மாரி என்றால் மழை. மாரியம்மனுக்கு கூழ் வார்த்தால் நாடு செழிக்க மழை தருவாள். யாரு கடன் இருந்தாலும் மாரிகடன் ஆகாது என்று அவளுக்குரிய நேர்த்திக் கடனை உடனடியாக செலுத்தும் வழக்கம் உண்டு. காவல் தெய்வமான காளியின் தங்கை என்றும் சொல்வர். உஷ்ணத்தால் உண்டாகும் அம்மை நோய் நீங்க மாரியம்மன் கோயில் தீர்த்தம் பருகுவர்.