“மாங்கல்ய தந்துனானேன” என்ற மந்திரம் சொல்லி திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது. “தந்து” என்றாலும் “ஸூத்ரம்” என்றாலும் மஞ்சள் கயிறை குறிக்கும். “மாங்கல்ய சூத்திரம்” என்பதற்கு “தாலிக்கயிறு” என்பது பொருள். தங்க சங்கிலியில் அணிவதால் தவறில்லை. அதனுடன் மஞ்சள் கயிறும் சேர்ந்தால் மங்களகரமாக இருக்கும்.