பிதுர் எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், அவர்களால் முற்காலங்களில் ஏற்பட்ட சாபம் ஆகியவை நீங்க நரசிம்ம பூஜை உகந்தது. தெய்வங்களை நிந்திப்பது, ஒற்றுமையாக இருந்த குடும்பங்களைக் கோள் சொல்லிப் பிரிப்பது, வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது போன்ற பாவங்களினால் பெரும் துன்பங்களை அனுபவிப்பவர்களும் உண்டு.
இவர்களுக்கு எளிய சாபநிவர்த்தி முறை இருக்கிறது. லட்சுமி நரசிம்மர் படம் வைத்து, பால் அல்லது பானகம் வைத்து காலை அல்லது மாலையில் நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும். சக்திவாய்ந்த இந்த ஸ்லோகத்தை அகோபில மடம் 44 வது பட்டம் அழகிய சிங்கரும், ஸ்ரீரங்கம் கோபுரத்தை நிர்மாணித்தவருமான முக்கூர் ஸ்வாமிகள் அருளியதாகும். 1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ: 2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே:சமஸ்கிருதம் படிக்க முடியாதவர்கள், இதன் தமிழாக்கத்தைச் சொல்லலாம்.
1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை 2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே 3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே 4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே 5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே 6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே 7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை. 8. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்.