பரம்பொருளாகிய சிவபெருமான் 64 திருவிளையாடல் நிகழ்த்திய தலம் மதுரை. இது ""பூலோக சிவலோகம் எனஅழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் பெருமை பெற்ற தலம் இது. சிவத்தலங்களில் காசி, காளஹஸ்தி, சிதம்பரம், மதுரை ஆகிய நான்கும் சிறந்தவை. காசியில் இறந்தாலும், காளஹஸ்தியில் சிவபூஜை செய்தாலும், சிதம்பரத்தில் தரிசித்தாலும், மதுரையில் வாழ்ந்தாலும் மோட்சம் கிடைக்கும்.