துளசிதாசர் அவதி மொழியில் ராமாயணத்தை எழுதி முடித்தார். அதற்கு ராம சரித மானஸ் என பெயரிட்டிருந்தார். நூலை, அரங்கேற்ற காசியிலுள்ள பண்டிதர்களின் உதவியை நாடினார். பேச்சு வழக்கிலுள்ள அவதி மொழியில் எழுதியதை காரணம் காட்டிய அவர்கள், அரங்கேற்றம் செய்ய தடை விதித்தனர். அதன் பின் காசி விஸ்வநாதர் கோயில் பண்டாக்களிடம் ராமாயண சுவடியை கொடுத்த துளசிதாசர், கண் கண்ட தெய்வமான விஸ்வநாதர் முன்னிலையில் இந்த சுவடிகளை நான் ஒப்படைக்கிறேன். தெய்வ சம்மதம் கிடைத்தால் எனது ராமாயணம் அரங்கேறட்டும். இல்லாவிட்டால் முயற்சியை கைவிடுகிறேன்” என்றார். அன்றிரவு ராமாயண சுவடி, விஸ்வநாதர் முன்னிலையில் வைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது. மறுநாள் காலையில் நடை திறந்தபோது, நூல் அரங்கேற்றத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் விதத்தில் சுவடி மீது சத்தியம் சிவம் சுந்தரம் குறிப்பு இடம் பெற்றிருந்தது. இதை அறிந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.