்குக் காரணமானவனையே அடைக

2308. ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,
காரே மலிந்த கருங் கடலை,- நேரே
கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து.

திருமாலின் திருவிளையாடல்கள்

2309. அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று
மிடைந்தது பாரத வெம்போர், - உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்
பேய்ச்சிபா லுண்ட பிரான்.

கண்ணனைச் சேர்: அச்சமேயில்லை

2310. பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த
இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,
தெருளா மொழியானைச் சேர்ந்து.

திருமால் தங்கியிருக்கும் இடங்கள்

2311. சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, - வாய்ந்த
மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,
இறைபாடி யாய இவை.

நரசிம்மன் வீற்றிருக்கும் கோயில்கள்

2312. இவையவன் கோயில் இரணியன தாகம்,
அவைசெய் தரியுருவ மானான், - செவிதெரியா
நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்
பாகத்தான் பாற்கடலு ளான்.

கோபாலகன் விரும்பிய இடங்கள்

2313. பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,
நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல், - பாற்பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,
குருந்தொசித்த கோபா லகன்.

மாலே! தேவர்கட்கு அமுதம் அளித்தாயே!

2314. பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்
மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, - மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்
அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று.

மனமே! கண்ணனையே காண்

2315. அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், - அன்று
கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்.

கண்ணனையே கண்டு தொழுவோம்

2316. காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு
பூண்டார் அகலத்தான் பொன்மேனி, - பாண்கண்
தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்
கழல்பாடி யாம்தொழுதும் கை.

உலகளந்தவனின் ஐம்படைகள்

2317. கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,
வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய
படைபரவ பாழி பனி நீ ருலகம்,
அடியளந்த மாயன் அவற்கு.

திருமாலுக்கே நான் அடிமை

2318. அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,
உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும்
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,
திகழும் திருமார்வன் தான்.

எல்லாம் திருமாலின் உருவமே

2319. தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்,
தானே தவவுருவும் தாரகையும், - தானே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இறை.

வேங்கடவன் என் மனத்தில் உள்ளான்

2320. இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன்.

பக்தர்களின் மனத்தில் உள்ளவன் புருடோத்தமன்

2321. உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,
விண்ணெடுங்கக் கோடுயரும் வீங் கருவி வேங்கடத்தான்,
மண்ணெடுங்கத் தானளந்த மன்.

உலகளந்தானின் பிரம்மாண்டமான தோற்றம்

2322. மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,
துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, - மின்னை
உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும்
குடையாக ஆகாத்த கோ.

நரசிம்மனே கண்ணன்

2323. கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,
மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம்.

கண்ணனின் வயிற்றில் இவ்வுலகம் அடங்கியது

2324. சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து,
புனமேய பூமி யதனை, - தனமாகப் பேரகலத்
துள்ளொடுக்கும் பேரார மார்வனார்,
ஓரகலத் துள்ள துலகு.

மனமே! கண்ணன் அடியிணைகளை நண்ணு

2325. உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்
அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,
பூரித்தென் நெஞ்சே புரி.

வராகனே வேங்கடவன்

2326. புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,
திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர் வெண்கோட்டு
முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள்
மண்கோட்டுக் கொண்டான் மலை.

திருமால் கடல் கடைந்த பான்மை

2327. மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட்
டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,
பிண்டமாய் நின்ற பிரன்.

எங்கள் நரகத்தை ஒழித்தவன் திருமாலே

2328. நின்ற பெருமானே நீரேற்று, உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா, - அன்று
துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ.

கண்ணா! என்னை நின் அருஞ்செயல்கள்!

2329. நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் - நீயன்றே
மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,
தேவா சுரம்பொருதாய் செற்று?

நரசிம்மனும் வாமனனும் கண்ணனும் ஒருவரே

2330. செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் - முற்றல்
முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய்,
மூரிச்சுரியேறு சங்கினாய். சூழ்ந்து.

திருமாலே சுனையில் முதலை கொன்றவன்

2331. சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்,
தாழ்ந்த அருவித் தடவரைவாய், - ஆழ்ந்த
மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்,
அணிநீல வண்ணத் தவன்.

இலங்கை எரித்தவனே கண்ணன்

2332. அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,
அவனே யணிமருதம் சாய்த்தான், - அவனே
கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்,
இலங்கா புரமெரித்தான் எய்து.

ஏழு மராமரங்களைத் துளைத்தவனே வாமனன்

2333. எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்,
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், - எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம்கைக் கொண்டான் முயன்று.

மனமே! ஆலிலைத் துயின்றவனைத் தொழு

2334. முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை,
இயன்றமரத் தாலிலையின் மேலால், - பயின்றங்கோர்
மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்,
தண்ணலங்கல் மாலையான் தாள்.

வராகனே கண்ணன்

2335. தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி, கீளா
மருதிடைபோய்க் கேழலாய், - மீளாது
மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,
பெண்ணகலம் காதல் பெரிது.

திருமாலின் கண் தாமரையே

2336. பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு,
கரிய முகிலிடைமின் போல, - தெரியுங்கால்
பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன்
நீணெடுங்கண் காட்டும் நிறம்.

திருமாலின் உண்மைப் பொலிவு நமக்குத் தெரியாது

2337. நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,
இறையுருவம் யாமறியோ மெண்ணில், - நிறைவுடைய
நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,
பூமங்கை கேள்வன் பொலிவு.

திருமாலின் திருவடிகளையே யான் சூடுவேன்

2338. பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,
மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்து
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன்மேல் கண்டாய் தெளி.

வாமனன் வாழ்விடம் வேங்கடமே

2339. தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,
அளிந்த கடுவனையே நோக்கி, - விளங்கிய
வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்
மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு.

திருமாலின் அடிசேர்ந்து வாழும்வகை அறிந்தேன்

2340. வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,
தாழும் அருவிபோல் தார்கிடப்ப, - சூழும்
திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்
பெருமான் அடிசேரப் பெற்று.

கண்ணனின் லீலைகள்

2341. பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்,
முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, - கற்றுக்
குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப்
பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு.

திருக்கடிகையில் திருமால் எழுந்தருளியுள்ளான்

2342. பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், - வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன்விண் ணகர்.

திருமால் எழுந்தருளியுள்ள திருப்பதிகள்

2343. விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,
மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.

அரியும் அரனும் ஒருவரே

2344. தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,- சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவு மொன்றாய் இசைந்து.

வெஃகாவில் திருமால் ஓய்வு கொள்கிறாரோ?

2345. இசைந்த அரவமும் வெற்பும் கடலும்,
பசைந்தங் கமுது படுப்ப, - அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்,
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு.

நரசிம்மன்தான் கண்ணன்

2346. அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,
மங்க இரணியன தாகத்தை,- பொங்கி
அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து.

மதுகைடவரை வதைத்தவன் திருமால்

2347. காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள்,
ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, - வாய்ந்த
மதுகை டவரும் வயிறுருகி மாண்டார்,
அதுகே டவர்க்கிறுதி ஆங்கே.

சங்கும் சக்கரமும் ஒளி வீசும்

2348. ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய்,
ஓங்கு கமலத்தி னொண்போது, - ஆங்கைத்
திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில்
பகரு மதியென்றும் பார்த்து.

கண்ணனுக்கு உரிய மலை வேங்கடம்

2349. பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர்
கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த
களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்
விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு.

வேங்கடம் பாடுக; துழாய் சூடுக

2350. வெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க்
கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற
நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்,
பூண்டநா ளெல்லாம் புகும்.

யானைகளும் வேங்கடவனை வணங்கும்

2351. புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி
உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன்
விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே,
கண்டு வணங்கும் களிறு.

கண்ணனுக்கு உரிய குன்று வேங்கடம்தான்

2352. களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி,
ஒளிறு மருப்பொசிகை யாளி, - பிளிறி
விழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள்
குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று.

வேங்கடமலை மிக உயரமானது

2353. குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வ ளைக்கை,
சென்று விளையாடும் தீங்கழைபோய், - வென்று
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே,
மேலை இளங்குமரர் கோமான் இடம்.

நாவின் கடமை கண்ணன் கழலைப் போற்றுதலே

2354. இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி,
வடமுக வேங்கடத்து மன்னும், - குடம்நயந்த
கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே,
நாத்தன்னா லுள்ள நலம்.

யசோதைதான் கண்ணனுக்குப் பாலூட்டினாள்

2355. நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்,
நிலமே புரண்டு போய் வீழ , - சலமேதான்
வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்,
தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து.

கண்ணன் பயிலும் இடம் திருமலையே

2356. சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, - சேர்ந்து
சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன்
புனவேங்கை நாறும் பொருப்பு.

திருமாலையே தொழு: தீவினைகள் சேரா

2357. பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா - விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.

இராமன் திருவடிகளே நமக்குக் காவல்

2358. ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன்
நன்குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன், - ஏய்ந்த
முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த
அடிப்போது நங்கட் கரண்.

மாயனை ஓது: அதுவே பெருங்காவல்

2359. அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,
முரனாள் வலம்சுழிந் த மொய்ம்பன், - சரணாமேல்
ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே,
ஓதுகதி மாயனையே ஓர்த்து.

திருமாலை நினை: பிறப்பே இராது

2360. ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், - கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,
நிரையார மார்வனையே நின்று.

அரவணையானையே அனைவரும் நினைப்பர்

2361. நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்,
ஒன்றியவீ ரைஞ்ஞா றுடன்துணிய - வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே,
நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.

நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமான் திருமாலே

2362. நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என்கொலோ,
ஓராது நிற்ப துணர்வு.

உணரவும் காணவும் அரியவன் திருமால்

2363. உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரிய னுண்மை, - இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
எங்கணைந்து காண்டும் இனி.

திருமால் என் உள்ளத்தில் உள்ளான்

2364. இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும்,
இனியவன் காண்பரிய னேலும், - இனியவன்
கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்,
உள்ளத்தி னுள்ளே யுளன்.

திருமாலை மனத்தால்தான் உணரலாம்

2365. உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்
துளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், - உளனாய
வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே,
கண்டா ருகப்பர் கவி.

தெவிட்டாத பேரழகு உடையவன் கண்ணன்

2366. கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,
செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், - புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே, - பின்னைக்காய்
ஏற்றுயிரை அட்டான் எழில்.

நீர்மேகம் அன்னவன் நெடுமால்

2367. எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத்
தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், - எழில் கொண்ட
நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல,
கார்வானம் காட்டும் கலந்து.

மரகத மேனியன் கண்ணன்

2368. கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின்மேனி
மலர்ந்து மரகதமே காட்டும், - நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
அந்திவான் காட்டும் அது.

திருத்துழாய் மார்வனையே தொழுக

2369. அதுநன் றிதுதீதென் றையப் படாதே,
மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற
பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்
முன்னங் கழலும் முடிந்து.

குழலூதினவன் குன்று வேங்கடமே

2370. முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம்
படிந்துழுசால் பைந்தினைகள் வித்த, - தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே, மேலொருநாள்
தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு.

மண்ணளந்த மாலின் தோற்றம்

2371. சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா
றலம்பிய சேவடிபோய், அண்டம் - புலம்பியதோள்
எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ,
வண்டுழாய் மாலளந்த மண்.

கண்ணன் கயிற்றால் கட்டுண்ட காட்சி என்னே!

2372. மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி - கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,
வயிற்றினோ டாற்றா மகன்.

மாயன் திருவடிகளையே நினை

2373. மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,
மகனா மவன்மகன்றன் காதல் - மகனை
சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே
நிறைசெய்தென் நெஞ்சே. நினை.

ஆலிலைமேல் துயின்றவனை மனத்தில் வை

2374. நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,
அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், - கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,
உள்ளத்தே வைநெஞ்சே உய்த்து.

மாயன் என் மனத்தில் என்றும் உள்ளான்

2375. உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே
நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,
பொன்றாமை மாயன் புகுந்து,

திருமால் திருவடிகளையே வாழ்த்து

2376. புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்
இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து.

திருமாலை எல்லாத் தேவர்களும் வணங்குவர்

2377. வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, - கேழ்த்த
அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்,
அடித்தா மரையாம் அலர்.

மாயனின் பெருமைதான் என்னே!

2378. அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய,
மலரெடுத்த மாமேனி மாயன், - அலரெடுத்த
வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட்
கெண்ணத்தா னாமோ இமை.

நரகம் அடையாமல் காப்பவன் நாரணன்

2379. இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,
அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்
நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.

திருமாலின் திருவடிகளே நமக்குத் துணை

2380. தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள்முதலே நங்கட்குச் சார்வு.

திருமகளைத் தழுவியவன் திருமால்

2381. சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,
தேனமரும் பூமேல் திரு.

பேயாழ்வார் திருவடிகளே சரணம்

திருமழிசையாழ்வார் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி

இவ்வாழ்வார் திருமழிசை என்னும் ஊரில் அவதரித்தார். இவருக்குப் பக்தி ஸாரர் என்றும் திருநாமம். ஸ்ரீ சுதர்சன ஆழ்வானே திருமழிசையாழ்வாராக அவதரித்தார். ஸ்ரீ மந் நாராயணனின் பரத்துவத்தை அனைவருக்கும் அறிவிப்பவர் நான்முகன் என்று இந்த அந்தாதி தொடங்குவதால் இதற்கு நான்முகன் திருவந்தாதி என்று பெயர் ஏற்பட்டது. இவரது அவதார நன்னாள் தை மாதம் மகம் நட்சத்திரம்.

தனியன்

சீராமப்பிள்ளை அருளிச்செய்தது

நேரிசை வெண்பா

திருமழிசைப்பிரானடி வாழ்த்து

நாரா யணன்படைத்தான் நான்முகø, நான்முகனுக்
கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல்- சீரார்
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து

இந்த அந்தாதியின் உட்பொருளைக் கொள்க

2382. நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான்முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து.

ஆழியானே ஆதியந்தமானவன்

2383. தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்
ஆருமறியார் அவன்பெரு மை, - ஓரும்
பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்
அருள்முடிவ தாழியான் பால்.

நாராயணனை யானே நன்கறிந்தேன்

2384. பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யானறிந்த வாறு?

எல்லாப் பொருள்களுமானவன் நாரணன்

2385. ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, - வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து.

நான்மறையானவன் நரசிம்மனே

2386. தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,
வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, - உகத்தில்
ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,
அருநான்கு மானாய் அறி.

மாதவனைத் துதியாதார் ஈனர்கள்

2387. அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,
சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார்
ஈனவரே யாதலால் இன்று.

நாரணனே! நான் உன்னையன்றியிலேன்

2388. இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை.

மனமே! மாலே நமக்குத் துணை

2389. இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற
சிலைகொண்ட செங்கண்மால் சேரா - குலைகொண்ட
ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த
கூரம்பன் அல்லால் குறை.

எல்லோரும் நாரணன் அடிகளையே வாழ்த்துவர்

2390. குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, - கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு.

திருமாலின் மேனியை யானே காணவல்லவன்

2391. ஆங்கார வாரம் அது கேட்டு, அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி, - யாங்காண
வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான்
வல்லரே யல்லரே வாழ்த்து.

திருமாலையே வாழ்த்தித் தொழுக

2392. வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்
தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த
துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் தன்னை
வழாவண்கை கூப்பி மதித்து.

ஆழியானையே மதி

2393. மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ
மதித்தாய் மதிகோள் விடுத்தாய், - மதித் தாய்
மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி
விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு.

வேதமுதற்பொருள் நாராயணனே

2394. வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்
கூடாக்கு நின்றுண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும்
மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா யணன்.

நரகத்தைத் தவிர்ப்பவன் நாராயணனே

2395. நாரா யணனென்னை யாளி, நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால்தன் - பேரான
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு
ஆசைப்பட் டாழ்வார் பலர்.

தேவதேவனின் திருவடிகளையே வாழ்த்துக

2396. பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்
மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை.

கண்ணனையே யான் எண்ணுவேன்

2397. நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய
தேராழி யால்மறைத்தா ரால்.

ஆழியானையே வணங்குக

2398. ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம்
அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்
வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு.

நரசிம்மனை ஏத்துவோரே வெற்றி பெறுவர்

2399. மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
கூறாகக் கீறிய கோளரியை, - வேறாக
ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்
சார்த்தி யிருப்பார் தவம்.

வைகுந்தம் தருபவன் ஆழியான்

2400. தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம்செய்த ஆழியா யன்றே,- உவந்தெம்மைக்
காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்
ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ.

தேவதேவனே எல்லாமாக இருப்பவன்

2401. நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும் - நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இவை,

நரசிம்மனின் அழகுத் தோற்றம் பிரமாதம்

2402. இவையா பிலவாய் திறந்தெரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள் - இவையா
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,
அரிபொங்கிக் காட்டும் அழகு.

நரசிம்மனின் தாள்களையே பணிமின்

2403. அழகியான் தானே அரியுருவன் தானே
பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த்
தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே
மீனா யுயிரளிக்கும் வித்து.

பக்தி உழவனுக்குத் திருமால் அருள்புரிவார்

2404. வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த
பத்தி யுழவன் பழம்புனத்து, - மொய்த்தெழுந்த
கார்மேக மன்ன கருமால் திருமேனி,
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.

திருமாலையே புகழ்க

2405. நிகழ்ந்தாய் பால்பொன் பசுப்புக் கார்வண்ணம்
நான்கும் இகழ்ந்தா யிருவரையும் வீயப் - புகழ்ந்தாய்
சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்
மனப்போர் முடிக்கும் வகை.

மண்ணளந்த பான்மை என்னே!

2406. வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும்
வகையால் வருவதொன் றுண்டே, வகையால்
வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்
வயிர வழக்கொழித்தாய் மற்று.

கடல் வண்ணா! நின்னையே தொழுவேன்

2407. மற்றுத் தொழுவா ரொருவ ரையும் யானின்மை,
கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்
கண்டுகொள் கிற்கு மாறு.

திருமாலை நினைக: அதுவே பெரும்பேறு

2408. மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள் - நீறாடி
தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை
யான்காண வல்லேற் கிது.

திருமாலுக்கு உகந்த இடம் என் மனம்

2409. இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,
இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, - இதுவிலங்கை
தானொடுங்க வில்நுடங்கத் தண்தா ரிராவணனை,
ஊனொடுங்க எய்தான் உகப்பு.

ஒளியுருவனே திருமால்

2410. உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,
மகப்புருவன் தானே மதிக்கில், - மிகப்புருவம்
ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்
அன்றிக்கொண் டெய்தான் அவன்.

என் உள்ளத்தில் உறைபவன் திருமால்

2411. அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,
வெள்ளத் தரவணையின் மேல்.

நாராயணனையே ஏத்துக

2412. மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்
தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர்
பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்
கருமாயம் பேசில் கதை.

கண்ணன் திருவடிகளை அடைக

2413. கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள
உதைப்பளவு போதுபோக் கின்றி, - வதைப்
பொருள்தான் வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி.

கண்ணனின் திருவிளையாடல்

2414. அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை
பிடித்தொசித்துப் பேய்முலை நஞ்சுண்டு - வடிப்பவள
வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,
கோப்பின்னு மானான் குறிப்பு.

திருக்கோட்டியூர்க் கோமானையே ஏத்துவேன்

2415. குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,
குறிப்பெனக்கு நன்மை பயக்க, - வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,
தான்கடத்தும் தன்மையான் தாள்.

அரவணையான் ஓய்வு கொள்கின்றானோ?

2416. தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை.

பக்தர் உள்ளத்தில் உறைபவன் திருமால்

2417. நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத் தனா வான்.

திருமாலே எல்லாவற்றையும் படைத்தவன்

2418. வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,
தானுலவு வெங்கதிரும் தண்மதியும், - மேனிலவு
கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,
அண்டந் திருமால் அகைப்பு.

நீர்வண்ணனே நம்மை ஆட்டுவிப்பவன்

2419. அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான், பொரு கடல் நீர் வண்ணன், உகைக்கு மேல்,
எத் தேவர் வாலாட்டும், எவ்வாறு செய்கையும்,
அப்போது ஒழியும் – அழைப்பு.

திருவேங்கடவனையே அழைப்பேன்

2420. அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,
இழைப்பன் திருக்கூடல் கூட, - மழைப்பே
ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு.

வேங்கடவன் கால்வலையில் சிக்கினேன்

2421. வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், - கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்,
கால்வலையில் பட்டிருந்தேன் காண்.

என் உள்ளம் புகுந்தவன் வேங்கடவன்

2422. காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
ஓண விழவில் ஒலியதிர - பேணி
வருவேங் கடவா என் னுள்ளம் புகுந்தாய்,
திருவேங் கடமதனைச் சென்று.

வினை கெடுப்பவன் வேங்கடவன்

2423. சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை,
நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும்
கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,
அடிக்கமலம் இட்டேத்து மங்கு.

எல்லாத் தெய்வங்களும் வேங்கடவனையே தொழும்

2424. மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், - திங்கள்
சடையேற வைத்தானும் தாமரைமே லானும்
குடையேறத் தாம்குவித்துக் கொண்டு.

எல்லோரும் வேங்கட மலைக்கே செல்லுங்கள்

2425. கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,
தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி,
போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,
போம்குமர ருள்ளீர் புரிந்து.

யாவரும் பூசிப்பதற்கு ஏற்றவன் வேங்கடவனே

2426. புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,
பரிந்து படுகாடு நிற்ப - தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு.

வேங்கடவனை நினைத்தலே நன்று

2427. வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்
றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, - எப்பாடும்
வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,
நாடுவளைத் தாடுமேல் நன்று.

வேங்கடமே மணிவண்ணனின் ஊர்

2428. நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் ,
பொன்மணியும் முத்தமும் பூமரமும், - பன்மணிநீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடு முடைவேங் கடம்.

வினை தீர்க்கும் மலை வேங்கடமே

2429. வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், - வேங்கடமே
தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை.

நாராயணன் நாமத்தையே சொல்க

2430. மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலையாமை தானொருகை பற்றி, - அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திருநாமம்,
கூறுவதே யாவர்க்கும் கூற்று.

கண்ணனை எண்ணுவதே உய்யும் வழி

2431. கூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன், - ஆற்றங்
கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன்
உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு.

கண்ணனே! நின்னையே நினைந்து உயர்ந்தேன்

2432. எனக்காவா ராரொரு வரேஎம் பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால - புனக்காயா
வண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு
விண்ணெல்லா முண்டோ விலை.

கண்ணபிரானையே ஏத்துக

2433. விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,
தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் - முலைக்கால்
விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,
கடமுண்டார் கல்லா தவர்.

காகுத்தனே என் தெய்வம்

2434. கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்
அல்லா லொருதெய்வம் யானிலேன், - பொல்லாத
தேவரை தேவரல் லாரை, திருவில்லாத்
தேவரைத் தேறல்மின் தேவு.

எல்லாத் தெய்வங்களுமாக இருப்பவன் திருமாலே

2435. தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்
மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், - யாவராய்
நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,
கற்கின்ற தெல்லாம் கடை.

திருமாலே! நின் திருவடிப் பெருமைதான் என்னே!

2436. கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், - புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
யாரோத வல்லா ரவர்.

திருமாலுக்கு இணையே இல்லை

2437. அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,
எவரு மெதிரில்லை கண்டீர், - உவரிக்
கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்
குடனின்று தோற்றா னொருங்கு.

நல்வினை தீவினைகளாக இருப்பவன் கண்ணனே

2438. ஒருங் கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,
பெருங்குருந் தம் சாய்த்தவனே பேசில், - மருங்கிருந்த
வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்
ஆனவர்தா மல்லாக தென்.

திருமாலிடமே யான் அன்பு காட்டினேன்

2439. என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,
மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், - என்னெஞ்ச
மேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்
தாயனுக் காக்கினேன் அன்பு.

கேசவா! நான் உன் அடிமை: ஆண்டுகொள்

2440. அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை
கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள்.

அரங்கா! உன்னையே நான் விரும்புவேன்

2441. ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மைய - கேட்பார்க்
கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்.

மதுசூதனனைச் சரணடை: துன்பம் வராது

2442. மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,
தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்
இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,
சென்றொன்றி நின்ற திரு.

திருத்துழாய் சூடிப் பிறப்பை அறுமின்

2443. திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,
கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த
மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,
தார்தன்னைச் சூடித் தரித்து.

திருமாலைப் பூசித்தே பொழுது போக்குக

2444. தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,
விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்,
பூசித்தும் போக்கினேன் போது.

நாரணனையே பூசித்தப் துதியுங்கள்

2445. போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்
காதானை யாதிப் பெருமானை,- நாதானை
நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்
சொல்லானை, சொல்லுவதே சூது.

மாதவனையே எண்ணுக: வைகுந்தம் கிடைக்கும்

2446. சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை - யாதானும்
வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத்
தில்லையோ சொல்லீ ரிடம்.

நெடுமாலுக்கு இடம் என் நெஞ்சம்

2447. இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு
படநா கணைநெடிய மாற்கு,- திடமாக
வைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்
வையேனாட் செய்யேன் வலம்.

எது நேர்ந்தாலும் ஏத்துக நாரணனை

2448. வலமாக மாட்டாமை தானாக, வைகல்
குலமாக குற்றம்தா னாக,- நலமாக நாரணனை
நம்பதியை ஞானப் பெருமானை,
சீரணனை யேத்தும் திறம்.

நாரணன் பக்தர்க்கு யமபயம் இல்லை

2449. திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர் - இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.

வேதப் பொருளாக இருப்பவன் மாதவனே

2450. செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான்.

வராகனை யான் நன்கு அறிவேன்

2451. தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து,
ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும் - யானொருவன்
இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்
சென்றாங் கடிப்படுத்த சேய்.

பகவத்கீதை கற்க: மெய்ஞ்ஞானம் பெறலாம்

2452. சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்.

நாரணனே நல்லறமும் வேதமும் தவமும்

2453. இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும்,
சொல்லற மல்லனவும் சொல்லல்ல - நல்லறம்
ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே
யாவதீ தன்றென்பா ரார்.

ஆழியான் பெருமையை அறிவார் யார்?

2454. ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த,
பேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த
கண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன்வைத்த
பண்டைத்தா னத்தின் பதி.

மாயவனையே என் நாக்கு ஏத்தும்

2455. பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,
மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்
வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,
அல்லதொன் றேத்தாதென் நா.

வைகுந்தச் செல்வனையே நான் பாடுவேன்

2456. நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் - பூக்கொண்டு
வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு.

சாஸ்திரங்களுக்குத் தலைவன் திருமால்

2457. பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட
மனுவும் சுருதி மறைநான்கும் மாயன்
றனமாயை யிற்பட் ட தற்பு.

கடல் வண்ணன் என் தீவினைகளைப் போக்கினான்

2458. தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், - எற்கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,
எவ்வினையும் மாயுமால் கண்டு.

நாரணன் நாமமே கேட்டிரு

2459. கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல்
கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, - வண்டலம்பும்
தாரலங்கல் நீண்முடியான் றன்பெய ரே கேட்டிருந்து,அங்
காரலங்க லானமையா லாய்ந்து.

ஆதிப் பெருமானை நினைக: வைகுந்தம் காணலாம்

2460. ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால்
வாய்ந்த மனதிருத்த வல்லார்கள், - ஏய்ந்ததம்
மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து.

கண்ணன் லீலைகளையே கேளுங்கள்

2461. விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,
கரந்துலகம் காத்தளித்த கண்ணன் - பரந்துலகம்
பாடின ஆடின கேட்டு,படுநரகம்
வீடின வாசற் கதவு.

எனக்குத் தமிழ் கற்பித்தவன் கண்ணன்

2462. கதவு மனமென்றும் காணலா மென்றும், குதையும்
வினையாவி தீர்ந்தேன், - விதையாக நற்றமிழை
வித்தியென் உள்ளத்தை நீவிளைத் தாய்,
கற்றமொழி யாகிக் கலந்து.

கண்ணன் என் மனத்தில் கலந்துவிட்டான்

2463. கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை
நலந்தானு மீதொப்ப துண்டே - அலர்ந்தலர்கள்
இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்
விட்டேத்த மாட்டாத வேந்து.

எல்லோர்க்கும் இறைவன் திருமால்தான்

2464. வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்
மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், - சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்,
பின்னால்தான் செய்யும் பிதிர்.

கண்ணனைத் தொழுதலே தொழில்

2465. பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,
எதிர்வன் அவனெனக்கு நேரான், - அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில்.

இராமபிரான் என் மனத்தில் உள்ளான்

2466. தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,
பொழுதெனக்கு மற்றதுவே போதும், - கழிசினத்த
வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,
வில்லாளன் நெஞ்சத் துளன்.

உள்ளுவார் உள்ளத்துள்ளவன் திருமால்

2467. உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், - துளன்கண்டாய்
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,
என்னொப்பார்க் கீச னிமை.

எல்லாவற்றையும் உண்டவன் கண்ணன்

2468. இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,
சமய விருந்துண்டார் காப்பார் - சமயங்கள்
கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டா னுலகோ டுயிர்.

துயர் தீர்ப்பானைப் பாடுக: அதுவே வாழ்வு

2469. உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,
அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது.

பாற்கடலான் பாதமே நினைக

2470. பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரை,
கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து
விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு,

விண்ணாள வேண்டுமா? வேங்கடவனைப் பூசியுங்கள்

2471. வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், - மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே
தாழா யிருப்பார் தமர்.

தேவர்கள் யாவரும் திருமாலையே பூசிப்பர்

2472. தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்
அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள்
தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன்
தாள்தா மரையடைவோ மென்று.

சிரீதரனுக்கே நான் அடிமை

2473. என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து
நின்று மிருந்தும் நெடுமாலை - என்றும்
திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்,
கருவிருந்த நாள்முதலாக் காப்பு.

கண்ணா! நின்னை யாரும் மறக்கமாட்டார்

2474. காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்
ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்.

அரவணையாய் ! அடியேனுக்கு அருள்

2475. மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக
கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த
பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் ஏன்று.

திருமாலே! நின் அடிமை நான்: வைகுந்தம் அளி

2476. ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை
ஆன்றேன் அமரர்க் கமராமை, - ஆன்றேன்
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை
இடநாடு காண இனி.

நாரணனே ஆதி காரணன்; எனக்குத் தெரியும்

2477. இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை - இனியறிந்தேன்
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்.

திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.

 
மேலும் மூன்றாவதாயிரம் »
temple news
நம்மாழ்வார் அருளிச்செய்த ருக்வேத ஸாரமான திருவிருத்தம் நம்மாழ்வார் தமது அன்பு மிகுதியை எம்பெருமான் ... மேலும்
 
temple news
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சிறிய மடல் எம்பெருமான் கண்ணனாக அவதரித்த காலத்தில் அவனுடைய ... மேலும்
 
temple news
இராமானுச நூற்றந்தாதித் தனியன்கள் வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை நேரிசை வெண்பா அமுதனார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar