இப்படித்தான் வாழ்க்கை அமையும் என்பது ஒருவர் செய்த பாவ, புண்ணிய அடிப்படையில் நிர்ணயிக்கபடுகிறது. இதை "விதி என்கிறோம். தெய்வத்தால் எழுதப்பட்ட சட்டம் விதி. இதை வெல்வது கடினம் என்றாலும், நம்பிக்கையுடன் வழிபட்டால், வெல்ல வாய்ப்புண்டு. வழிபாட்டிற்கும், மதிக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கலாம். மதி என்பது "அறிவு. நாம் சிந்திப்பது, செயல்படுவது எல்லாவற்றிற்கும் காரணம் அறிவு தானே! அந்த அறிவே விதியை வெல்ல செயல்பட வேண்டும். விதியை மாற்ற திட்டம் தீட்டுவதற்கு அறிவுக்கு கூடுதல் பலம் தேவை. இதை இறையருளால் மட்டுமே பெற முடியும். நம் அறிவில் நின்று இறைவன் வழிகாட்ட, விதியால் ஏற்படும் துன்பம் அனைத்துமே சூரியனை கண்ட பனியாக மறையும். இதற்கு நம்பிக்கையுடன் வழிபடுவது அவசியம். இதையே விதியை மதியால் வெல்வது என்கிறோம். மழை பெய்வது விதி என்றால், நனையாமல் இருக்க குடைபிடிப்பது மதி.