Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அகத்தியர் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் ... சுவாமிக்கு பிரசாதம் படைப்பதன் நோக்கம் என்ன? சுவாமிக்கு பிரசாதம் படைப்பதன் ...
முதல் பக்கம் » துளிகள்
மீனாட்சி பஞ்சரத்தினம்
எழுத்தின் அளவு:
மீனாட்சி பஞ்சரத்தினம்

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
04:02

உத்யத்பானு சஹஸ்ரகோடி சத்ருசாம் கேயூர ஹாரோஸ்வலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்த பங்க்தி ருசிராம் பீதாம்பராலங்க்ருதாம்
விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

உத்யத்பானு சஹஸ்ரகோடி சத்ருசாம் - ஆயிரம் கோடி உதயசூரியனின் ஒளிக்கு ஈடான ஒளியை உடையவளும், கேயூர ஹாரோஸ்வலாம் - வளையல்கள், மாலைகள் போன்ற அணிகளால் ஒளிவீசுபவளும் பிம்போஷ்டீம் - கோவைப்பழங்கள் போன்ற இதழ்களை உடையவளும் ஸ்மித தங்க்த பங்க்தி ருசிராம் - புன்னகை புரியும் பல்வரிசைகள் உடையவளும் பீதாம்பராலங்க்ருதாம் - பொன் பட்டாடைகளால் அழகு பெற்றவளும் விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் - திருமால், பிரமன், தேவர் தலைவன் போன்றவர்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும் தத்வ ஸ்வரூபாம் - உண்மைப் பொருளானவளும் சிவாம் - மங்கள வடிவானவளும் காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும் நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

முக்தாஹார லஸத் கிரீடருசிராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம்
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமா ஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

முக்தாஹார லஸத் கிரீடருசிராம் - முத்துமாலைகளால் சூழப்பட்ட ஒளிவீசும் மௌலியை (மகுடத்தை) உடையவளும் பூர்ண இந்து வக்த்ர ப்ரபாம் - ஒளி வீசும் முழுமதியைப் போன்ற திருமுகத்தை உடையவளும், சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் - கிண் கிண் என்று ஒலி செய்யும் மாணிக்க சிலம்புகளை அணிந்தவளும், பத்மப்ரபா பாஸுராம் - தாமரை போல் அழகு பொருந்தியவளும், ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் - அடியவர்களின் ஆசைகள் அனைத்தையும் அருளுபவளும், கிரிஸுதாம் - மலைமகளும், வாணீ ரமா ஸேவிதாம் - கலைமகளாலும் அலைமகளாலும் வணங்கப்பட்டவளும், காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும், நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீவித்யாம் சிவவாமபாகநிலயாம் ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் ஸ்ரீமத் சபாநாயகீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

ஸ்ரீவித்யாம் - மறைகல்வி வடிவானவளும், சிவவாமபாகநிலயாம் - சிவபெருமானின் இடப்பாகத்தில் வசிப்பவளும், ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம் - ஹ்ரீம் என்ற வித்தெழுத்து மந்திரத்தில் (பீஜாக்ஷர மந்திரம்) ஒளி வீசி இருப்பவளும், ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் - ஸ்ரீசக்ரத்தின் நடுவட்டத்தில் வசிப்பவளும், ஸ்ரீமத் சபாநாயகீம் - சுந்தரேசுவரனின் சபைக்குத் தலைவியும், ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் - ஆறுமுகனான முருகனையும் தடைகளை நீக்கும் விநாயகனையும் பெற்றவளும், ஸ்ரீமத் ஜகன்மோஹினீம் - உலகங்களை மயக்குபவளும், காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும், நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் பயஹராம் ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாசனார்ச்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்
வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் நானாவிதாமம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் - சுந்தரேசருடைய நாயகியும், பயஹராம் - அடியவர்களுடைய பயத்தை நீக்குபவளும், ஞானப்ரதாம் - அடியவர்களுக்கு பேரறிவை (ஞானத்தை) நல்குபவளும், நிர்மலாம் - குறையொன்றும் இல்லாதவளும், ச்யாமாபாம் - கருநீல நிறம் கொண்டவளும், கமலாசன அர்ச்சித பதாம் - தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனால் அருச்சிக்கப்பட்ட திருவடிகளை உடையவளும், நாராயணஸ்ய அனுஜாம் - நாராயணனுடைய தங்கையும், வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் - யாழ், குழல், மிருதங்கம் முதலியவற்றின் இசையை இரசிப்பவளும், நானாவிதாம் அம்பிகாம் - பல்விதமான உயிர்களுக்கு அன்னையும் காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும் நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

நாநா யோகி முநீந்த்ர ஹ்ருந் நிவஸதீம் நாநார்த்த சித்திப்ரதாம்
நாநா புஷ்ப விராஜிதாங்க்ரியுகளாம் நாராயணேனார்ச்சிதாம்
நாதப்ரஹ்மமயீம் பராத்பரதராம் நாநார்த்த தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

நாநா யோகி முநீந்த்ர ஹ்ருந் நிவஸதீம் - சிறந்த யோகிகள், முனிவர்கள் போன்றவர்களின் இதயத்தில் என்றும் வசிப்பவளும், நாநார்த்த சித்திப்ரதாம் - வேண்டும் அனைத்துப் பொருட்களையும் தருபவளும், நாநா புஷ்ப விராஜித அங்க்ரியுகளாம் - எல்லாவிதமான பூக்களாலும் அழகு பெற்ற திருவடிகளை உடையவளும், நாராயணேன அர்ச்சிதாம் - நாராயணனாலும் அருச்சிக்கப்பட்டவளும், நாதப்ரஹ்மமயீம் - நாதபிரம்ம உருவானவளும், பராத்பரதராம் - உயர்ந்ததிலும் உயர்வானவளும், நாநார்த்த தத்வாத்மிகாம் - அனைத்துப் பொருட்களிலும் உள்நின்று இயக்குபவளும், காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும், நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

அகத்தியர் அருளிய ‘ஆதித்ய ஹ்ருதயம்’ தமிழில்!

தினமும் சூரியோதய வேளையில் அகத்தியர் அருளிய ‘ஆதித்ய ஹ்ருதயம்’ சொல்வது மிகுந்த நன்மை தரும்.

* அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்திருக்கிறாய். உலக ஜீவன்கள் தங்கள் செயல்களை செய்யும்படியான பலத்தை கொடுக்கிறாய். எவ்வித எதிர்பார்ப்புமின்றி உலகிற்கு ஒளி கொடுப்பதற்காக ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.

* தங்க நிறமானவனே! நீ அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ணமயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலைப் படைக்கிறாய்.

* கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே!‘சப்த’ என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசேஷ பிரகாசம் உள்ளவனே! இருட்டை நாசம் செய்கிறவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் எங்களுக்கு கிடைக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் நீயே அழிக்கிறாய்.

* சூரியனே! ஆகாயத்திற்கு நீயே நாதன். ராகு என்னும் இருளைப் பிளந்து கொண்டு வெளியில் வரும்படியான சக்தியைக் கொண்டிருக்கிறாய். ரிக், யஜூர், சாமம் என்ற வேதங்களின் முடிவைக் கண்டவனாய் இருக்கிறாய்.

* கண்கண்ட தெய்வமே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன். தட்சிணாயண காலத்தில் விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.

*வட்ட வடிவத்தை உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயமாகும் போது மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா வஸ்துகளையும் தகிக்கச் செய்கிறவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே! மகத்தான ஒளியை உடையவனே! எல்லாப் பிராணிகளிடமும் அன்பூகொண்டவனே! அந்தப் பிராணிகளை அழிப்பவனே! நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே! பிரபஞ்சத்தை நிறைபெறச் செய்கிறவனே! எல்லா தேவதை களைக் காட்டிலும் அதிகமான சக்தியை உடையவனே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா. அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற 12 மூர்த்திகளை உள்ளடக்கியவனே! உனக்கு நமஸ்காரம்.

* உருகியோடும் தங்க ஆறு போன்ற பிரகாசம் கொண்டவனே! அக்னியின் வடிவே! சகல உலகமும் தோன்றக் காரணமானவனே! அஞ்ஞானம் என்ற இருளை போக்குபவனே! கருணாமூர்த்தியே! உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.

* உலகம் அழியும் காலத்தில் இந்த ஜகத்தை நீயே அழிக்கிறாய். மீண்டும் நீயே அதை சிருஷ்டிக்கிறாய். ஜலத்தை வற்றச் செய்கிறாய். உலகையே எரிக்கிறாய். மழை பெய்யச் செய்கிறாய். எல்லா உயிர்களும் அழித்து அடங்கியிருக்கும் போது நீ மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறாய். சர்வாத்மாவே! சர்வேஸ்வரனே! வேதங்களால் கூட உன்னை அறியமுடியாது. ஆதித்யனே! வேத விற்பன்னர்கள் செய்யும் யாகமாகவும், அதன் பலனாகவும் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம் !!

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar