Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மூன்றாவதாயிரம் பகுதி-2 மூன்றாவதாயிரம் பகுதி-4 மூன்றாவதாயிரம் பகுதி-4
முதல் பக்கம் » மூன்றாவதாயிரம்
மூன்றாவதாயிரம் பகுதி-3
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 டிச
2011
03:12

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சிறிய மடல்

எம்பெருமான் கண்ணனாக அவதரித்த காலத்தில் அவனுடைய குடக்கூத்தில் அகப்பட்டுக்கொண்டாள் ஆய்ச்சி ஒருத்தி, அவள் அவனை அனுபவிக்கமுடியாமல் வருந்தி மடலேறத் துணிந்தாள். திருமங்கையாழ்வாரும் அப்படிப்பட்ட பெண் நிலைமையை  ஏறிட்டுக்கொண்டு, பரகால நாயகி. தன் ஆசையை வெளியிடும் பிரபந்தங்கள் சிறியதிருமடலும், பெரிய திருமடலும் நாயகனின் பிரிவைத் தாங்கமுடியாத நாயகி, அவனோடு கூடுவதற்காகச் செய்யும் துணிச்சலான செயலே மடலூர் தல் எனப்படும்.

தன்னை விட்டுப் பிரிந்த தலைவனை ஒரு படத்தில் எழுதி, அதையே பார்த்துக்கொண்டு, அலங்காரம், ஊண் உறக்கமின்றி, பனைமடலையும் கையில் எடுத்துக்கொண்டு, தலைமயிரையும் விரித்துக்கொண்டு, இவன்தான் என்னைக் கைவிட்டான்; இரக்கமற்றவன் என்று அவனது செயல்களைக் கூறிக் கதறிக் கொண்டு, பலரும் நடுங்கி இரக்கங் கொள்ளும்படி தெரு வழியே திரிந்து உழல்வதே மடலூர் தல் எனப்படும். இலக்கண முறைப்படி திருமடல் ஒரே பாட்டாகக் கருதப்படுகிறது. மடலூர் வேன் என்று அச்சுறுத்திக் கூறும் திருமங்கையாழ்வார் மடலூர்ந்ததாகக் கூறப்படவில்லை; மடலேறவும் இல்லை. அகப்பொருள் இலக்கணப்படி, பெண்கள் மடலேறவும் கூடாது. கடலன்னகாமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பொருந்தக்க தில் என்னும் குறட்பா இக்கருத்தையே வலியுறுத்தும்.

தனியன்

பிள்ளைத் திருநிறையூர் அரையர் அருளிச்செய்தது

நேரிசை வெண்பா

சிறிய திருமடலின் பெருமை என்னே!

முள்ளிச் செழுமலரோ தாரான் முளைமதியம்
கொள்ளிக்கென் உள்ளம் கொதியாமே-வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்

கலி வெண்பா

முதல் திருமொழி

நிலமங்கையில் எழில்

2673. காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை
சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று

பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல்
நீராரவெலி நிலமண்கையென்னும் – இப்

பாரோர் சொலப்பட்டமூன்னன்றெ அம்மூன்றும்
ஆராயில் தானே அறம்பொரு ளின்பமென்று

முயலைவிட்டுக் காக்கையைத் தொடர்வதா?

2674. ஆராரிவற்றினி டையதனை எய்துவார்
சீரார் இருலையும் எய்துவர் - சிக்கெனமது

2675. ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும்
ஒராமையன்றெ? உலகத்தார் சொல்லும்சொல்

ஒராமையாமாரதுவுரைக்கெங்கௌõமெ
காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி

தேரார் நிரைகதிரோன் மண்டலதைக்கெண்டு புக்கு
ஆராவமுதமண்கய்தி -- அதில்நின்றும்

தலைவனைத் தலைவி கண்டு மெலிந்தமை

2676. வாரதொழிவதன்னுண்டு - அதுநிற்க
ஏரார்முயல்விட்டு காக்கைப்பின் போவதே

ஏரா யிளமுலையீர் என்றனக் குற்றதுதான்
காரார்க்குழலெடுதுக்கட்டி - கதிர்முலையை

2677. வாரார வீக்கி மணிமெகலை திருத்தி
ஆராரயில் வேற்க ணஞ்சனத்தின் நீரணிந்து

சீரார் செழும்பந்து கொண்டடியான் என்னேன் நான்
நீரார் கமலம்போல் செங்கன்மால் என்றுருவன்

பாரோர்களெல்லாம் மகிழ பரைகரண்க
சீரார் குடமரியண்டெந்தி செழுந்தெருவெ

2678. ஆரா ரெனைச் சொல்லி ஆடுமதுகண்டு
ஏராரிள்முலயார் அன்னையிரும் அல்லரும்

வாராயொவென்னர்க்குச் சென்றென் என்வல்வினையால்
காரார் மணினிரமும் கைவளையும் காணேன் நான்

குறி கேட்க முயலுதல்

2679. ஆரானும் சொல்லிற்றுதம் கொள்ளேன்--அறிவழிந்து
தீரார்வுடம்பொடு பெதுருருவெ கண்டிரண்கி

ஏராகிளிக்கிளவி எம்ம்னைத்தான்வந்து என்னை சீரார் செழும்புழுதிக்காப்பிட்டு  செங்குரிஞ்சி

2680. தாரார் நௌமாலை சாதர்க்கு தான்பின்னும்
நேராதன ஒன்னுனேர்ந்தான்—அதனாலும்

2681. தீராதெஞ்சிந்தைநோய் தீராதென் பேதுறவு
வாராது மாமை அதுகண்டு மற்றாண்கே

ஆரானும் மூதரியும் அம்மனை மார்ச்சொல்லுவார்
பாரோர்ச்சொலப்படும் கட்டுப் படித்திரேல்

தலைவியினது மனநோயின் காரணத்தைக் குறத்தி சொல்லுதல்

2682. ஆரானும் மெய்படுவன் னென்றார் அது கேட்டு
காரார் குழற்கொண்டை கட்டுவிச்சி கட்டெரி

சீரார் சுளகில் சிலனெல் பிடிதெரியா
வேரா விதிர்விதிரா மெய்சிலிர்க்கைமோவ

இரண்டாந் திருமொழி

2683. பேராயிரமு டயான் நென்றாள்—பேர்த்தெயும்
காரார் திருமெனி காடினாள் -- கைய்யதுவும் 

2684. சீரார் வலம்புரியெ யென்றள் – திருதுழாய்த்
தாரார்னருமாலை கட்டுரைதாள் கட்டுரையா

நீரெதுமண்சேன்மின் நும்மகளை நோய்செய்தான்
ஆரானுமல்லன் அரிந்தெனவனை நான்

தசாவதாரம் எடுத்தவனே இவளுக்கு இந்நோயைத் தந்தவன்

கூரார்வெல்கண்ணீர் உமக்கரியக் கூருகெனொ
ஆரா லிவய்யம் அடியளப் புண்டதுதான்

ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது -- மத்து
ஆராலெ கன்மாரி கார்த்ததுதான் -- ஆழினீர்

2685. ஆரால் கடைந்திட ப்பட்டது, அவன் காண்மின்
ஊரானிரயை மெய்துலகெல்லாம் உண்டுமிழ்ண்தும்

ஆராத தன்மயனா ஆங்கொருநாள் ஆய்ப்பாடி
சீரார்க் கலையல்குல் சீரடிச்செந்துவர்வை

வாரார் வனமுலயாள் மத்தாரப் பற்றிகொண்டு
ஏராரிடை நோவ எத்தனையோர் போதுமாய்

சீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதணை
வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு

நாராருரியேற்றி நங்கமயயைத்ததனை
போரார் வேர்க்கண்மடவாள் போந்தனையும்பொய்யுறக்கம்

ஓராதவன்போல் உறங்கியறிவுற்று
தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைனீட்டீ

2686. ஆராத வெண்ணைவிழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே

ஓராதவன்போல் கிடந்தானை கண்டவளும்
வாராத்தான் வைத்து காணாள் வயிறடித்திங்கு

ஆரார் புகுது வாரைய ரிவரல்லால்
நீரா மிதுசெய்தீர் என்றோர் நெடுங்கயிற்றால்

2687. ஊரார்களெல்லாரும் காணௌரலோடெ
தீராவெகுளியாய்ச் சிக்கென வார்த்தடிப்ப

ஆரா வயிதினோ டாற்றாதான் அன்றியும்
நீரார் நெடும்கயத்தை சென்றலைக்க நின்னுரப்பி

2688. ஊரார்களெல்லாரும் காணௌரலோடெ
தீராவெகுளியாய்ச் சிக்கென வார்த்தடிப்ப

ஆரா வயிதினோ டாற்றாதான் அன்றியும்
நீரார் நெடும்கயத்தை சென்றலைக்க நின்னுரப்பி

2689. கூரர்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும்
ஈரா விடுத்தவட்கு ழத்தூனை வென்னரகம்

2690. சேரா வகையெ சிலைகுனித்தான் செந்துவர்வாய்
வாரார் வனமுலையால் வைதேவி காரணமா

ஏரார்த்தடந்த்தோ ளிராவணனை ஈரைந்து
சீரார் சிரமறுத்து செற்றுதுகந்த செங்கண்மால்

2691. போரார்னெடுவேலோன் பொன்பெயரோன் நாகதை
கூரர்ந்தவள்ளுகிரால் கீண்டு, குடல் மாலை

2692. சீரார் திருமார்ப்பிம் மெல்கட்டி செங்குருதி
சோரா கிண்டந்தனை குங்குமத்தாள் கொட்டி

ஆரவெழுந்தன் அரியுருவாய் அன்றியும்
பேர்வாமனாகிய காலத்து ழவடிமண்

2693. தாரா யெனக்கென்று வேண்டிக் கலத்தினால்
நீரேற் றுலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை-

ஆராத போரி லசுர்ர்களுந் தாணுமாய்
காரார் வரைநட்டு நாகங் கயிறாக

மூன்றாந் திருமொழி

2694. பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத்துழாய்
தார் ஆர்ந்த மார்வன் தடமால் வரைபோலும்

போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலரி
நீராமலர்க்கமலம் கொண்டொர் னெடுங்கையால்

நாராயணா வோ மணிவண்ணா நாகனையாய்
வாராய். யென்னாரிடரை நீக்காய் – எனவெகுண்டு

2695. தீரத சீர்த்ததால் சென்றிரண்டு கூறாக
ஈராவதனை இடர்க்கடிண்தான் எம்பெருமான்

பேராயிரமுடயான் பேய்பெண்டீர் னும்மகளை
தீராநோய் செய்தானெனவுரைதாள் சிக்கனுமற்று

தாய் தன் கவலை தீர்தல்

2696. ஆரானும் அல்லாமை கேட்டங்கள் அம்மனையும்
போரார்வெர்க்கண்ணீர் அவனாகில் பூந்துழாய்

தாராதொழியுமே தன்னடிச்சியல்லலே -- மற்று
ஆரானுமல்லனே யென்றொழிந்தாள் நானவனைக்

தலைவி பொறுத்திருந்த காரணம்

2697. காரார்த்திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்றத் திரிதருவன், பின்னையும்

2698. ஈராப்புகுதலும் இவ்வுடலைத் தன்வாடை
சோராமருக்கும் வகையரியேன், சூழ் குழலார்

2699. ஆரானுமேசுவர் என்னு மதன்பழியெ
வாராமல் காப்பதர்க்கு வளாயிருந்தொழிந்தேன்

தூது சென்ற மனம் திரும்பவில்லை

2700. வாராய் மடனெஞ்சே வந்து, மணிவண்ணன்
சீரார் திடுத்துழாய் மாலை நமக்கருளி

தாராந்தருமென்று இரண்டத்திலொன்றதனை
ஆரானுமொன்னதார் கேளாமே சொன்னக்கால்

ஆராயுமேலும் மணிகேட்டதன்றெனிலும்
போராதொழியாதெ போந்திடுனீயென்றேற்கு

காரார் கடல் வண்ணன் பின்பொல நெஞ்சமும்
வாராதே யென்னை மரந்ததுதான், வல்வினையேன்

என் கவலையை விசாரிப்பவர் யார்?

2701. ஊரார் உகப்பதே ஆயினேன் மற்றெனக் கிங்கு
ஆராய்வாரில்லை அழல்வாய் மெழுகு போல்

2702. நீராய் உருகும் என்னாவி நெடுங்கண்கள்
ஊரார் உறங்கிலும் தானுறங்க உத்தமந்தன்

2703. பேராயினவே பிதற்றுவன் பின்னையும்
காரார் கடல் பொலும் காமத்தராயினார்

நான்காந் திருமொழி

கற்பில் சிறந்த வாசவதத்தை வத்ஸராஜன் பின்னால் சென்று விடவில்லையா?

2704. ஆரே பொல்லாமை அறிவார் அதுனிற்க
ஆரானு மாதானும் அல்லலவள் காணீர்

வாரார் வனமுலை வாசமததை வென்று
ஆரானும் சொல்லப்படுவாள் – அவளும்தன்

2705. பேராயமெல்லாம் ஒழியப்பெருந்தெருவெ
தாரார் தடந்தொள் தளைக்கலன்பின்போனாள்

ஊராரிகழ்ண்திடப் பட்டாளே, மற்றெனக்கிங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே  நானவனை

தலைவி சென்று தேடிய திவ்விய தேசங்கள்

2706. காரார் திருமேனி காணுமலவும்போய்
சீரார் திருவேங் கடமே திருக்கொவல்

ஊரே மதிட் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மனுதிருத்தான் வெள்ள றையே வெஃகாலே

பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த வரங்கம் கணமங்கை

2707. காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர்

காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை

சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை

2708. ஊராய வெல்லாம் ஒழியாமே நானவனை
ஓரானை கொம்பொசித் தோரானை கோள்விடுத்த

2709. சீரானைச் செங்கணெடியானைத் தேந்துழாய்த்
தாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப்

தலைவனின் நாமங்களைச் சொல்லி தலைவி மடலூர எண்ணுதல்

2710. பேராயிரமும் பிதற்றி பெருந்தெருவெ
ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்

நேரிசை வெண்பா

(இது கம்பர் பாடியது என்பர் சிலர்)

திருநறையூரில் மடலூரக் கடவேன்

ஊரா தொழியேன் உலகறிய ஒண்ணுதலீர்!
சீரார் முலைத்தடங்கள் சேரளவும்-பாரெல்லாம்
அன்றோங்கி நின்றளந்தான் நின்ற திருநறையூர்
மன்றோங்க வூர்வன் மடல்

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமடல்

தர்மார்த்த காமமோட்ச புருஷார்த்தங்களில் மோட்சம் என்பது காணாத பொருளுக்கு உரிய வார்த்தையாகவே இருக்கிறது. நான் சென்று வந்தேன் என்று எவரும் வந்து மோட்சம் இப்படிப்பட்டது எனச் சொல்லவில்லை. அறம் பொருளால் பெறப்படுவது காமமேயாதலால் காமபுருஷார்த்தமே சிறந்தது. நான் பகவத் காமத்தைப் பற்றினேன் அதனால் பகவானை அடைய மடலூரத் துணிந்தேன். காமபுருஷார்த்தத்தை விரும்பாதவர்கள் ரசிகர்களல்லர். மடலூரக் கூடாது என்பதை நான் ஏற்கவில்லை. நாயகனை விட்டுப் பிரிய மனமில்லாமல் பெண்கள் இருந்ததில்லையா? சீதை, வேகவதி, உலூபிகை, உஷை முதலிய பெண்களின் வரலாற்றைச் சிந்தியுங்கள் என்றும்

திருநறையூர் எம்பெருமானை வணங்கியது முதல் எனக்குப் பகவத் காமமகிற மனநோய் ஏற்பட்டுவிட்டது. அனைவர்க்கும் இன்பமளிக்கும் பொருள்களெல்லாம் எனக்கு வருத்தத்தை அளிக்கின்றன. இவை எல்லாம் எனக்கு வேண்டாதவாறு செய்தவன் ஸ்ரீமந் நராயணன். இவன் இருக்கும் திருவிண்ணகர் முதலிய இடங்களுக்குச் சென்று, அவனிடம் என் உடலைக் காட்டி என் நிலையைக் கூறுவேன். அப்படியும் என்னை ஏற்காவிட்டால், அவன் செயங்களை ஊரறியச் சொல்லி அம்பலப்படுத்துவேன் ; மடலூர்வேன் என்றும் திருமங்கையாழ்வார் தம்மைத் தலைவி நிலையில் அமைத்துக்கொண்டு பாடுகிறார்.

பிள்ளைத் திருநறையூர் அரையர் அருளிச்செய்தது

நேரிசை வெண்பா

நறையூர் நம்பியின் அருள்தான் வேண்டும்

பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும்
நன்னுதலீர்! நம்பி நறையூரர்-மன்னுலகில்
என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில்
மன்னு மடலூர்வன் வந்து

கலி வெண்பா

உந்தியில் நான்முகனைப் படைத்து அவனைக்கொண்டு நான்மறைகளை வெளிப்படுத்தியவன் நாராயணன்

முதல் திருமொழி

2711. மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,
சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,

மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல்,
மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச,

2712. துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,
என்னும் விதானத்தின் கீழால், - இருசுடரை

மன்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும்
பன்னு திரைக்கவரி வீச, - நிலமங்கை

2713. தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்,
மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன்,

என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, - மழைக்கூந்தல்
தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்,

2714. என்னும் இவையே முலையா வடிவமைந்த,
அன்ன நடைய அணங்கே, - அடியிணையைத்

2715. தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட

பின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர்,
மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து, அம்மலர்மேல்

முன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறைதான்

சொன்னவர் கண்டதில்லை: கண்டவர் சொன்னதில்லை

2716. மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில்,
நன்னெறிமேம் பட்டன நான்கன்றே, - நான்கினிலும்

2717. பின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது, ஓர்
தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்,

என்னும் இவையே சுகர்ந்துடலம் தாம்வருந்தி,
துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், - வெஞ்சுடரோன்

2718. மன்னும் அழல்சுகர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்,
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து,

தொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லல்லால்,
இன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார்,

மோட்சத்தைக் கண்டவரைக் காட்டுங்கள்

2719. என்னவும் கேட்டறிவ தில்லை உளதென்னில்
மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,

அன்னதோர் இல்லியி னூடுபோய், - வீடென்னும்
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே,

2720. அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங்
கன்னவரைக் கற்பிப்போம் யாமே?, - அதுநிற்க,

இரண்டாந் திருமொழி

தேவர் உலகத்து இன்பம் வேண்டாம்; தெய்வ இன்ப வழியில் செல்வோம்

2721. முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற,
அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன்,
பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, - பொங்கொளிசேர்

2722. கொல்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர்,
மன்னிய சிங்கா சனத்தின்மேல், - வாணொடுங்கண்
கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து ,ஆங்

2723. கின்னளம்பூந் தென்றல் இயங்க, - மருங்கிருந்த
மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்,

2724. முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,
அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர்,

பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,
மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை,

இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,
மன்னிய மாமயில்போல் கூந்தல், - மழைத்தடங்கண்

2725. மின்னி டையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து,
மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்,
மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,
மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள்,

அன்ன நடைய அரம்பய ர்த்தம் வகைவளர்த்த
இன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, - இருவிசும்பில்

2726. மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய்,
மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்,

மன்னும் மளிவிளக்கை மாட்டி, - மழைக்கண்ணார்
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்,

2727. துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப,
அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச்,

சின்ன நறுந்தாது சூடி, - ஓர் மந்தாரம்
துன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின்

2728. மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர
இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல்

நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, - தாங்கருஞ்சீர்         
மின்னி டைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல்,

2729. பொன்னரும் பாரம் புலம்ப, - அகங்குழைந்தாங்     
இன்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார்,

2730. அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல்,
இன்னமுதம் மாந்தி யிருப்பர், - இதுவன்றே

மூன்றாந் திருமொழி

மாதர் மடலூரலாம் என்று வடமொழி கூறுகிறதே!

2731. அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால், - காமத்தின்

மன்னும் வழிமுறையே நிற்றும்நாம்  மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,

2732. மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்,
தென்னுறையில் கேட்டறிவதுண்டு-அதனை யாம்தெளியோம்

மடலூர விரும்பாதவர்கள் ரசிகர்கள் அல்லர்

2733. மன்னும் வடநெறியே வேண்டினோம்வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின்,

2734. அன்னதோர் தன்மை அறியாதார், - ஆயன்வேய்
இன்னிசை ஓசைக் கிரங்காதார், மால்விடையின்

2735. மன்னும் மணிபுலம்ப வாடாதார், - பெண்ணைமேல்
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,

2736. உன்னி யுடலுருகி நையாதார், - உம்பவர்வாய்த்
துன்னும் மதியுகுத்த தூநிலா நீணெருப்பில்,

2737. தம்முடலம் வேவத் தளராதார், - காமவேள்
மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய,

2738. பொன்னொடு வீதி புகாதார் தம் பூவணைமேல்
சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும்,

இன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும்,
பொன்னனையார் பின்னும் திருவுறுக போர்வேந்தன்

சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்

2739. தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து ,
பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு,

2740. மன்னும் வளநாடு கைவிட்டு , - மாதிரங்கள்
மின்னுருவில் விண்டோர் திரிந்து வெளிப்பட்டு

கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று,
பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா,

கொன்னவிலும் வெங்கானத் தூடு,-கொடுங்கதிரோன்
துன்னு வெயில்வறுத் த வெம்பரமேல் பஞ்சடியால்,

நான்காந் திருமொழி

2741. மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்,
அன்ன நடைய அணங்கு நடந்திலளே

2742. பின்னும் கருநெடுங்கண் செவ்வாய்ப் பிணைநோக்கின்,
மின்னனைய நுண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்

கன்னி,தன் இன்னுயிராம் காதலனைக் காணது,
தன்னுடைய முந்தோன்றல் கொண்டேகத் தாஞ்சென்று,அங்

கன்னவனை நோக்கா தழித்துரப்பி, - வாளமருள்
கல்னவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்,

2743. பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே பூங்கங்கை
முன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னாடும்

2744. கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,
தன்னிகரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை,

பன்னாக ராயன் மடப்பாவை, - பாவைதன்
மன்னிய நாணச்சம் மடமென் றிவையகல,

2745. தன்னுடைய கொங்கை முகநெரிய, - தான் அவன்றன்  
பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,தனது

2746. நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே சூழ்கடலுள்,

2747. பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,

தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும்,
கன்னியரை யில்லாத காட்சியாள், - தன்னுடைய     

2748. இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய்,
மன்னும் மணிவரைத்தோள் மாயவன், - பாவியேன்      

2749. என்னை இதுவி ளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்,
மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்,

கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ,
மன்னிய பேரின்பம் எய்தினாள் மற்றிவைதான்

2750. என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன்,
மன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா

ஐந்தாந் திருமொழி

2751. மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,
அன்ன நடைய அணங்கு நுடங்கிடைசேர்,

பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல,
தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங்

2752. கன்ன அருந்தவத்தி னூடுபோய், - ஆயிரந்தோள்
மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள

மின்னி எரிவீச மேலெடுத்த சூழ்கழற்கால்
பொன்னுலகம் ஏழும் கடந்தும்பர் மேல்சிலும்ப

மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,
தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்,

கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,
அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?

நறையூர்ப் பெருமானைக் கண்டேன்; மயங்கினேன்

2753. பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்-பாவியேற்கு
என்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின், இரும்பொழில்சூழ்

மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்,
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு,

2754. என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும்  
மன்னன் திருமர்பும் வாயும் அடியி ணையும்,

2755. பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின்           
பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்,

மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வ ளையும்,
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்,

துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப,
மன்னும் மரகதக் குன்றின் மருங்கே, - ஓர்

2756. இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,           
அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே,

மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,
முன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய்,

அன்ன திருவுருவம் நின்ற தறியாதே,
என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்,

பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு
மன்னும் மறிகடலும் ஆர்க்கும், - மதியுகுத்த            

மன்மதன் துன்புறுத்துகிறானே!

2757. இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும்.
தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ,

தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து,
மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்,

இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே,
முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து,

பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,
என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்

கன்னவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய,
கொன்னவிலும் பூங்கணைகள் கோத்தௌப் பொதவணைந்து,

2758.  தன்னுடைய தோள்கழிய வாங்கி, - தமியேன்மேல்    
என்னுடைய நெசே இலக்காக எய்கின்றான்,

என் இளமையின்பம் எம்பெருமானுக்கே உரியது

2759. பின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே,பேதையேன்             
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்,

நன்னறு வசமற் றாரானும் எய்தாமே,
மன்னும் வறு நிலத்து வாளாங் குகுத்ததுபோல்,

என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்,
மன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப்           

2760. பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி,

முன்னிருந்து மூக்கின்று,மூவாமைக் காப்பதோர்
மன்னும் மருந்தறிவி ரில்லையே மல்விடையின்

ஆறாந் திருமொழி

விடையின் மணிக்குரல் கேட்டு நான் ஏங்குகிறேன்

2761. துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால்
கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு, மாலைவாய்

2762. தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்,
இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே,

கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நொடிதாகும்,
என்னிதனைக் காக்குமா சொல்லீர்? இதுவிளைத்த

தசாவதாரம் எடுத்தவனே என்னை மயக்கியவன்                    

2763. மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் - மாமதிகோள்
முன்னம் விடுத்த முகில்வண்ணன் – காயாவின்

2764. சின்ன நறும்பூந் திகழ்வண்ணன் - வண்ணம்போல்
அன்ன கடலை மலையிட் டணைகட்டி,

மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து,
பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து

2765. தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை,ஆயிரங்கண்            
மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னுலகும்,

தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவனை
பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து,

2766. கொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, - வல்லாளன்
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீ ர்த்து,

தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, - அவனுடைய    
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த

2767. மின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை,
மின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க,

பின்னுமோர் ஏனமாய் புக்கு வளைமருப்பில்,
கொன்னவிலும் கூர்சுதிமேல் வைத்தெடுத்த கூத்தனை,

மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்

தன்னின் உடனே சுழல மலைதிரித்து,ஆங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய

2768. மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை மற்றன்றியும்,               
தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர்,

மன்னும் குறளுருவின் மாணியாய், - மாவலிதன்
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர்

2769. மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,
என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்,

2770.மன்னா தரு கென்று வாய்திறப்ப, - மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண்

ஏழாந் திருமொழி

2771. மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த
பொன்னார் கனைகழற் கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங்

கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து,

மண்ணுலகில் மாயவன் தரும் காட்சிகள்

2772. தன்னுலகம் ஆக்குவித்த தாளானை, தாமரைமேல்  
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை,

பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை,
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,

2773. மன்னிய தண்சேறை வள்ளலை, - மாமலர்மேல்        
அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி,

என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை,
கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,

மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்
பொன்னை, மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை,

2774. மன்னும் அரங்கத்தெம் மாமணியை, -வல்லவாழ்
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை,

தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,
என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை,

2775. மன்னும் கடன்மல்லை மாயவனை, - வானவர்தம்       
சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை,

தன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை,
அன்னத்தை மீனை அரியை அருமறையை,

2776. முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியுயை, - கோவலூர்        
மன்னும் இடைகழியெம் மாயவனை, பேயலறப்,

பின்னும் முலையுண்ட பிள்ளையை, - அள்ளல்வாய்     
அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை,

2777. தெந்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை,            
மின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை,

2778. மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை,
கொன்னவிலும் ஆழிப் படையானை, - கோட்டியூர்     

2779. அன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை,

மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை,
மன்னிய பாடகத்தெம் மைந்தனை, - வெஃகாவில்,       

2780. உன்னிய யோகத் துறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை,

என்னை மனங் கவர்ந்த ஈசனை, - வானவர்தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை,

எட்டாந் திருமொழி

எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்

2781. அன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை,
நென்னலை யின்றினை நாளையை, - நீர்மலைமேல்    

2782. மன்னும் மறைநான்கும் ஆனானை, புல்லாணித்
தென்னன் தமிழி வடமொழியை, நாங்கூரில்         

2783. மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,
நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை, - நான்வணங்கும்

2784. கண்ணனைக் கண்ண புரத்தானை, தென்னறையூர்
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,

கன்னவில்தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை யெல்லாம் அறிவித் தால் எம்பெருமான்,

2785. தன்னருளும் ஆகமும் தாரானேல், - தன்னைநான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்,

தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்,
கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்

2786. தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன் தான்முனநாள்
மின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரிக் களவிங்கண்,

துன்னு படல்திறந்து புக்கு, - தயிர்வெண்ணெய்         
தன்வயி றார விழுங்க, கொழுங்கயல்கண்       

2787. மன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றல்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,

அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,

முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்..
மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்,

தன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும்,
மன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப,

கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி,
என்னிவ னென்னப் படுகின்ற ஈடறவும்

தென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை,
மன்னன் இராவணன்றன் நல்தங்கை, - வாளெயிற்றுத்

2788. துன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி,
பொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால்,

தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து,
மன்னிய திண்ணெனவும் வாய்த்த மலைபோலும்,

2789. தன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காகத் 
தென்னுலகம் ஏற்றுவித்த திண்டிறலும் –மற்றிவைதான்   

2790. உன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான்,
முன்னி முளைத்தெழுந்தோங்கி யொளிபரந்த,
மன்னியம்பூம் பெண்ணை மடல்.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

நேரிசை வெண்பா

(இது கம்பர் பாடியது என்பர்)

உலகறிய மடலூர்வேன்

என்னிலைமை யெல்லா மறிவித்தா லெம்பெருமான்,
தன்னருளும் ஆகமும் தாரானேல்-பின்னைப்பேய்
ஒண்டுறைநீர் வேலை யுலகறிய வூர்வன்நான்
வண்டறைபூம் பெண்ணை மடல்

மண்ணிற் பொடிப்பூசி வண்டிரைக்கும் பூச்சூடி
பெண்ணை மடல்பிடித்துப் பின்பின்னே-அண்ணல்
திருநறையூர் நின்றபிரான் தேர்போகும் வீதி
பொருமறையாச் செல்வம் பொலிந்து

இயற்பா சம்பூர்ணம்.

 
மேலும் மூன்றாவதாயிரம் »
temple news
பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி இயற்பா: பொய்கையாழ்வார் காஞ்சீபுரத்தில், ஒரு ... மேலும்
 
temple news
நம்மாழ்வார் அருளிச்செய்த ருக்வேத ஸாரமான திருவிருத்தம் நம்மாழ்வார் தமது அன்பு மிகுதியை எம்பெருமான் ... மேலும்
 
temple news
இராமானுச நூற்றந்தாதித் தனியன்கள் வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை நேரிசை வெண்பா அமுதனார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar