பதிவு செய்த நாள்
07
ஏப்
2018
05:04
புத்தாண்டு முதல் நாளில் விஷுக்கனி காண்பது மரபு. புத்தாண்டு காலையில், பூஜையறையில் சுவாமி படங்களுக்கு மாலை அணிவிக்க வேண்டும். கோலமிட்ட பெரிய பலகை அல்லது மேஜையில் கண்ணாடி வைத்து, இருபுறமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். ஒரு தாம்பாளத்தில் பூ, பழம், வெற்றிலை, பாக்கு, கிண்ணங்களில் அரிசி, பருப்பு, தங்க, வெள்ளிக்காசுகள், நகைகள், புது பஞ்சாங்கம் வைக்க வேண்டும். செவ்வாழை, நாட்டுப்பழம், நேந்திர வாழை, மா, பலா, வெள்ளரிப்பழம், கொன்றைப்பூக்கள் அல்லது மஞ்சள்நிற செவ்வந்தி, தென்னம்பூ கொத்து வைக்க வேண்டும். இதை "விஷுக்கனி தரிசனம் என்பர்.